ஏர் இந்தியா பல மொழி சேவை மூலம்வாடிக்கையாளர்களுக்கான  சேவையைமேம்படுத்துகிறது!

இந்தியாவின் முன்னணிஉலகளாவிய விமான சேவை நிறுவனமான ஏர் இந்தியா தமிழ்,தெலுங்குகன்னடம்மலையாளம்மராத்திபெங்காலி மற்றும்பஞ்சாபி உள்ளிட்ட ஏழு இந்திய மொழிகளில் தனது 24 மணிநேர வாடிக்கையாளர் சேவையை அறிமுகப்படுத்தி இருக்கிறது.இதன் மூலம் ஹிந்தி மற்றும் ஆங்கிலம் ஆகிய மொழிகளுடன்,இப்போது இந்த ஏழு பிராந்திய மொழிகளிலும் வாடிக்கையாளர்சேவையை ஏர் இந்தியா வழங்குகிறது. 

இந்தியா ஒரு மிகப்பெரும் நாடாக, பிரமிக்க வைக்கும்வகையில் மொழியியல் பன்முகத்தன்மையைக் கொண்டுள்ளது.அதேபோல், இந்தியா முழுவதிலும் பல்வேறு பேச்சுவழக்குகள்நடைமுறையில் உள்ளன. இதை கருத்தில் கொண்டுஇந்தியாவின் இந்த ஏழு பிராந்திய மொழிகளைஒருங்கிணைப்பதன் மூலம், ஏர் இந்தியா வாடிக்கையாளர்அனுபவத்தை மேம்படுத்தி இருக்கிறது.  மேலும், தங்களதுதாய்மொழிகளில் தொடர்பு கொள்ள விரும்பும் பயணிகளுக்குஅதற்கான வாய்ப்பை அளிக்கவேண்டும் என்பதை நோக்கமாகக்கொண்டு அறிமுகப்படுத்தியுள்ளது. இந்திய பிராந்தியமொழிகளில் மேம்படுத்தப்பட்ட வாடிக்கையாளர் சேவை, ‘இந்திய உணர்வுடன் கூடிய உலகளாவிய விமான நிறுவனம்’ [global airline with an Indian heart’] என்ற விமானநிறுவனத்தின் தொலைநோக்குப் பார்வையை பிரதிபலிக்கிறது.

ஏர் இந்தியாவின் வாடிக்கையாளர்கள் விமான சேவைதொடர்பான முன்பதிவு மற்றும் தகவல் விசாரணைகளுக்காகதொடர்பு கொள்ள உதவும் ஐவிஆர் [IVR system]முறையானது, இப்போது வாடிக்கையாளரின் மொபைல்நெட்வொர்க்கின் அடிப்படையில் அவர்களது மொழிவிருப்பத்தை தானாகவே அடையாளம் கண்டுகொள்ளும் என்பதுகுறிப்பிடத்தக்கது. இதனால் வாடிக்கையாளர்கள் தங்களுக்குவிருப்பமான மொழியை அவர்களாகவே தேர்ந்தெடுக்க வேண்டியதேவை இனி இல்லை. மேலும் அவர்கள், தங்களுக்குவிருப்பமான மொழியைத் தேர்ந்தெடுக்க காத்திருக்கும்நேரத்தையும் வெகுவாக குறைக்கிறது.

“இந்தியாவின் பிராந்திய மொழிகளை வாடிக்கையாளர்சேவையில் இணைத்து, பன்மொழியில் வாடிக்கையாளர்களுக்குமேம்பட்ட சேவையை அறிமுகம் செய்திருப்பது, எங்களதுநவீனமயான புதுப்பயணத்தில் ஒரு குறிப்பிடத்தக்கமைல்கல்லைக் குறிப்பதாக அமைந்திருக்கிறது. இந்த இந்தியமொழிகளை எங்கள் வாடிக்கையாளர் ஆதரவு சேவைகளில்ஒருங்கிணைப்பதன் மூலம், நாங்கள் எங்களதுவாடிக்கையாளர்களிடம் சென்றடைவதை மேலும் தீவிரப்படுத்திஇருக்கிறோம். விரிவுபடுத்துவது. அது மட்டுமல்லாமல், எங்கள்வாடிக்கையாளர்களுடனான உறவை மேலும் நெருக்கமானதாகவலுப்படுத்துகிறோம், ஏர் இந்தியாவுடன் ஒவ்வொருவாடிக்கையாளரும் தொடர்பு கொள்வதை அவர்களுக்குபரீட்ச்சயமானதாகவும், எல்லோராலும் பயன்படுத்த கூடியதாகவும்இருப்பதை உறுதிசெய்கிறோம்.’’ என்று ஏர் இந்தியாவின்தலைமை வாடிக்கையாளர் சேவை அதிகாரி ராஜேஷ் டோக்ரா[Rajesh Dogra, Chief Customer Experience Officer, Air Indiaதெரிவித்தார்.

சமீபத்தில், ஏர் இந்தியா தனது வாடிக்கையாளர்கள் தொடர்புகொள்வதற்காக ஐந்து புதிய தொடர்பு மையங்களைஅமைத்துள்ளது, உலகெங்கிலும் உள்ளவாடிக்கையாளர்களுக்கு உதவும் வகையிலும், பிரீமியம் மற்றும்அடிக்கடி பயணிக்கும் வாடிக்கையாளர்களுக்கான பிரத்தியேகசேவை பிரிவையும் 24 மணி நேர சேவையாக வழங்குகிறது. ஏர்இந்தியா வாடிக்கையாளர்களுக்கு இந்திய மொழிகளில்அளிக்கப்படும் சிறப்பு உதவி, தினமும் 08.00 மணி முதல்23.00 மணி வரை வழங்கப்படுகிறது. மேலும், ஏர் இந்தியாமின்னஞ்சல்கள், சமூக ஊடகங்கள் மற்றும் வாடிக்கையாளர்கள்தேவையான தகவல்களைப் பெற உதவும் சாட் வசதியைஉள்நாட்டில் நிர்வகிக்க பேக்- ஆபீஸ் இன்சோர்சிங்செயல்பாட்டு உத்தியை செயல்படுத்தி இருக்கிறது. இதுவாடிக்கையாளர் சேவையின் தரம் மற்றும் செயல்திறனைவெகுவாக மேம்படுத்தியிருக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.

தமிழ் மற்றும் இதர இந்திய மொழிகளில் வழங்கப்படும் வாடிக்கையாளர் சேவையை பற்றி மேலும் தெரிந்து கொள்ள கீழே குறிப்பிட்டுள்ள கட்டணமில்லா இலவச எண்ணிற்கு தொடர்பு கொள்ள 0116 932 9333 / 0116 932 9999

About admin

Check Also

Senior Living Lifestyle Expo 2024 To Be Held in Chennai

Chennai, 18th September 2024: The Senior Living Lifestyle Expo, a unique event dedicated to enhancing the …

istanbul evden eve nakliyat eşya depolama evden eve nakliyat