“தி கிங் மேக்கர்” என்ற பெயரில் அருளாளர் ஆர்.எம். வீரப்பன் குறித்த ஆவணப்படம் தயாராகிறது !!

சமீபத்தில் மறைந்த மூத்த அரசியல் தலைவர் மற்றும் சத்யா மூவிஸ் நிறுவனத்தின் திரைப்பட தயாரிப்பாளர், தமிழகத்தின் வரலாற்றில் முக்கிய ஆளுமையாக இருந்த அருளாளர் திரு ஆர்.எம். வீரப்பன் அவர்கள் குறித்த ஆவணப்படம், திரையுலகத்தின் முன்னணி பிரபலங்களின் பங்கேற்பில், உலகத்தரத்திற்கு இணையாக உருவாகவுள்ளது.

திராவிட இயக்கங்களின் தலைவர்களான பெரியார் மற்றும் அண்ணா ஆகியோருடன் நெருங்கி பழகியவர் ஆர்.எம். வீரப்பன்.
திரைப்படத் தயாரிப்பாளராகவும் இருந்த ஆர்.எம். வீரப்பன், திமுகவில் இருந்து எம்.ஜி.ஆர். பிரிந்தபோது அதிமுகவில் இணைந்தார்.

முன்னாள் முதல்வர்கள் எம்.ஜி.ஆர். மற்றும் ஜெயலலிதாவின் அமைச்சரவையில் 5 முறை அமைச்சராக பதவி வகித்தவர் அருளாளர் ஆர்.எம். வீரப்பன்.

மூன்று முறை சட்டப்பேரவை மேலவை உறுப்பினராகவும், இரண்டு முறை சட்டப்பேரவை உறுப்பினராகவும் பதவி வகித்துள்ளார் அருளாளர் ஆர்.எம். வீரப்பன்.
எம்.ஜி.ஆர். மற்றும் ஜெயலலிதாவின் அமைச்சரவையில் 1977 முதல் 1996 வரையிலான காலகட்டத்தில் 5 முறை தமிழக அமைச்சராக பணியாற்றியுள்ளார்.

தமிழ் திரைத்துறையில் 20 க்குமேற்பட்ட படங்களைத் தயாரித்துள்ளார், புரட்சி தலைவர் எம்.ஜி.ஆர் நடிப்பில் தெய்வத்தாய், காவல்காரன், நான் ஆணையிட்டால், ரிக்ஷாகாரன், இதயக்கனி மற்றும் ரஜினி நடிப்பில் மூன்றுமுகம், பட்ஷா முதலாக பல ப்ளாக்பஸ்டர் படங்களை வழங்கியுள்ளார்.

தமிழகத்தின் வரலாற்றில் இடம்பிடித்த ஆளுமையான அருளாளர் ஆர் எம் வீரப்பன் அவர்களின் நினைவைப் போற்றும் வகையில், அவரைப்பற்றி இன்றைய இளைய தலைமுறையினர் மற்றும் வருங்கால சந்ததியினர் முழுமையாக தெரிந்து கொள்ளும் வகையில், உலகத்தரத்தில் இந்த ஆவணப்படம் உருவாகவுள்ளது.

சத்யா மூவிஸ் தங்கராஜ் தயாரிக்கவுள்ள இந்த ஆவணப்படம் இயக்குனர், தயாரிப்பாளர் பதம் வேணு குமார் மேற்பார்வையில் உருவாகிறது. ஏற்கனவே அருளாளர்
ஆர் எம் வீரப்பன் அவர்களின் 99 வது பிறந்தநாளை முன்னிட்டு நினைவு பாடல் ஒன்றை சத்யா மூவிஸ் தயாரித்து செப்டம்பர் 9 ஆம் தேதி வெளியிட்டிருந்தது என்பது குறிப்பிடத்தக்கது.

தமிழ் சினிமாவின் முன்னணி பிரபலங்கள், மற்றும் முக்கிய அரசியல் பிரமுகர்கள் பலரும் இந்த ஆவணப்படத்தில் பங்கேற்று, அருளாளர் ஆர் எம் வீரப்பன் அவர்களுடனான நினைவுகளையும் அவரைப்பற்றிய தகவல்களையும் பகிர்ந்துகொள்ளவுள்ளனர்.

இதன் முதற்கட்டமாக தயாரிப்பாளர் சத்யா மூவிஸ் தங்கராஜ் மற்றும் ஆவணப்படதின் மேற்பார்வையாளர் பதம் வேணு குமார் ஆகியோர் இசைஞானி இளையராஜாவை நேரில் சந்தித்து உரையாடினர். இந்த ஆவணப்படத்திற்கு வாழ்த்து தெரிவித்த இளையராஜா தானும் இந்த ஆவணப்படத்தில் பங்கேற்பதாக உறுதியளித்துள்ளார்.

இந்த ஆவணப்படம் குறித்த மற்ற தகவல்கள் விரைவில் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்படும்.

மக்கள் தொடர்பு ; புவன் செல்வராஜ்

A documentary on Shri. R. M. Veerappan titled “The King Maker” is under production !!

Sathya Movies to produce a documentary on Arulalar Shri. RM Veerappan !!

He was a senior political leader and film producer (Sathya Movies) who was always regarded as an important personality in the history of Tamil Nadu.
A documentary on Mr.Veerappan is being made on par with global standards with the participation of leading celebrities of the film industry.

A close associate of the leaders of the Dravidian Movement, Periyar, Arignar Anna, Puratchi Thalaivar MGR and Kalaignar Karunanidhi, Shri.R.M. Veerappan was also a successful film producer.

At the exit of MGR from DMK, Shri. RMV joined and helped start ADMK with MGR after the split.

During the regime of the former Chief Ministers M.G.R. and Jayalalitha, Shri. RMV had served as a Minister 5 times from 1977 to 1996!

He had served three times as a Member of the Legislative Council and twice as a Member of the Legislative Assembly.

He has produced more than 25 films in the Tamil film industry and delivered many blockbusters with MGR such as Deivathaai, Kaavalkaran, Nan Annaiyittal, Rickshakaran and Idhayakani. He also made movies Raanuva Veeran, Moondru Mugam, Baashha, Thangamagan, Oorkavalan and Panakkaran with Superstar Rajinikanth.

In order to honor the memory of Arulalar Shri. RM Veerappan, who is a significant personality in the history of Tamil Nadu, a world-class documentary is being made so that today’s younger generation and future generations can fully learn about him.

Produced by Sathya Movies’ Mr.Thangaraj Veerappan, this documentary is being made under the supervision of creative head Mr.Padam Venu Kumar and his team.
It is important to mention that Sathya Movies has already produced and released a tribute song for Shri. RM Veerappan, titled ” RMV:The Kingmaker”, released Sep 9, on Shri R.M Veerappan’s 99th Birthday on the Sathya Movies channel on YouTube, as well as across all the major Audio platforms globally, such as Wynk, Gaana, Spotify etc.

Many leading celebrities of Tamil cinema and political figures will. participate in this documentary and share their memories and information about Shri. R.M. Veerappan.

Mr. Thangaraj Veerappan and Mr.Padam Venu kumar met Isaignani Ilayaraja and discussed the project. Isaignani Ilayaraja congratulated them on the making of the documentary and also promised to participate in it.

Further updates on this documentary will be officially announced soon.

Pro. Bhuvan Selvaraj.

About admin

Check Also

Actor Karthi honours farmers with a cash prize of Rs. 2 Lakh.

‘Uzhavar Virudhugal 2025’ (Farmers Awards 2025) – An initiative by Uzhavan Foundation to honour and …

istanbul evden eve nakliyat eşya depolama evden eve nakliyat