நேரு உயர்நிலைப் பள்ளியில் சிறுவர் சிறுமியர்களுக்கான விண்வெளி அறிவியல் விழிப்புணர்வு மற்றும் சாதனை  மாணவர்களுக்கான பரிசு 

சென்னை வேளச்சேரியில் உள்ள நேரு உயர்நிலைப் பள்ளியில் சிறுவர் சிறுமியர்களுக்கான விண்வெளி அறிவியல் விழிப்புணர்வு மற்றும் சாதனை மாணவர்களுக்கான பரிசு வழங்கும் நிகழ்சி நடைபெற்றது.

பள்ளியின் நிறுவனர் நேரு தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்சியில் இஸ்ரோவின் முன்னாள் விஞ்ஞானியும் டாக்டர் ஏ.பி.ஜே.அப்துல் கலாம் அவர்களுடன் பணி புரிந்தவருமான இளங்கோவன் கலந்து கொண்டு மாணவ மாணவிகளிடையே சிறப்புரையாற்றினார்.

அதனை தொடர்ந்து பள்ளியின் சார்பில் நடைபெற்ற சுமார் 15க்கும் மேற்பட்ட போட்டிகளில் கலந்து கொண்டு தங்கம், வெள்ளி என பதக்கங்கள் பெற்ற வெற்றி பெற்ற மாணவ மாணவிகளுக்கு சான்றிதழ்களை வழங்கி வாழ்த்துக்களை தெரிவித்துக் கொண்டார்.

மேலும் டாக்டர் ஏ.பி.ஜே. அப்துல் கலாம் அவர்களோடு பணி புரிந்த சுவாரஸ்யமான அனுபவங்களை மாணவர்களுடன் பகிர்ந்து கொண்டார். விண்வெளி சார்ந்த மாணவர்களின் கேள்விக்களுக்கும் விளக்கவுரை ஆற்றினார்.

இந்நிகழ்சியில் ஆசிரியர்கள், பெற்றோர்கள், மாணவ மாணவிகள் என பலர் கலந்து கொண்டனர்.

About admin

Check Also

The future of underprivileged students’ education hangs in the balance:

Established in 1999, Rice MMS (Rural Institute of Community Education – Mathakondapalli Model School) in …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Advertisement

istanbul evden eve nakliyat eşya depolama evden eve nakliyat