தமிழ்நாட்டில் அனைத்து தரப்பினருக்கும் ஹெபடைட்டீஸ் B தடுப்பூசி செலுத்தும் பணியை சென்னை ரோட்டரியுடன் இணைந்து தொடங்கியுள்ளது சென்னை லிவர் பௌன்டேசன்.
வைரஸ் கிருமியின் மூலம் மனிதனின் கல்லீரலை பாதித்து புற்றுநோய் வரை உண்டாக்கி உயிரைக்கொள்ளும் ஹெபடைட்டீஸ் நோயை தடுக்கும் வகையில் அரசின் உதவியுடன் தமிழகத்தில் 10 லட்சம் மக்களுக்கு அடுத்த மூன்று ஆண்டுகளில் ஹெபடைட்டீஸ் B தடுப்பூசி செலுத்தும் பணியை சென்னை ரோட்டரியுடன் இணைந்து தொடங்கியுள்ளது சென்னை லிவர் பௌன்டேசன்.
குழந்தைகள், கர்ப்பிணி தாய்மார்கள், 18 வயதுக்குட்பட்டவர்கள் மட்டுமில்லாது , போதை பழக்கத்திற்கு ஆளானவர்கள், மருத்துவத்துறை மற்றும் அனைத்து முன்கள பணியாளர்கள், சர்க்கரை நோய் உள்ளவர்கள் என பல்வேறு தரப்பினர் பாதிக்கப்படும் வாய்ப்பு இருப்பதால் அனைத்து வயதினருக்கும் இந்த தடுப்பூசி கட்டாயமாகிறது.
எனவே ஜூலை 28 ஆம் தேதி அனுசரிக்கப்படும் உலக ஹெபடைட்டீஸ் தினத்தை முன்னிட்டு இந்த தடுப்பூசி செலுத்தும் பணியை சென்னை ரோட்டரியுடன் இணைந்து தொடங்கியுள்ளது சென்னை லிவர் பௌன்டேசன். இதன் தொடக்க விழா நிகழ்ச்சியில் ரோட்டரி சங்கத்தின் சர்வதேச தலைவரான கனடாவை சேர்ந்த ஜெனிபர் ஜோன்ஸ், ரோட்டரி சங்கத்தின் இயக்குனர் வெங்கடேஷ், சென்னை ரோட்டரி மாவட்ட கவர்னர் நந்தகுமார்,சென்னை லிவர் பௌன்டேசன் நிறுவனர் சண்முகம் உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.
நிகழ்ச்சியில் பேசிய ரோட்டரி சங்கத்தின் சர்வதேச தலைவரான கனடாவை சேர்ந்த ஜெனிபர் ஜோன்ஸ் :-
போலீயோ போல் ஹெப்படைட்டிஸ் நோயை நாம் உன்னிப்புடன் கவனத்தில் கொள்ள வேண்டும்.மக்களுக்கு இதை குணமாக்க முடியும் என்ற விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும்.அனைவரும் பரிசோதித்து கொள்ள வேண்டும். அதில் இருந்து குணமாக தடுப்புசி எடுத்துக்கொள்ள வேண்டும் என்றார்.
அனைவரும் ஒன்றினைந்து இனியும் காத்திருக்க முடியாது என்ற நோக்கத்தில் இந்த நோயை எதிர்த்து நாம் செயலாளற்ற வேண்டும் என்றார்.
(பேட்டி இணைத்து கொள்ளவும் சென்னை லிவர் பௌன்டேசன் நிறுவனர் சண்முகம்)