சென்னையில்,நுண்ணுயிரியல் துறை மகாவிஸ்’22 – பெருந்தொற்று காலங்களில் அறிவியல்சார் கண்டுபிடிப்புகளின் சாதனைகள் என்னும் தலைப்பில் கல்லூரிகளுக்கிடையேயான பேச்சுப்போட்டி மே 5ந்தேதி வியாழக்கிழமை அன்று கல்லூரிக் கலையரங்கத்தில் வெகுசிறப்பாக நடைபெற்றது.
இந்நிகழ்ச்சியானது மகாலட்சுமி கல்விக் குழுமத்தின் கல்லூரி நிர்வாக இயக்குநர் திரு.சு.கு. திருக்குமரன் அவர்கள் தலைமையில், கல்லூரி முதல்வர் முனைவர் இரா.குமுதினி அவர்கள் முன்னிலையில் , நுண்ணுயிரியல் துறைத்தலைவர் பேரா.திருமதி. சங்கீதா அவர்கள், சிறப்பு விருந்தினர்களை அழகுற அறிமுகம் செய்து வைத்தார்கள்.
மேலும் சிறப்பு விருந்தினர்களாக சென்னை லயோலா கல்லூரி ஆராய்ச்சித்துறையின் முன்னாள் ஆசோசகர் முனைவர் எஸ். வின்சென்ட் அவர்களும்,சவீதா மருத்துவக்கல்லூரியின் பேராசிரியர் மருத்துவர்.சரவணன் அவர்களும், ஜென் பலசிறப்பு மருத்துவமனையின் தலைமை ஆலோசகர் மருத்துவர் கே.பி.தினகரன் அவர்களும் கலந்துகொண்டு சிறப்புரையாற்றினார்கள்.
இந்நிகழ்ச்சியில் பல கல்லூரிகளைச் சேர்ந்த மாணவிகள் கலந்து கொண்டு, கொரோனா நோய்த்தொற்று காலங்களில்,அறிவியல் கண்டுபிடிப்புகளையும்,அவற்றால் ஏற்பட்ட சாதனைகளையும் எதார்த்தமான நடையில் அழகாக பேசி பரிசுகளைத்தட்டி சென்றார்கள்.
நிகழ்ச்சியில் முனைவர் எஸ்.அனிதா அவர்கள் நன்றியுரை நல்க,நாட்டுப்பண் இசைக்கப்பட்டு விழா இனிதே நிறைவுற்றது.பேராசிரியர்.முனைவர் கிருத்திகா அவர்கள், நிகழ்வினை ஒருங்கிணைத்திருந்தார்.