மருத்துவத்துறை அமைச்சருக்கு சென்னை அரசு சித்தமருத்துவக் கல்லூரி ஆசிரியர்கள் நன்றி

சென்னை அரும்பாக்கத்தில் உள்ள அறிஞர் அண்ணா அரசினர்இந்திய மருத்துவமனை வளாகத்தில் நடந்த விழாவில்மாண்புமிகு மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத் துறைஅமைச்சர் மா. சுப்பிரமணியன் அவர்கள் கலந்துகொண்டுசித்தா,ஆயுர்வேதா, யுனானி மற்றும் ஓமியோபதி இளநிலைபட்டப்படிப்புக்கான தரவரிசை பட்டியல் வெளியிட்டார்.

தமிழகம் முதல்வர்  ஸ்டாலின் அவர்கள் பதவிஏற்றுக்கொண்டதிலிருந்து தமிழகத்தின் பாரம்பரியமருத்துவமான சித்த மருத்துவத்திற்கு தனி கவனம் செலுத்திபல்வேறு வளர்ச்சி பணிகளை மேற்கொண்டு வருகிறார்.  இதன்காரணமாக 2020- 2021 காண  பட்ஜெட்டில் தனி சித்தமருத்துவ பல்கலைக்கழக அமைக்கப்படும் என்று அறிவிப்புவெளியிடப்பட்டு  அதற்கான பணிகள் மேற்கொள்ளப்பட்டுவருகிறது.

கடந்த  கொரோனா பெருந் தொற்று காலங்களில் பல்வேறுஇடங்களில் சித்தமருத்துவ கொரோன  சிகிச்சை மையங்கள்அமைக்கப்பட்டு பல்லாயிரக்கணக்கான  நோயாளிகள்குணமடைந்தனர் என்பது அனைவரும் அறிந்ததே. இதன்மூலம் பள்ளிப்படிப்பை முடித்த மாணவர்களிடையே சித்தமருத்துவம் படிப்பின் ஆர்வம் அதிகமாகி வருகிறது.

தமிழகத்தில் சித்த மருத்துவத்திற்கான இரண்டு அரசுசித்த மருத்துவக் கல்லூரிகளும், 9 தனியார்  மருத்துவக்கல்லூரிகளும் இயங்கி வருகிறது. அதில் அரசு சித்தமருத்துவக் கல்லூரியில் 136 இடங்களும் தனியார் சித்தமருத்துவக் கல்லூரியில் 490 இடங்களும் உள்ளது. ஆயுர்வேதாயுனானி ஓமியோபதி படிப்பில் அரசு மருத்துவக் கல்லூரியில்104 இடங்களும், தனியார் மருத்துவக் கல்லூரிகளில் 1170 இடங்களும் உள்ளது.

இந்நிகழ்ச்சியில் கலந்து கொண்டு மாண்புமிகு அமைச்சர்அவர்கள் இந்திய மருத்துவ முறை படிப்புகளின் தரவரிசைபட்டியலையும்,  இயற்கை மருத்துவ பட்டம் மேற்படிப்புக்கான    ஆணை, மேலும்  மருந்துகளின்   தரம்

தரம் பற்றிய ஆய்வு திட்டத்தை தொடங்கி வைத்தார். 

இதைப் பற்றி அரச சித்த மருத்துவக் கல்லூரி மரு.   பாஸ்கர்இராஜமாணிக்கம் அவர்கள் கூறியதாவது 

“ தரவரிசை பட்டியல் வெளியிடும் நிகழ்வில் அமைச்சர்கள்கலந்து கொள்வது  இதுவே முதல்முற‘ எனவும் , இது இந்தியமுறை மருத்துவத்திற்கு கிடைத்த பெருமை எனவும், இந்நிகழ்வுமருத்துவ  கல்லூரி ஆசிரியர்கள, மருத்துவமாணவர்களிடையேயும்  மகிழ்ச்சி ஏற்படுத்தி உள்ளதாகவும்இதற்கு காரணமாக இருந்த தமிழக முதல்வர் அவர்களுக்கும், மருத்துவத்துறை  அமைச்சர் அவர்களுக்கும் நன்றிதெரிவிப்பதாகவும், இந்நிகழ்ச்சியில் கலந்து கொண்ட மேற்குமாவட்ட செயலாளர் மற்றும் சென்னை மாநகராட்சி பணிகள்நிலை குழு தலைவர் சிற்றரசு அவர்களுக்கும், அண்ணா நகர்தகவல் தொழில்நுட்ப அணி அமைப்பாளர் மோகன் பாபுஅவர்களுக்கும் நன்றி தெரிவிப்பதாக தெரிவித்தார்.

மேலும் இந்நிகழ்ச்சியில் இந்திய மருத்துவம் மற்றும்ஓமியோபதி துறை  இயக்குனர் கணேஷ் இ ஆ ப , இணைஇயக்குனர் மரு. பார்த்திபன், தேர்வுக்குழு  செயலாளர் &  சென்னை அரசு சித்த மருத்துவக் கல்லூரி  முதல்வர் மரு. மலர்விழி மற்றும் ஏராளமான கல்லூரி மருத்துவர்கள்,மருத்துவமாணவர்களும்  கலந்து கொண்டனர்.

About admin

Check Also

Chennai Sante” – A 10-Day Handloom & Handicraft Bazaar in Chennai, CelebratingIndia’s Rich Heritage during Valentine’s week

Chennai, February, 2025 – Manya Art & Kraft, in collaboration with Smart Art Events, announce the inauguration of its annual …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

istanbul evden eve nakliyat eşya depolama evden eve nakliyat