அஞ்சி பாய் ஹேம்ராஜ் கட்டார்யா சாரிட்டபிள் டிரஸ்ட் சார்பில் 74வது குடியரசு தின விழாவை முன்னிட்டு ஐம்பெரும் விழா !

பெரம்பூர்:அஞ்சி பாய் ஹேம்ராஜ் கட்டார்யா சாரிட்டபிள் டிரஸ்ட் சார்பில் 74வது குடியரசு தின விழாவை முன்னிட்டு ஐம்பெரும் விழா நிகழ்வு முனைவர் உத்தம் சந்த் கட்டார்யா அவர்கள் தலைமையில் பெரம்பூர் வீனஸ் பேருந்து
நிறுத்தம் அருகில் மிக சிறப்பாக நடைப்பெற்றது.

இந்நிகழ்வில் சிறப்பு விருந்தினர்களாக
முன்னாள் உயர்நீதிமன்ற நீதியரசர் எஸ். கே. கிருஷ்ணன், செய்தி வாசிப்பாளரும், நடிகையுமான பாத்திமாபாபு, சன் டிவி புகழ் டாக்டர்.சுரேஷ்குமார் காந்திஜி பள்ளியின் தாளாளர் புலவர் சுகுமாரி அருணகிரி. ஜெயா டிவி புகழ் முனைவர்மோகன்ராஜ், முனைவர் திருமலைவாசன், லதாவாசன் தொழிலதிபர் ராஜுசடகோபன், சமூக ஆர்வலர் பத்மபிரியா ராஜூ, செய்தி வாசிப்பாளரும்,நடிகையுமான செல்வி ஜனனி ஆகியோர் கலந்துக்கொண்டு சிறப்பித்தனர்.

மேலும் இந்நிகழ்வில் குடியரசு தின விழா வை முன்னிட்டு மாபெரும் அன்னதானம், இலவச கண் சிகிச்சை முகாம் மற்றும் மாணவர்களுக்கு கல்வி உபகரணம் வழங்குதல், மரக்கன்று வழங்குதல்,
மாற்றுத்திறனாளிகளுக்கு மிதிவண்டி வழங்குதல் உள்ளிட்ட ஐம்பெரும் விழா நடைப்பெற்றது.

மேலும் இந் நிகழ்வில்
பசுமைநாயகம், சாய்முருகன் ,ராஜேஷ் ,சிங்காரவடிவேல், தாமரை, பூவண்ணன், ஆனந்தராஜ் ,ரிட்சர்ட், டாக்டர்.தனசேகர், செல்வேஷ்,ஜகன்மல், பிரகாஷ் சந்த், விமல் சந்த், சுஷில், கிஷோர் கட்டார்யா ஆகியோர் கலந்துக்கொண்டனர்.

இந்நிகழ்விற்கான ஏற்பாடுகளை சமூக ஆர்வலரும், நடிகருமான பிரவீன்குமார் அவர்கள் சிறப்பாக ஒருங்கிணைத்திருந்தார்.

About admin

Check Also

Celebrating International Day of Yoga and World Music DayThrough Dance and Movement Therapy at Athulya Senior Care

Chennai, 20th June 2024 : Athulya Senior Care, a prominent provider of assisted living services …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Advertisement

istanbul evden eve nakliyat eşya depolama evden eve nakliyat