டி.தாமஸ் எலிசபெத் மகளிர் கல்லூரி சென்னை, தமிழ்த் துறை – பன்னாட்டுக் கருத்தரங்கம்.

சென்னை: செவாலியர் டி.தாமஸ் எலிசபெத் மகளிர்கல்லூரியும் அமெரிக்காவைச் சேர்ந்த பசுமைக்குடிநிறுவனமும்  உயிர்மை பதிப்பகமும் இணைந்து 28.6.2024 அன்று பன்னாட்டுக் கருத்தரங்கத்தை நடத்தியது ..சி.டி.டி.இ மகளிர் கல்லூரியின் மொழித்துறைத் தலைவர்முனைவர் க.பிரீதா அவர்கள் வரவேற்புரை வழங்கினார்.

இக்கருத்தரங்கில் சிறப்பு விருந்தினராகக் கவிஞர். மனுஷ்யபுத்திரன் கலந்துகொண்டு கருத்தரங்கஆய்வுக்கோவை நூலை வெளியிட்டார்.  சி.டி.டி கல்விஅறக்கட்டளையின் தாளாளர் மற்றும் செயலாளர் திரு.இல.பழமலை (இ.ஆ.ப ஓய்வு )அவர்கள் தலைமை தாங்கிஆய்வுக்கோவையின் முதல் பிரதியைப் பெற்றுக் கொள்ளநூல் வெளியீட்டு விழா இனிதே நடைபெற்றது.கவிஞர்.மனுஷ்யபுத்திரன் அவர்கள் உலகில் உள்ளஅனைத்து ஊர்களும் நம் ஊரே என்ற கருத்தினை எடுத்துக்கூறியதோடு அனைத்து வினைகளும் நம்மில் இருந்தேபிறக்கின்றன என்ற தத்துவத்தை இலக்கியத்தோடு ஒப்பிட்டுசிறப்புரையாற்றினார். சி.டி.டி கல்வி அறக்கட்டளையின்தாளாளர் அவர்கள் செவ்வியல் இலக்கிய நூல்களின்பரந்துபட்ட வாசிப்புத் தளத்தினூடே வாழ்வியல் ஒழுக்கக்கூறுகளைத் தத்துவ அடிப்படையில் எடுத்துக் கூறிதலைமையுரையாற்றினார். 

கல்லூரியின் துணை முதல்வர் முனைவர்.குயின்சி ஆஷாதாஸ் , அமெரிக்காவின் பசுமைக் குடி நிறுவனர் திரு. நரேந்திரன் கந்தசாமி ஆகியோர் வாழ்த்துரை வழங்கினர்.

அம்பேத்கர் அரசு கலைக் கல்லூரியின் தமிழ்த்துறைப்பேராசிரியர் து.ராஜகுமார் கருத்தரங்க பொருண்மைகளைவிளக்கியுரைத்தார். இக்கருத்தரங்கில் முப்பதுக்கும்மேற்பட்ட அறிஞர்கள் கட்டுரைகளை வழங்கி சிறப்புச்செய்தனர். நிகழ்ச்சியின் நிறைவாக தமிழ்த்துறைஉதவிப்பேராசிரியர் முனைவர் பா.அனிதா அவர்கள்அனைவருக்கும் நன்றி கூறினார்.

முனைவர் க.பிரீதா, முனைவர் து.ராஜகுமார்‌ ஆகியோர்இப்பன்னாட்டுக் கருத்தரங்கைச் சிறப்புறஒருங்கிணைத்தனர். 

About admin

Check Also

Summer Coaching Camp Award Function – 2024

The Directorate of Sports at SRM Institute of Science and Technology (SRM IST) successfully organized …

Advertisement

istanbul evden eve nakliyat eşya depolama evden eve nakliyat