அண்மையில் அக்டோபர் 28, 2022 அன்று மாவட்ட அளவிலான கைப்பந்து விளையாட்டுப் போட்டியை திருவள்ளூர் மாவட்ட வருவாய்த்துறை நடத்தியது. இப்போட்டி பாக்கம் சேவலாயா மேல்நிலைப்பள்ளியில் நடைபெற்றது. இதில் மாநிலம் முழுவதும் உள்ள பல பள்ளிகள் பங்கு பெற்றன. இதில் 14 மற்றும்
19 வயதிற்கு உட்பட்ட பெண்கள் அணியில் முகப்பேர் வேலம்மாள் பள்ளி மாணவிகள் கலந்து கொண்டு திறமையாக விளையாடி வெற்றியாளர் கோப்பையையும், 17 வயதிற்கு உட்பட்டோர் பிரிவில் மூன்றாம் பரிசினையும் பெற்று வெற்றி பெற்றுள்ளனர்.
மேலும் இந்த அணிகள் விரைவில் நடைபெற உள்ள
குடியரசு தின விளையாட்டுப் போட்டிகளில் பங்கேற்க தகுதி பெற்றுள்ளனர். அளப்பரிய சாதனைப் படைத்த மாணவிகள் மற்றும் பயிற்சி அளித்த ஆசிரியரையும் பள்ளி நிர்வாகம் பாராட்டி வாழ்த்துக்களை தெரிவித்தது.
