தமிழ் சினிமாவின் முதல் திருநங்கை இயக்குனராக சம்யுக்தா விஜயன் இயக்கி நடித்துள்ள ‘நீல நிறச் சூரியன்’ ;  அக்-4ல் தமிழகமெங்கும் வெளியீடு

திருநங்கை சம்யுக்தா விஜயன் இயக்கி நடித்து வெளியாகும் முதல் தமிழ் திரைப்படம் ‘நீல நிறச் சூரியன்’ (Blue Sunshine). வரும் அக்டோபர் 4 ஆம் தேதி தமிழகமெங்கும் xforia Igene நிறுவனம் இந்த படத்தை வெளியிடுகிறது..  இப்படத்தின் சிறப்பம்சமே தமிழ் சினிமாவில் முதன்முறையாக சம்யுக்தா விஜயன் என்கிற ஒரு திருநங்கை இயக்கி நடித்துள்ள முதல் திரைப்படம் என்பது தான். 

அது மட்டுமில்லாமல், IFFI -23, மற்றும் பல உலக திரைப்பட விழாக்களில் பங்கு பெற்று, உலக சினிமா ரசிகர்கள் மட்டுமில்லாமல் நல்ல சினிமாக்களை விரும்பும் அனைவரும் பாராட்டிய படமாக இது உருவாகி இருக்கிறது.. இப்படத்தின் சிறப்பு காட்சிகளில் கலந்து கொண்ட திரைப்பிரபலங்களின் ஏகோபித்த பாராட்டுகளையும் இந்தப்படம் பெற்றிருக்கிறது. 

“ஒரு ஆண் பெண்ணாக மாற விரும்புவது குறித்து மட்டுமில்லாமல் நம் சமுதாயம் எப்படி அவர்களை பார்க்கிறது ? எப்படி அதை கடந்து இவர்கள் சாதிக்கிறார்கள் என்பதை எந்தவிதமான நாடகத்தன்மையும் இல்லாமல் கொடுக்க விரும்பினேன்” என்கிறார் திருநங்கை சம்யுக்தா விஜயன்.

இப்படத்தில் சம்யுக்தா விஜயன், கீதா கைலாசம், கஜராஜ், மஷாந்த் ஆகியோர் நடித்திருக்கிறார்கள். ஸ்டீவ் பெஞ்சமின் இசை, ஒளிப்பதிவு மற்றும் எடிட்டிங் ஆகிய மூன்று பொறுப்புகளையும் மிகச்சிறப்பான முறையில் வெளிப்படுத்தியிருக்கிறார்.

பர்ஸ்ட் காப்பி  புரொடக்‌ஷன் சார்பில் மாலா மணியன் இந்தப்படத்தை தயாரித்திருக்கிறார்.

About admin

Check Also

Actor Karthi honours farmers with a cash prize of Rs. 2 Lakh.

‘Uzhavar Virudhugal 2025’ (Farmers Awards 2025) – An initiative by Uzhavan Foundation to honour and …

istanbul evden eve nakliyat eşya depolama evden eve nakliyat