சென்னையில் பத்திரிகையாளர்களின் சட்ட பாதுகாப்பு, உரிமை, அங்கீகாரம், இடஒதுக்கீடு உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வென்றெடுக்க தமிழ்நாடு ஆல் மீடியா ஜர்னலிஸ்ட் யூனியன் தலைவர் சிவகுமார், பொதுச்செயலாளர் கதிர்வேல், துணைத்தலைவர் பெஞ்சமின் ஆகியோர் தலைமையில் 28.10.2022 அன்று காலை 10.00 மணியளவில் சென்னை வள்ளுவர் கோட்டத்தில் மாபெரும் உரிமை மீட்பு ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
பாஜகவின் சென்னை பெருங்கோட்ட பொறுப்பாளர்.கரு.நாகராஜன் ஆகியோர் கலந்து கொண்டு ஆர்ப்பாட்டத்தை துவக்கி வைத்து சிறப்புரையாற்றினர்.
பாஜகவின் ஊடக பிரிவு மாநில தலைவர் ரங்கநாயகுலு, அகில இந்திய மீனவர் சங்க அண்ணா& எம்.ஜி.ஆர் திராவிட மக்கள் கழக நிறுவனர் தலைவர் முத்துராமன் சிங்கபெருமாள், புரட்சி தமிழகம் கட்சியின் நிறுவனர் & தலைவர் ஏர்போர்ட் த.மூர்த்தி, பாஜகவின் சென்னை பெருங்கோட்ட ஊடக பிரிவு பொறுப்பாளர் டி.பி.எஸ்.செந்தில்குமார் , ஆல் இந்தியா பிரஸ் மீடியா அசோசியேஷன் தலைவர் டாக்டர் ஆ.வேல்முருகன், நான்காம் தூண் பாதுகாப்பு சங்கம் தலைவர் ஏ.ராபர்ட்ராஜ், அனைத்து உழைக்கும் பத்திரிகையாளர்கள்சங்கம் பொதுச்செயலாளர் எஸ்.ராஜாமுகமது, சுதந்திர இந்தியா ஆல்பிரஸ் மீடியா பத்திரிகையாளர் சங்கம் துணைதலைவர் ஏ.ரஜேஷ் மற்றும் மாநிலத்துணை தலைவர்கள் மீடியாராமு, ஜெ.பி.நாகபூஷணம், மாநில பொருளாளர் பி.நிலாவேந்தர், திருவள்ளூவர் மாவட்டம் ஸ்டன்ட் எம்.ஜெயவேல் உள்ளிட்டோர் திரளாக கலந்து கொண்டு ஆர்ப்பாட்ட கண்டன உரை நிகழ்த்தினர்.
ஆர்பாட்டத்தில் வைக்கப்பட்ட கோரிக்கைகள் விவரம் :
அங்கீகாரம்
2020ல் இருந்து புதியதாக விண்ணப்பிக்கும் செய்தியாளர்களுக்கு வழங்கப்பட வேண்டிய அரசு
அங்கீகார அட்டை நிலுவையில் வழங்கப்படாமல் உள்ள அனைத்து அங்கீகார அட்டைகளும் உடனடியாக தரப்பட வேண்டும்.
ஆர்.என்ஐ-ல் பதிவு பெற்ற அனைத்து தினசரி, வார, மாத பதிப்புகளுக்கும், முறைப்படி பதிவு பெற்ற அனைத்து தொலைக்காட்சி மற்றும் மின்னணு ஊடகவியலாளர்களையும் கணக்கில் கொண்டு அனைவருக்கும் அரசு அங்கீகார அட்டை வழங்கப்பட வேண்டும்.
அரசு அங்கீகார அட்டை வழங்க, பெற்றிட இ&பைலிங் மட்டும் போதும் எனவும், அச்சகத்தார் மற்றும் ஆடிட்டர் சான்றிதழ் தேவையில்லை எனவும் அறிவிக்க வேண்டும்.
அரசு அங்கீகார அட்டை பெற்றவர்கள் மட்டுமின்றி அனைத்து பத்திரிகையாளர்களுக்கும் பாகுபாடின்றிஅரசின் அனைத்து நலத்திட்டங்களும் சென்றடைந்திட அரசு வழி வகை செய்ய வேண்டும்.
தாலுகா வாரியாக பணிபுரியும் அனைத்து பத்திரிகையாளர்களுக்கும் மாவட்ட செய்தித்துறை அங்கீகாரம் வழங்கிட வேண்டும்.
சிறிய நிறுவனம், பெரிய நிறுவனம் என்ற பாகுபாடின்றி அனைவரையும் செய்தித்துறை ஒன்றாக நடத்திட வேண்டும்.
ஆன்லைன் மின்னணு ஊடகவியலாளர்களையும் அங்கீகரிக்கப்பட வேண்டும்.
பாதுகாப்பு
பத்திரிகையாளர்கள், ஊடகவியலாளர்கள் நலன்களை பாதுகாக்க பத்திரிகையாளர்கள் பாதுகாப்பு சட்டத்தை மத்திய, மாநில அரசுகள் காலதாமதமின்றி சட்டபூர்வமாக உறுதி செய்திட வேண்டும்.
அங்கீகார அட்டை உள்ளவர்களுக்கு மட்டுமில்லாமல் RNI&ல் பதிவு செய்துள்ள செய்தி நிறுவனங்களில் பணியாற்றும் அனைத்து ஊடக பணியாளர்களுக்கும், புகைப்பட கலைஞர்களுக்கும், ஊடக அலுவலக பணியாளர்களுக்கும், அரசு செயல்பாட்டுக்கு கொண்டு வந்துள்ள மருத்துவ காப்பீட்டு திட்டம் கிடைத்திட வழிவகை செய்யப்பட வேண்டும்.
பத்திரிகையாளர்களின் குழந்தைகளின் கல்வி, வேலைவாய்ப்பு போன்றவற்றிற்கு இட ஒதுக்கீடும், சலுகைகளும் அளித்திட வேண்டும்.
வாழ்வாதாரம்
மாநகர பத்திரிகையாளர் களுக்கு அரசின் இலவச அடுக்குமாடி குடியிருப்புகளும், மாவட்டம் மற்றும் தாலுகாவில் பணிபுரியும் பத்திரிகையாளர்களுக்கு, அவர்கள் வசிக்கும் பகுதியிலேயே இலவச வீட்டு மனைமற்றும் இலவச வீடுகளை தந்திட வேண்டும்.
அனைத்து ஊடக நிர்வாகங்களும் குறைந்தபட்ச சம்பள விகிதத்தை கடைப்பிடிக்கிறதா என்பதை அரசும், வாரியமும் கண்காணித்து பத்திரிகையாளர்களுக்கான பணிப்பாதுகாப்பை உறுதி செய்திட வேண்டும்.
பத்திரிகையாளர்களுக்கு அருணாசலபிரதேச அரசு ஓய்வூதியமாக ரூ.25,000 அளிக்கிறது.
இதைப்போன்றே தமிழக அரசும் பத்திரிகையாளர்களுக்கு ஓய்வூதியத்தை உயர்த்திட வேண்டும்.
கண்டனம்
அரசு விழாக்களில் அங்கீகரிக்கப்பட்ட செய்தியாளர்கள் மட்டும் அனுமதி என்பதை தவிர்த்து செய்தி நிறுவனங்கள் வழங்கிய அடையாள அட்டையே போதுமானது என்ற நிலைப்பாட்டை செய்தித்துறை கடைபிடிக்க வேண்டும் காவல்துறை மற்றும் பத்திரிகையாளர்கள் இடையே ஏற்ப-டும் முரண்பாடுகளை தவிர்க்க காவல்துறை உயர் அதிகாரிகள், சட்ட வல்லுநர்கள், மூத்த பத்திரியாளர்கள் ஆகியோர் அடங்கிய சமரசகுழு அமைக்க வேண்டும்.
அரசு வழங்கும் செய்தியாளர்கள் அங்கீகார அட்டை செய்தியாளர் அட்டை வழங்குவதற்கு முறைபடுத்தப்பட்ட குழு அமைத்து வரும் ஆண்டிற்கான (2023) அரசு அங்கீகார செய்தியாளர் அடையாள அட்டைகள் உடனடியாக வழங்கப்பட வேண்டும்.
செய்தியாளர் அங்கீகார அட்டை (கிநீநீக்ஷீமீநீக்ஷீமீணீtவீஷீஸீ சிணீக்ஷீபீ) புதுப்பித்தல் தற்போது மூன்று மாதத்திற்கு ஒரு முறை என நடைமுறையில் உள்ளது அதை மாற்றி பழைய படியே ஆண்டுக்கு ஒருமுறை என மாற்றிட வேண்டும்.
ஸிழிமி&ல் பதிவு பெற்று வெளிவரும் அனைத்து நாளிதழ்கள், பருவ இதழ்களை தமிழகத்தில் உள்ள அனைத்து நூலகங்களிலும் கிடைக்கும் படி பாகுபாடில்லாமல் நூலக அனுமதியை வழங்க வேண்டும்.
உள்ளிட்ட கோரிக்கைகள் முன்வைக்கப்பட்டது.
Check Also
Amrita Vishwa Vidyapeetham Hosts Workshop on Cultural Ecology of Environment and Climate Change
Chennai, December, 2024: Amrita Vishwa Vidyapeetham recently organized a workshop on “Cultural Ecology of Environment and …