வாக்ஸ் குழுமம் நிறுவனத்தலைவர் காலம்சென்ற ஞானசுந்தரம் அவர்களின் 15வது வாக்ஸ் குழும நிறுவன தினமாக அனுஷ்டிக்க வகையில் சென்னை வாக்ஸ் பதிவு அலுவலகத்தில் அதன் நிறுவனத் தலைவர் மற்றும் அகில இந்திய ரியல் எஸ்டேட் கூட்டமைப்பின் தேசிய ஆலோசனைக் குழு தலைவருமான ராவணன் ஞானசுந்தரம், கவிதாராவணன் , வாக்ஸ குழுமத்தின் இயக்குனர் இந்திரஜித் ராவணன் ஆகியோர் 150க்கும் மேற்பட்ட பார்வையற்ற மாற்றுத் திறனாளிகளின் குழந்தைகள் மற்றும் ஏழை எளிய மாணவர்களுக்கு கல்வி உதவி தொகையும், 300 பேருக்கு அன்னதானமும் வழங்கினர் .
மேலும் இந்நிகழ்ச்சியில் முன்னாள் குடியரசு தலைவர் ஏ.பி.ஜே .அப்துல் கலாம் அவர்களின் ஆலோசகரும் விஞ்ஞானியுமான வெ. பொன்ராஜ் , அகில இந்திய கூட்டமைப்பின் நிறுவனத் தலைவர் ஆ.ஹென்றி ஆகியோர் கலந்துகொண்டு உதவித்தொகையும் அன்னதானத்தையும் வழங்கினர்.
இந்த 15 வது ஆண்டு நிறுவனர் தினத்தில் வாக்ஸ் அறக்கட்டளை சார்பில் சென்னை மற்றும் ஆந்திர பிரதேசத்தில் கீழ்கண்ட 15 வெவ்வேறு இடங் களில் உள்ள முதியோர் இல்லங்களில் உள்ள ஏழைகள் மற்றும் ஆதரவற்றோர் என 3000 பேருக்கு உணவு வழங்கப்பட்டது குறிப்பிடத்தக்கது மற்றும் அகில இந்திய ரியல் எஸ்டேட் குழுமத்தின் தலைமை நிலைய செயலாளர் faira கார்த்திக் தேசிய ஒருங்கிணைப்பாளர் p தமிழரசன் தேசிய செயற் குழு தலைவர் C.ரமேஷ் மற்றும் வாக்ஸ் நிறுவன ஊழியர்கள் கலந்து கொண்டனர்
