தனிஷ்க்-கின் மிஆ வழங்கும் “ஸ்டார்பர்ஸ்ட்” நகைத்தொகுப்பு: தீபாவளியை ஒட்டி பிரபஞ்ச ஒளித்தன்மை கொண்ட நகை வடிவமைப்புகள் வெளியீடு!

சென்னை, அக்டோபர் 2023: தீபங்களின் பண்டிகையானதீபாவளி நெருங்கி வரும் நிலையில், தனிஷ்க்கின் மிஆபிராண்ட், நகைகளில் பிரபஞ்சத்தின் உத்வேகம் கொண்ட’ஸ்டார்பர்ஸ்ட்’ நகைத் தொகுப்பை அறிமுகப்படுத்துகிறது.சூரியன், சந்திரன், நட்சத்திரங்கள், கோள்கள் ஆகியவற்றின்சாராம்சத்தைப் பதிவு செய்யும் இந்த நகைத் தொகுப்பு,தீபாவளிப் பண்டிகையின் உற்சாக உணர்வைப் பிரதிபலிக்கிறது.ரூ. 2999/- முதல் விலைகள் ஆரம்பமாகும் ‘ஸ்டார்பர்ஸ்ட்’நகைகள், ஒவ்வொரு பெண்ணின் தனித்துவத்தையும்பிரதிபலிக்கும் வகையில் அமையும். அதை உறுதி செய்யும்வகையில் பல்வேறு வரம்புகளை இந்த நகைத் தொகுப்புவழங்குகிறது. இந்த தீபாவளியின்போது, கொண்டாட்டங்களைமேலும் ஒளிரச் செய்யும் வகையில் ஒரு வழிகாட்டும்நட்சத்திரமாக ‘ஸ்டார்பர்ஸ்ட்’ நகைத் தொகுப்பு அமையும்.

அழகிய 14 காரட் தங்கத்தில் வடிவமைக்கப்பட்ட ‘ஸ்டார்பர்ஸ்ட்’ஒவ்வொரு பெண்ணும் பிரபஞ்சத்தின் ஒரு பகுதியை தனக்குள்சுமக்கிறார் என்ற ஒரு பிரகாசமான உணர்வை வழங்குகிறது.சூரியன், சந்திரன் மற்றும் நட்சத்திரங்களிலிருந்து உத்வேகம்பெற்று, பிரபஞ்சத்தின் ஒவ்வொரு சிக்கலான அம்சத்தையும்உயிர்ப்பித்துப் பிரதிபலிக்கும் வகையில் இந்த நகைத் தொகுப்புஉள்ளது. இவற்றின் ஒவ்வொரு பகுதியும் மிகச் சிறந்தகலைப்படைப்பாகும். இது பிரபஞ்ச அம்சத்தின் உருவங்களால்ஈர்க்கப்பட்ட சங்கிலி, இரவு வானத்தின் அழகை பிரதிபலிக்கும்ஒரு உண்மையான தலைசிறந்த வடிவமைப்பு உள்ளிட்ட பல்வேறுசிறப்பம்சங்களை இது கொண்டுள்ளது.

கூடுதலாக, இந்த தொகுப்பு காலத்தால் அழியாத சந்த் பாலிகாதணிகளின் நவீனமயமாக்கப்பட்ட பதிப்பைஅறிமுகப்படுத்துகிறது. இது ஒரு பாரம்பரிய பழைமைத்தன்மையுடன் தற்கால வடிவத்தை வழங்குகிறது. கம்பீரத்தைவெளிப்படுத்தும் நீல மாணிக்க கைப் பட்டை அணிகலன்கள்(வளையல்) முதல் தனித்துவமான தோடுகள் வரை, ஒவ்வொருநகையும் ஒரு கம்பீரமான தாக்கத்தை ஏற்படுத்துகிறது. ‘ஸ்டார்பர்ஸ்ட்’ தொகுப்பில் நவீன கை அலங்கார நகைகள்(ஹாத்பூல்) மற்றும் மோதிரங்கள் போன்ற கை நகைகள்உள்ளன. சந்திரன் மற்றும் நட்சத்திர அமைப்புகள் போன்றஅம்சங்களில் பதிக்கப்பட்ட வைரங்கள் மற்றும் சூரியன்-சந்திரன்என இவை இரண்டையும் பிரதிபலிக்கும் இரட்டைத்தன்மையைக்குறிக்கும் நகைககள் ஆகியவையும் உள்ளன. பண்டிகைக்காலத்தின் ஒளிமயமான பிரச்சாரத்தின் போது ஸ்டார்பர்ஸ்ட்தொகுப்பை அறிமுகப்படுத்துவதன் மூலம், மிஆ ஒவ்வொருவாடிக்கையாளருக்கும் அவர்களின் பிரபஞ்ச மற்றும் நட்சத்திரதிறனை நினைவூட்டுகிறது. அத்துடன் துடிப்பான, பெரிய நகைவடிவமைப்புகளில் வானம் மற்றும் பிரபஞ்ச கருப்பொருள்களைபொதித்துள்ளது. காலத்தால் அழியாத மற்றும் கண்கவர்நகைகளை அனுபவிப்பதை இது நோக்கமாகக் கொண்டுள்ளது,இது தீபாவளிப் பரிசுகளுக்கும் சொந்த உபயோகத்திற்கும்ஏற்றது.

தனிஷ்க் நிறுவனத்தின் மிஆ பிராண்ட் பிரிவின் வணிகப் பிரிவுத்தலைவர் ஷியாமளா ரமணன் (Ms. ShyamalaRamanan, Business Head,Mia by Tanishq) இது குறித்துப்பேசுகையில், “நாம் ஒவ்வொருவரும் பிரபஞ்சத்தைப் போலஎல்லையற்ற ஆற்றலைக் கொண்டுள்ளோம். மிஆ-வின்’ஸ்டார்பர்ஸ்ட்’ நகைத் தொகுப்பு உங்களுக்குள் இருக்கும் இந்தபிரபஞ்ச அழகிற்கான மரியாதையாக அமைகிறது. அத்துடன்நீங்கள் உண்மையில் நட்சத்திர ஜொலிப்புகளால் ஆனவர்என்பதை நினைவூட்டும் விதமாகவும் இது உள்ளது.

200-க்கும் மேற்பட்ட வடிவமைப்புகளுடன், சிறிய ஸ்டட்கள்(சிறிய அணிகலன்) முதல் ஸ்டேட்மெண்ட் டாங்கிள்கள் (தோடுஅணிகலன்) வரை, ஃப்யூஷன் ஆடைகளுக்கான நவீனவடிவங்கள் முதல் தற்கால சந்த்பாலிகள் வரை, ஸ்டார்பர்ஸ்ட்தொகுப்பில் அனைவருக்குமான நகைகள் உள்ளன. இந்தவடிவமைப்பு அம்சங்கள் நவரத்தினங்கள், நட்சத்திரங்கள்போன்ற பாரம்பரிய வடிவங்கள் தனித்துவமான, வித்தியாசமானமற்றும் மிகவும் தொடர்புடைய முறையில்வடிவமைக்கப்பட்டுள்ளன. இவை பயன்பாட்டின்போதுபன்முகத்தன்மையை அதிகரிக்கும். சங்கிலிப் பதக்கங்கள்,தோடுகள், காதணிகள், விரல் மோதிரங்கள், வளையல்கள்,நெக்லஸ், என இவை அனைத்தையும் இணைத்து வாங்கினாலும்அல்லது தனித்து வாங்கி அணிய விரும்பினாலும் அனைவருக்கும்இந்தத் தொகுப்பில் ஏதோ ஒன்று உள்ளது. ரூ. 3000 முதல் ரூ. 70,000 வரையிலான விலையில் உள்ள நகைகள் இதில்உள்ளன. அன்புக்குரியவர்களுக்கு ஒரு சிறந்த விலைமதிப்பற்றமற்றும் மறக்க முடியாத பரிசாக இது அமைகிறது. நம்மைத்தொட்டிலில் போட்டுத் தாலாட்டுவது போன்ற பிரபஞ்சத்தைப்போல உள்ள எங்களது குறைந்த வடிவமைப்பைக் கொண்டகழுத்துச் சங்கிலிகளை (நெக்பீஸ்) ஒரு முறை பாருங்கள்.”என்றார்.

கொண்டாட்டங்களின் காலம் நமக்குத் தொடங்கியவுடன், மிஆ-வின் பண்டிகைத் தொகுப்புடன் உங்கள் அன்புக்குரியவர்களைஆச்சரியப்படுத்துங்கள். இந்தத் தருணத்தை சரியான முறையில்பயன்படுத்துங்கள். மனதை உருக்கும் நினைவுகளை இணைந்துஉருவாக்குங்கள். பண்டிகைக் காலம் முழுவதும், ‘ஸ்டார்பர்ஸ்ட்’இன்றைய பகுத்தறியும் ஃபேஷனிஸ்டுகளுக்கு ஊக்கமளிக்கும்.பாரம்பரிய விழாக்கள், நடன இரவுகள், விருந்துகள் அல்லதுஅன்றாட அலங்காரத்திற்கு ஒரு சிறந்த தன்மையை இந்தநகைத் தொகுப்பு உருவாக்கி அழகு மற்றும் அற்புதத்தைக்கொண்டு வரும்.

ரூ.2999/- என்ற விலையில் தொடங்கும் ஸ்டார்பர்ஸ்ட் நகைத்தொகுப்பின் நகைகள், காதணிகள் (தோடுகள்), சங்கிலிப்பதக்கங்கள் மற்றும் நெக்பீஸ்கள் போன்ற பல அம்சங்களைக்கொண்டுள்ளது. இந்த தொகுப்பு அனைத்து மிஆ விற்பனைநிலையங்களிலும் மற்றும் https://www.miabytanishq.com/என்ற இணையதளத்திலும் கிடைக்கிறது.

About admin

Check Also

KYNHOOD APPOINTS LAVINA RODRIGUESAS ASSISTANT VICE PRESIDENT – BRAND COMMUNICATIONS

Chennai, February 20th, 2025: KYN, (Know Your Neighbourhood), a leading neighbourhood discovery and connectivity app, by KYNHOOD technologies has appointed …

istanbul evden eve nakliyat eşya depolama evden eve nakliyat