சென்னை:
அறுபதுகளில் நாடகத்துறையில் புகழ்பெற்று பல சமூக சேவைகள் புரிந்து வந்த திரு.டி.எஸ்.இராமகிருஷ்ணன் டி.எஸ்.ஆர் என்று அழைக்கப் பெற்றவரின் பேத்தி தான் சஹானா. இவரது பரதநாட்டிய நடன அரங்கேற்றம் சென்னையில் இன்று விமர்சையாக நடைபெற்றது. நடனகுரு.ரேவதி ராமச்சந்திரன் மற்றும் குரு. மனஸ்வினி யின் மாணவியான சஹானா தனது ஒன்பது வயது முதல் பரதம் கற்று பல நிகழ்ச்சியில் பங்கேற்று வருகிறார். இவர் ஜெயின் கல்லூரியில் B.Com இறுதி ஆண்டு படித்து வருகிறார். சஹானா சாதனை இளஞ்சுடர் உற்பட பல விருதுகள் பெற்றவர். பல போட்டிகளில் பங்குபெற்று வெற்றி பெற்றுள்ள சஹானாவின் தந்தை கணேஷ்கிருஷ்ணன் ஒரு நடன கலைஞர் ஆவார். தனது மகள் கலைத்துறையில் மூன்றாவது தலைமுறையாக கால் பதித்திருப்பது மிக்க மகிழ்ச்சி அளிக்கிறது என பெற்றோர்கள் மகிழ்ச்சியுடன் தெரிவித்தனர். நிகழ்ச்சியில் முக்கிய பிரமுகர்கள், நடன கலை குருக்கள், மாணவியின் பள்ளி ஆசிரியர்கள், நண்பர்கள், கல்லூரி ஆசிரியர்கள், தோழிகள் என பலர் கலந்து கொண்டனர். மூன்றாவது தலைமுறையாக கால் பதிக்கும் சஹானாவின் கலைப்பயணம் தொடர்ந்து வெற்றி பெற அனைவரும் வாழ்த்தினர்.
மாணவி சஹானா கூறுகையில்:
எனது தாய் தந்தைக்கும், குருக்களுக்கும், ஆசிரியர்களுக்கும் முதலில் என் மனமார்ந்த நன்றியை தெரிவித்து கொள்கிறேன். தொடர்ந்து என் கலை பயணம் தொடரும் என மாணவி மகிழ்ச்சியுடன் தெரிவித்தார்.