உலக இளம் மருத்துவர்கள் தினத்தை முன்னிட்டு உலக இளம் மருத்துவர்கள் மாநாட்டை தொடங்கி வைத்த சுகாதாரத்துறை அமைச்சர் மா. சுப்பிரமணியன் மற்றும் பால்வளத்துறை அமைச்சர் நாசர்*
உலக இளம் மருத்துவர்கள் தினம் உலகம் முழுவதும் இன்றைய தினம் கொண்டாடப்படும் நிலையில்,சென்னை எம்ஆர்சி நகரில் உள்ள லீலா பேலஸில் இந்திய மருத்துவ சங்கம்,ஜூனியர் டாக்டர் நெட்வொர்க் மற்றும் மருத்துவ மாணவர்கள் நெட்வொர்க் இணைந்து உலக இளம் மருத்துவர்கள் தினம் மாநாட்டை ஏற்பாடு செய்திருந்தனர்
இந்த மாநாட்டை தமிழக சுகாதாரத்துறை அமைச்சர் மா சுப்பிரமணியன் மற்றும் தமிழக பால்வளத்துறை அமைச்சர் நாசர் ஆகியோர் கலந்து கொண்டு தொடங்கி வைத்தனர்.
உடன் டாக்டர் ஆர் பழனிசாமி தலைவர் ஐ.எம்.ஏ, டாக்டர் என்.ஆர்.டி.ஆர்.தியாகராஜன் செயலாளர் ஐ.எம்.ஏ , டாக்டர் என்.அழகவெங்கடேசன் நிதி செயலாளர் ஐ.எம்.ஏ, டாக்டர் கே. எம்.அப்துல் ஹாசன் அமைப்பு தலைவர் ஐ.எம்.ஏ, டாக்டர் எம்.அருண்குமார் தேசிய கவுன்சில் உறுப்பினர் ஐ.எம்.ஏ.
தற்போதைய தொற்று காலத்தில் இளம் மருத்துவர்கள் எப்படி செயல்பட வேண்டும் என்பது குறித்தும். மருத்துவ உலகில் இளம் மருத்துவர்களின் அவசியம் குறித்து இந்த மாநாட்டில் விவாதிக்கப்பட்டது