திருவள்ளூர் கல்யாண குப்பம் சப்தகிரி நகரில் DPN நிறுவனத்தின் வீட்டு மனை பிரிவு தனிவீடுகள் திட்டத்தின் துவக்க விழா நடைபெற்றது FAIRA நிறுவன தேசிய தலைவர் டாக்டர் ஹென்றி வீட்டு மனை பிரிவு துவக்கி வைத்தார் FAIRAதேசிய நிர்வாக செயலர் ஜெயச்சந்திரன் விற்பனையை துவக்கி வைத்தார் இந்நிகழ்ச்சியில் DPN பங்குதாரர்கள் மற்றும் வாடிக்கையாளர்கள் நலம் விரும்பிகள் நண்பர்கள் உறவுகள் ஆகியோர் கலந்து கொண்டனர் கல்யாண குப்பம் கிராமம் சப்தகிரி நகர் ரெட்டில்ஸ் மற்றும் திருவள்ளூர் மாநில நெடுஞ்சாலைக்கு மிக அருகில் உள்ளது 24 மணி நேரம் பொது போக்குவரத்து வசதி உள்ளது ரயில் நிலையம் மிக அருகில் இருக்கிறது மேலும் சுவையான குடிநீர் பள்ளிகள், கல்லூரிகள், நிறுவனங்கள் மிக அருகில் உள்ளது மக்கள் வாங்கி பயன்பெறும் விதத்தில் உள்ளது இந்த வீட்டுமனை பிரிவின் துவக்க விழாவில் சிறப்பு அழைப்பாளர்கள் திமுக தலைமை செயற்குழு உறுப்பினர் திருவள்ளூர் மத்திய மாவட்ட பங்குதாரர் கோகுலம் எண்டர்பிரைசஸ் K.J. ரமேஷ்,
திருவள்ளூர் ஒன்றிய குழு பெருந்தலைவர் திருமதி ஜெய சீலி ஜெயபாலன், கல்யாண குப்பம் ஊராட்சி மன்ற தலைவர் திருமதி சுனிதா சுந்தர், திருவள்ளூர் ஒன்றிய குழு உறுப்பினர் திருமதி விமலா குமார்,
விடுதலை சிறுத்தைகள் கட்சி மாநில துணைச் செயலாளர் தளபதி சுந்தர்,
லயன்ஸ் கிளப் கவர்னர் ராஜபாண்டியன், FAiRA மாநிலச் செயலாளர் இன்ஜினியர்ஸ் குழு மோகன்,
M.R. சேம்பர் உரிமையாளர் தொழிலதிபர் செந்தாமரை, கோகுலம் எண்டர்பிரைசஸ் பங்குதாரர் T.N.P. ஹரி பாபு, மற்றும் DPN பங்குதாரர் நந்தினி சரஸ்வதி, DPN பங்குதாரர் தேவி, DPN பங்குதாரர் புவனேஸ்வரி, ஆகியோர் கலந்து கொண்டு சிறப்பித்தனர் இவர்களுக்கு FAiRA வின் தேசிய தலைவர் ஹென்றி அவர்கள் பொன்னாடை போர்த்தி பூங்கொத்து கொடுத்து வரவேற்றார் பின்னர் FAIRA நிறுவன தேசியத் தலைவர் டாக்டர் ஹென்றி செய்தியாளரிடம் பேசுகையில் DPN நிறுவனத்தின் வீட்டுமனை பிரிவு திட்டம் மிக உன்னதமானது என்றும் சாமானிய எளிய மக்களின் சொந்த வீடுகனவை நனவாக்கும் என்றும் தெரிவித்தார் மனிதன் வாழ தேவையான அனைத்து கட்டமைப்புகளும் இங்கு உள்ளதாகவும் மிக விரைவில் சென்னை மாநகர எல்லைக்குள் இந்த இடம் வர இருப்பதற்கு அரசாணை வெளியிடப்பட்டுள்ளதாகவும் தெரிவித்தார் மேலும் நிலம் வாங்குபவர்களுக்கு கடன் வசதிகள் செய்து தரப்பட்டு வீடுகளும் கட்டித் தரப்படும் என்று தெரிவித்தார்.
Check Also
Centaur Billing expands it’s operations in Chennai with a second state-of-the-art facility, aiming to double workforce by 2025
Chennai, Dec 14, 2024: Centaur Billing, a prominent US-based healthcare revenue cycle management firm, has significantly …