மாமன்னர் மருதுபாண்டியர்களின் 222வது நினைவு நாள் வெண்கல சிலைக்கு மாலை அணிவித்து மலர்தூவி வீரவணக்கம்

சென்னை மாவட்ட மாமன்னர் மருது பாண்டியர் மற்றும் அகமுடையார் சங்கங்களின் கூட்டமைப்பு சார்பாக, Lion Dr. A.V. குமரேசன் தலைமையில், M.sivagangai கௌரிசங்கர் முன்னிலை வகிக்க, Lion A.சரவணன் R.முத்துகுமார் முயற்சியில் சித்திரை குமார் ஆகியோர் சென்னை கிண்டி காந்தி மண்டபத்தில் நிறுவப்பட்டுள்ள மாமன்னர் மருது பாண்டியர்களின் முழு உருவ வெண்கல சிலைக்கு மாலை அணிவித்து மலர் தூவி வீர முழக்கத்துடன் வீரவணக்கம் செலுத்தினார்கள்.

இந்நிகழ்வில் எக்மோர் மாதவரம் வியாசர்பாடி செங்குன்றம் எண்ணூர் , சின்னாண்டிமடம்,வடசேரி , TAMS , பழனி அகமுடையார் சங்கம், முக்குலோதோர் பேரவை, முக்குலத்தோர் சங்கம் பெரம்பூர், மற்றும் பல பகுதிகளிலிருந்து சுமார் ஆயிரத்துக்கும் மேற்பட்ட ஆண்கள் பெண்கள் மற்றும் குழந்தைகள் என பெரும் திரளான மக்கள் பேரணியாக ஐம்பதுக்கும் மேற்பட்ட வாகனங்களில் அணிவகுப்புடன் வருகை தந்து நிகழ்வில் கலந்து கொண்டு சிறப்பித்தனர். நிகழ்விடத்தில் கண்கவர் வீர விளையாட்டு கலை நிகழ்ச்சிகள் நடைபெற்றது மேலும் நிகழ்வில் கலந்து கொண்ட அனைவருக்கும் அன்னதானம் வழங்கப்பட்டது. பின்பு பத்திரிக்கையாளர்களிடம் கூட்டாக பேசியது ஆங்கிலேயர்களை எதிர்த்து விடுதலைப் போராட்டத்தில் தங்களை முன்னிலைப்படுத்திக்கொண்ட மருது சகோதரர்கள் தூக்கிலிடப்பட்டார்கள். இன்றைய நாள் அவர்களுடைய புகழை போற்றுகின்ற வகையில் தமிழக முதல்வர் கடந்த பிப்ரவரி மாதம் 14ஆம் தேதி சென்னை காந்தி மண்டபத்தில் மருது சகோதரர்களுக்கு திருவுருவ சிலை அமைக்கப்பட்டு முதல்வர் திறந்து வைத்தார். இதனை தொடர்ந்து கலைஞர் வழியில் நடைபெற்று வரும் தமிழ்நாடு முதலமைச்சர் ஆட்சியில் தொடர்ந்து விடுதலைப் போராட்ட வீரர்களுக்கு மரியாதை செய்கின்ற வகையிலும் திருவுருவ சிலையும் நினைவிடங்களும் புதிதாக அமைக்கப்பட்டதோடு ஏற்கனவே இருக்கக்கூடிய திருவுருவ சிலைகளும், பராமரிக்கப்பட்டு வருகிறது. தொடர்ந்து இந்த மண்ணின் விடுதலைக்காக தங்களை ஈடுபடுத்திக் கொண்ட சுதந்திர போராட்ட வீரர்கள் தமிழுக்கும் தமிழ்நாட்டிற்கும் வந்த ஆபத்தை தடுத்து நிறுத்துகிற வகையில், தங்களை மாய்த்துக்கொண்டு தியாகம் செய்த தமிழ் அறிஞர்களுக்கும், தியாகிகளுக்கும் மரியாதை செய்யக்கூடிய அரசு எனவும். மக்களுக்காக பணியாற்றிய மக்களுடைய அன்பை பெற்ற முன்னாள் முதலமைச்சர் கலைஞர் அவர்களுடைய அரசு தொடர்ந்து பணியாற்றி கொண்டிருக்கிறது. மருது சகோதரர்கள் இராட்டையர்களாக போர் வித்தைகளில் தேர்ச்சி பெற்றவர்கள் , வளரி என்னும் போர் பயிற்சியை பயன்படுத்தி எதிரியை தாக்கிவிட்டு எய்தவர்களிடமே மீண்டும் திரும்ப வரும் பயிற்சியில் தேர்ச்சி பெற்று அவர்களது எதிரிகளுக்கு சிம்ம சொப்பனமான மருது பாண்டியர்களை ஆங்கிலேய கொடுங்கோளர்கள் துக்கில் இட்டார்கள் , அவர்களது புகழ் என்றைக்கும் இந்த மண்ணும் மக்களும் இருக்கும் வரை நீங்காது என்பது நிச்சயம் .மருது பாண்டியர்களுக்கு சிலை வைத்த தமிழக முதல்வருக்கு நாங்கள் பாராட்டு விழா எடுக்க உள்ளோம் எனவும் கூறினார்கள்..

About admin

Check Also

Provoke Art Festival 2024: Where Elegance Met Art Chennai’s Biggest Art Festival Returned for Its Second Year

Provoke Art Festival 2024, presented by Orangewood, held on November 2nd 2024 at Music Academy, …

istanbul evden eve nakliyat eşya depolama evden eve nakliyat