சென்னை, பிப்ரவரி 2023: இந்தியாவில் நவீன காதலர்கள் குறித்து நடத்தப்பட்ட ஒரு ஆய்வில் இந்தியர்கள் காதலை எப்படி வரையறுத்து வெளிப்படுத்துகிறார்கள் என்னும் சுவாரசியமான தகவல்கள் இடம்பெற்றுள்ளன. இந்தியாவில் டேட்டிங் கலாச்சாரம் பெருகி வரும் நிலையில், இன்றைய இளைஞர்களின் டேட்டிங் விருப்பங்கள் எவ்வாறு உள்ளது என்பது குறித்து பம்பிள் நிறுவனம் ஒரு ஆய்வை நடத்தியது. அதில் காதல் உணர்வை மிகுதியாக அதிகரிக்க கூடியவை, காதல் கடிதங்கள் என 63% பேரும், மெழுகுவர்த்தியுடன் கூடிய இரவு உணவு என 66% பேரும், விலையுயர்ந்த பரிசுகள் என 51% பேரும் தெரிவித்துள்ளனர்.
இந்த ஆய்வில் 39% இளைஞர்கள் காதலர் தினம்மிகைப்படுத்தப்பட்டதாகவும் அதைக் கொண்டாடவேண்டிய அவசியம் இல்லை என்றும் கூறுகிறார்கள். அதே நேரம் காதலர் தினம் கொண்டாடப்பட வேண்டும்என்று விரும்புகிற இளைஞர்களின் விகிதமும் 39% ஆகவுள்ளது. இந்திய இளைஞர்கள் காதலில்நேர்மையை அதிகமாக எதிர்பார்க்கிறார்கள், குறிப்பாக பெண்கள் தங்களுக்கானமுக்கியத்துவத்தை பெரிதும் விரும்புகிறார்கள். நேர்மையான காதலை 49% பேரும், முதலில்நண்பர்களாக இருக்க வேண்டுமென்று 43% பேரும், குறுஞ்செய்திகளுக்கு விரைவாக பதிலளிக்கவேண்டுமென்று 26% பேரும் விரும்புகிறார்கள். 39% இந்திய இளைஞர்கள் தங்கள் விருப்பங்கள் மற்றும்எதிர்பார்ப்புகளைப் பற்றி வெளிப்படையாக உரையாடவிரும்புகிறார்கள், அதே நேரத்தில் 38% பேர்பேசுவதற்கு எளிதான மற்றும் அவர்களைப்புரிந்துகொள்ளும் ஒருவரை காதலிக்கவிரும்புகிறார்கள்.
கருத்துக்கணிப்புக்கு உட்படுத்தப்பட்ட 42% இளைஞர்கள் சமூக ஊடகங்களில் தங்கள்இணையுடன் காட்சி பதிவிடுவதை காதல் உணர்வுஎன்று கருதுகின்றனர், 34% பேர் அவற்றை கிளிஷேஎன்று கருதுகின்றனர். கணக்கெடுக்கப்பட்ட 54% ஒற்றை இந்தியர்கள் தொடர்சியாக தங்கள் இணைமீது கவனம் செலுத்துவதை காதல் என்றுகருதுகின்றனர், 26% பேர் மட்டுமே அதை கிளிஷேஎன்று கருதுகின்றனர். கணக்கெடுக்கப்பட்ட 41% ஒற்றை இந்தியர்கள் தீரச்செயல்களில் ஈடுபடுவதைகாதல் என்று கருதுகின்றனர், 32% பேர் மட்டுமேஅதை கிளிஷே என்று கருதுகின்றனர்
பதிலளித்தவர்களில் பாதிக்கும் மேற்பட்டவர்கள் (53%) டேட்டிங் செய்யும் போது ஒன்றாக வாழ்வதே தங்களது’இறுதி இலக்கு’ என்றும், கிட்டத்தட்ட பாதி (49%) பதிலளித்தவர்கள் ஒரு உறவைத் தேடும்போதுதிருமணம் செய்துகொள்வது அவர்களின் ‘இறுதிஇலக்கு’ என்றும் கூறியுள்ளனர். இளைஞர்கள்ஒருவருடன் டேட்டிங் செய்யும்போது, அவர்களின்இணக்கத்தன்மைக்கு முன்னுரிமை அளிக்கவிரும்புகிறார்கள். இந்தியாவில், வயது இடைவெளிஅதிகம் உள்ள காதலர்கள் சமூகத்தால் அதிகம்பிரச்சினைகளை எதிர்கொள்கிறார்கள்.
“2023 ஆம் ஆண்டில், மக்கள் தங்கள் விருப்பங்கள், ஆசைகள் மற்றும் தேவைகளில் சமரசம் செய்யாமல், காலாவதியான, பழமையான டேட்டிங்விதிமுறைகளுக்கு சவால் அளிப்பதில் கவனம்செலுத்த விரும்புகிறார்கள். பெண்கள் உடல்தேவைகளை விட உணர்ச்சி ரீதியான நெருக்கத்திற்குமுன்னுரிமை கொடுக்கிறார்கள், மேலும் வயதுஇடைவெளிகள் மற்றும் சமூகத்தின் பார்வை பற்றிகவலைப்படாமல் டேட்டிங் செய்ய தயாராகவுள்ளனர். இந்த நேர்மறையான மாற்றங்களில் சில இந்தியாவில்டேட்டிங் கலாச்சாரங்கள் தொடர்ந்து உருவாகிவருவதைப் பார்க்க ஊக்கமளிக்கிறது. பம்பளில், ஆரோக்கியமான மற்றும் சமமான இணைப்புகளைஉருவாக்க எங்கள் சமூகத்தை தொடர்ந்துஊக்குவிப்போம் மற்றும் ஆதரவளிப்போம்” என்றுபம்பலின் இந்திய தகவல் தொடர்பு இயக்குனர்சமர்பிதா சமதர் கூறுகிறார்.
ஆகஸ்ட் மற்றும் டிசம்பர் 2022 இல் இந்தியாவில்உள்ள 2000 இளைஞர்களிடையே பம்பிள்நிறுவனத்தால் நியமிக்கப்பட்ட யூகோவ் மார்க்கெட்ஆராய்ச்சி நிறுவனத்தால் நடத்தப்பட்ட நாடு தழுவியஆய்வுகளின் தரவுகளின் படி இந்த அறிக்கைதயாரிக்கப்பட்டுள்ளது. பெண்களின் முதல் டேட்டிங்மற்றும் சமூக வலைப்பின்னல் பயன்பாடான பம்பிள், 2014 இல் விட்னி வுல்ப் ஹெர்ட் என்பவரால்நிறுவப்பட்டது. சமமான உறவுகளின் முக்கியத்துவம்மற்றும் ஆரோக்கியமான, மகிழ்ச்சியான வாழ்க்கைக்குஅவை எவ்வளவு முக்கியம் என்பதன் அடிப்படையில்பம்பிள் கட்டமைக்கப்பட்டுள்ளது.