விஷமக்காரன் ஹனி பிரேம் ஒர்க்ஸ் தயாரிப்பில் உருவாகியுள்ள இப்படத்தை இயக்கி நடித்துள்ளார்
அறிமுக நடிகர் வி (விஜய் குப்புசாமி). அனிகா விக்ரமன் மற்றும் டிவி சீரியல் புகழ் சைத்ரா ரெட்டி ஆகியோர் கதாநாயகிகளாக நடித்துள்ளனர்.
“மனிதர்களை தங்களுக்கு ஏற்றபடி திறமையாக கையாளுதல்” அதாவது மேனிபுலேஷன் என்பதை மையக்கருவாக வைத்து இப்படம் உருவாகியுள்ளது. மனிதர்களின் வாழ்க்கையில் ஏற்படும் சிக்கல்களுக்கு தீர்வு சொல்லும் வாழ்க்கை பயிற்சியாளராக நடித்துள்ளார் நாயகன் வி (விஜய் குப்புசாமி).
நாயகன் வி (விஜய் குப்புசாமி), நாயகி சைத்ரா ரெட்டி இருவரும் காதலிக்கின்றனர். நாயகி வெளிநாடு சென்று படிக்க தன் வாழ்க்கை வளர்ச்சியடைய நினைக்கிறாள். ஆனால், நாயகன் தன்னுடன் இருந்து தன்னுடைய தொழில் வளர்ச்சிக்காக, தன்னுடனேயே இருக்குமாறு கூறுகிறார். இதனால் கருத்து வேறுபாடு காரணமாக பிரிகின்றனர்.
அதன்பின், நாயகன் வி, இன்னொரு நாயகி அனிகா விக்ரமனை காதலித்து திருமணம் செய்துக் கொள்கிறார்.
இவர்கள் வாழ்க்கை சந்தோஷமாக செல்லும் போது நாயகி சைத்ரா ரெட்டியை மீண்டும் சந்திக்கும் சூழல் உருவாகிறது.
இதனால், நாயகி அனிகா விக்ரமனுக்கு இருவர் மீதும் சந்தேகம் வருகிறது.
அதன்பின் மனைவி சந்தேகத்தின் உச்சங்கள் மீதி கதை?
இந்த மூவரைப் நோக்கி கதை நகர்வுகள் வேறு தளத்திற்க்கு அழைத்து செல்கிறது.
அது என்ன படத்தலைப்பு விஷமக்காரன்?. ஆம், அதுதான் படத்தின் க்ளைமாக்ஸ் டிவிஸ்ட்?
நடித்த அனைவரும் சிறப்பாக நடித்துள்ளனர்.
இரட்டை இசையமைப்பாளர்களின் இசையில் பாடலும், பின்னணி இசையும் இனிமை.
ஒளிப்பதிவும், படத்தொகுப்பும் இப்படத்திற்க்கு பக்கபலம்.
ரசிகர்களுக்கு நல்ல பொழுதுப் போக்குக்கான படம் “விஷமக்காரன்”.
தொழில்நுட்ப கலைஞர்கள் விபரம்
ஒளிப்பதிவு : J கல்யாண்
இசை : கவின்-ஆதித்யா
படத்தொகுப்பு : S.மணிக்குமரன்
இயக்கம் : V
தயாரிப்பு : ஹனி பிரேம் ஒர்க்ஸ்
மக்கள் தொடர்பு : KSK செல்வா