பத்து நிமிடத்தில் வண்ணங்களில் புத்தகத்தை அச்சிட்டு தரும் இங்க்ஜெட் இயந்திரம் எக்ஸாட் இண்டர்நேஷனல்

சென்னை – பிடி எப் பைல் கொடுத்தால் பத்து நிமிடத்தில் புத்தகமாக்கி தரும் இயந்திரத்தை தமிழகத்தில் முதன் முதலாக “KYOCERA” நிறுவனத்தின் டாஸ்கல்பா ப்ரோ 15000 சி வகை அச்சு இயந்திரத்தை அறிமுகப்படுத்துகிறது எக்ஸாட் இண்டர்நேஷன்ல், இவ்வியந்திரம் அறிமுகம் குறித்து அதன் நிர்வாக இயக்குனர் திரு.முரளி பத்திகையாளர் சந்திப்பில் கூறுகையில்.

ஆப்செட் இயந்திரங்களும் , லேசர் வகை இயந்திரங்களும் அச்சுத் துறையில் கோலோச்சி கொண்டு இருக்கும் இவ்வேளையில் இவ்வியந்திரங்களை விட வேகமான , தரமான அச்சுகளை தரக்கூடிய ” KYOCERA ” நிறுவனத்தின் டாஸ்கல்பா ப்ரோ 15000 வகை அச்சு இயந்திரத்தை தமிழகத்தில் அறிமுகப்படுத்துவதில் பெருமையடைகிறோம் . இன்றைய தினம் ஒரு புத்தகத்தை அச்சிடுவதற்கு சில தினங்கள் வரை காத்திருக்க வேண்டிய சூழல் உள்ளது . பணியாளர்கள் தட்டுப்பாடு , அச்சு பணிக்கான பொருள்கள் தட்டுப்பாடு , தொடர் விலையேற்றம் போன்ற காரணங்களால் அச்சு தொழிலில் பல்வேறு சிரமங்கள் உள்ளன . மேலும் உடனடி தேவைக்கு இது போன்ற காரணங்களால் நவீன தொழில்நுட்பங்களை நாட வேண்டிய குழல் ஏற்பட்டுள்ளது ; இவற்றை கருத்தில் கொண்டு நவீன தொழில்நுட்பத்துடன் கூடிய , நாங்கள் அறிமுகப்படுத்தியிருக்கும் இயந்திரம் புத்தக தயாரிப்பாளர்களுக்கும் , அச்சு பணியை மேற்கொள்பவர்களுக்கும் ஒரு வரப்பிரசாதமாகும்.

இந்த இயந்திரங்கள் பல்வேறு மாடல்களில் கிடைக்கிறது . அச்சிடும் தாள்கள் , அளவு , பயன்படுத்தும் முறை போன்றவற்றை கொண்டு இதன் மாடல்கள் வடிவமைக்கப்பட்டுள்ளன . இப்போது எங்களிடம் ஐந்து வகைகளில் கிடைக்கிறது . ஒரு இயந்திரத்தின் விலை ஒரு கோடியாகும் . ஜி.எஸ்.டி இல்லாமல் , அவசர தேவையை பூர்த்தி செய்ய விரும்புகிற அச்சு நிறுவனங்கள் , பத்திரிகை நிறுவனங்கள் , பதிப்பாளர்கள் , அரசு நிறுவனங்கள் இந்த இயந்திரத்தை பயன்படுத்த முடியும் .

இந்த இயந்திரத்தை மிக எளிதாக கையாள முடியும் . அதற்கு தேவையான பயிற்சிகளை நாங்களே அளிக்கிறோம் . மேலும் இந்த இயந்திரத்தை அமைத்து தருவதுடன் , அதற்கான சேவையுைம் நாங்களே வழங்குகிறோம் . இதன் உதிரிபாகங்களை நாங்களே விற்பனை செய்கிறோம் . எனவே எங்களிடம் இந்த இயந்திரத்தை வாங்குபவர்கள் எதற்காகவும் மற்றவர்களை நாட வேண்டியதில்லை . தேவையான அனைத்து சேவைகளையும் நாங்களே செய்து தருகிறோம் என்றார் .

About admin

Check Also

KYNHOOD APPOINTS LAVINA RODRIGUESAS ASSISTANT VICE PRESIDENT – BRAND COMMUNICATIONS

Chennai, February 20th, 2025: KYN, (Know Your Neighbourhood), a leading neighbourhood discovery and connectivity app, by KYNHOOD technologies has appointed …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

istanbul evden eve nakliyat eşya depolama evden eve nakliyat