NON LINEAR SINGLE SHOT MOVIE என பார்த்திபன் மார்த்தட்டி சொல்லி கொள்ளும் படம். அதாவது… நான்-லீனியராக (Non-Linear) தன் கதையை விவரிக்கும் ஒரு படத்தை சிங்கிள் ஷாட்டில் முடித்திருக்கிறார் பார்த்திபன்.
மூன்று மாதங்கள் அதாவது 90 நாட்கள் ஒத்திகை எடுத்து 23 சிங்கிள் ஷாட்டுகளில் எடுத்த திரைப்படம் இரவின் நிழல்.
படம் ஆரம்பிக்கும் போது முதலில் 30 நிமிடம் மேக்கிங் வீடியோ காட்டப்படுகிறது. அதன் பிறகு இடைவேளை விட்டு 90 நிமிடங்கள் படம் ஓடுகிறது.
மேக்கிங் வீடியோவை பார்த்தால் மட்டுமே இந்த படத்தின் வலி புரியும். ஒரு வித்தியாசமான இயக்குனரின் உணர்வு புரியும். ஆரம்பிக்கலாங்களா..??
கதைக்களம்…
நந்து என்ற பார்த்திபன் தனது நடுத்தர வயதில் சில நினைவுகளை அசைப் போடுகிறார். தனது 10 வயது 20 வயது 30 வயது 40 வயது எனது ஒவ்வொரு வயதிலும் தான் சந்தித்த தனக்கு ஏற்பட்ட கசப்பான இனிப்பான அனுபவங்களை அசைபோடும் ஒரு நாள் இரவில் நடைபெறும் பயணமே இந்த ‘இரவின் நிழல்’.
நாயகிகளாக பிரிகிடா சகா, சாய் பிரியங்கா ரூத், சிநேகா குமாரி என மூவர் நடித்துள்ளனர். மூவருமே தங்கள் நடிப்பில் முத்திரை பதித்துள்ளனர்.
இதில் பிரிகிடா தன் நடிப்பில் பின்னி எடுத்துள்ளார். கண்ணழகிலும் கவர்கிறார். இவர் எடுக்கும் முடிவு அதிர்ச்சியானது.
இதில் ஒருவர் பார்த்திபனை தீயவழிக்கு கொண்டு செல்கிறார்.. ஒருவர் நல்வழிக்கு கொண்டு செல்கிறார்.. மற்றொருவர் அந்த நல்பாதையில் பயணிக்க வைக்கிறார்.
இவர்களோடு வரலட்சுமி, ரோபோ சங்கர் ஆகியோரும் உண்டு. பெரிதாக வேலையில்லை. ஆனாலும் நித்தியானந்தா ரஞ்சிதா ஆகியோரை இவர்கள் நினைவுப்படுத்துகின்றனர்.
டெக்னீஷியன்கள்…
ஒளிப்பதிவு ஆர்தர் வில்சன்… இசை : ஏஆர்.ரஹ்மான்.. கலை : விஜய்முருகன்.
சிங்கிள் ஷாட் என்பதால் அனைத்துக்கும் நிறைய செட்கள் போட வேண்டும். அனைத்தையும் ஒரே இடத்தில் போட வேண்டும்.
அதுவும் நான் லீனியர் என்பதால், அதே நடிகர்கள் மீண்டும் அடுத்த காட்சியில், வேறொரு ஆடையில் தோன்ற வேண்டும். கிட்டத்தட்ட நாடகம் போலத்தான்.
அனைவரும் இணைந்து மிகவும் கடினமான ஒன்றைச் சாத்தியப்படுத்தியுள்ளனர்..
பார்த்திபன் பாணியில் பல வசனங்கள் பளிச்சிடுகின்றன.
செருப்பால அடிப்பான்னு பார்த்தா சிரிப்பால அடிச்சா…பணத்தை அமுக்க தெரிஞ்ச உனக்கு பண எண்ணும் மெஷினை அமுக்க தெரியலையே… செஞ்ச பாவம் கங்கைக்குப் போனா தீரும். சிலர் செஞ்ச பாவம் கங்கையோட போனாலும் தீராது என அசத்தியிருக்கிறார்.
ஆனால் தன் புதிய பாதை பாணியை இன்னும் அவர் மேற்கொண்டு வருவது கொஞ்சம் வருத்தமே. பார்த்திபன் அந்த பார்முலாவை மாற்றிக் கொள்வது நல்லது.
ஒரு சமூகத்தால் புறக்கணிக்கப்பட்ட சிறுவன் பின்பு என்ன ஆவான் என்பதை பல படங்களில் பார்த்திபன் காட்டி வருகிறார்.
ஆனால் இந்த படத்தில் பாலியல் பலாத்காரம் என்பது சிறுமிக்கு மட்டுமல்ல சிறுவனுக்கும் ஏற்படும் என்பதை சொல்லிவிட்டார்.
பெற்றோர்கள் தங்கள் ஆண்மகன் விஷயத்திலும் அக்கறை காட்ட வேண்டும் என்று எடுத்துரை திருத்திக்கிறார்.
ஒரு நல்ல படைப்பை கொடுக்கும் போது நல்ல வார்த்தைகளை சேர்த்தால் இன்னும் இனிமையாக இருந்திருக்கும். படத்தில் ஏகப்பட்ட கெட்ட கெட்ட வார்த்தைகள் உள்ளன.
இந்தப் படத்தின் கதைக்கு பெரிதும் உதவியாக இருந்துள்ளது ஏ ஆர் ரகுமானின் பின்னணி இசை. அதுபோல பாடல்களும் அதன் வரிகளும் நம்மை கவர்கின்றன.
பின்னணியில் இசையில் கதைக்குத் தேவையானதை உணர்ந்து கொடுத்திருக்கிறார்.
முக்கியமாக கலை இயக்குனர் தன்னுடைய முழு உழைப்பையும் கொடுத்துள்ளார். ஒவ்வொரு காலகட்டம் சிங்கிள் ஷாட் என்பதால் அது உணர்ந்து ஒவ்வொரு அறைக்கும் ஒவ்வொரு விதமான கலையை கொடுத்து 1980 90 2000 என பல்வேறு பரிமாணங்களை கொடுத்துள்ளது சிறப்பு.
அதற்கு ஏற்ப ஒளிப்பதிவாளரும் தன் பணியை சிறப்பாக கொடுத்துள்ளார்.
ஆக இந்த இரவின் நிழல் இரவாத நினைவுகள்
ஆனந்த் கிருஷ்ணன், சந்துரு, பிரவீன் குமார், ஜோஷுவா உள்ளிட்டோர் பார்த்திபன் கேரக்டரில் நால்வராக நடித்துள்ளனர்.