அன்னை ஜானகி எம்.ஜி.ஆர். அவர்களின்நூற்றாண்டு விழாவை அதிமுககொண்டாடுவதை மனப்பூர்வமாகவரவேற்கிறோம்!

சென்னை. 26 டிச. 2023

சென்னையில் இன்று (26.12.2023) நடைபெற்ற அதிமுகஇயக்கத்தின் செயற்குழு மற்றும் பொதுக்குழு கூட்டத்தில்அன்னை ஜானகி எம்.ஜி.ஆர். அவர்களின் நூற்றாண்டுவிழாவைச் சிறப்பாக கொண்டாடுவது எனமுடிவெடுக்கப்பட்டிருப்பதற்கு நன்றி தெரிவித்து,​டாக்டர் எம்ஜிஆர் அவர்களின் உறவினரும், எம்.ஜி.ஆர்.-ஜானகி மகளிர் கல்லூரியின் தலைவருமான முனைவர் குமார் ராஜேந்திரன் வெளியிட்டிருக்கும் அறிக்கையில் கூறியிருப்பதாவது:

“சென்னையில் இன்று (26.12.2023) நடைபெற்ற அதிமுகஇயக்கத்தின் செயற்குழு மற்றும் பொதுக்குழு கூட்டத்தில்அன்னை ஜானகி எம்.ஜி.ஆர். அவர்களின் நூற்றாண்டுவிழாவைச் சிறப்பாக கொண்டாடுவது எனமுடிவெடுக்கப்பட்டிருப்பதற்கு புரட்சித் தலைவர் அவர்களின்கோடிக்கணக்கான தொண்டர்கள் சார்பிலும் மக்கள்திலகத்தின் குடும்பத்தார் சார்பிலும் ஜானகி அம்மையார்குடும்பத்தார் சார்பிலும் நெஞ்சார்ந்த வாழ்த்துகளையும், நன்றியையும் தெரிவித்துக் கொள்கிறோம்.

அன்னை ஜானகி எம்.ஜி.ஆர். அவர்கள் பொன்மனச்செம்மலின் நிழலைப்போலவே அவருடன் இருந்துஇறுதிவரை அவரை பாதுகாத்தவர். எப்போதும்தொண்டர்கள் மனதில் வாழ்ந்து கொண்டிருக்கின்ற மக்கள்திலகம் எம்.ஜி.ஆர். அவர்களுக்கு பாரத ரத்னா விருது (1988) கிடைத்தபோது அதைப் பெற்றுக் கொண்டபெருமைக்குரியவர் ஜானகி அம்மையார்.

மக்கள் திலகம் மறைவிற்குப் பிறகு தமிழகத்தின் முதல்பெண் முதலமைச்சராக பொறுப்பேற்றவரும் அவர்தான். 

பிளவுபட்டிருந்த அதிமுக அணிகளை 1989-ல் ஒன்று சேர்த்தஜானகி அம்மையார், புரட்சித்தலைவரால் அடையாளம்காட்டப்பட்ட இரட்டை இலைச் சின்னத்தை மீட்டுக்கொண்டுவந்தவர். அவருக்குச் சொந்தமான அலுவலகம்தான் தற்போதும் சென்னை ராயப்பேட்டையில் அதிமுகவின்தலைமைக் கழக அலுவலகமாக இயங்கி வருகிறது. 

தன்னுடைய வாழ்நாளில் இறுதிவரை அதிமுக என்றஇயக்கத்தை பாதுகாத்த திருமதி ஜானகி எம்.ஜி.ஆர்.அவர்களுக்கு அவருடைய நூற்றாண்டு தருணத்தில் விழாஎடுக்க அதிமுக முன்வந்திருப்பது கூடுதல் சிறப்பு. அதிமுகதொண்டர்கள் ஒவ்வொருவரையும் உற்சாகம் கொள்ளவைக்கும்.

இப்படிப்பட்ட சிறப்புமிக்க ஜானகி அம்மையார் அவர்களுக்குவிழா எடுக்கும் நேரத்தில் அவருடைய முழு திருவுருவச்சிலையை அதிமுக தலைமைக் கழக அலுவலகத்தில்நிறுவுவது அவருக்கும் பெருமை சேர்க்கும். மக்கள் திலகமும்ஜானகி அம்மையாரும் பாதுகாத்து வளர்த்த அதிமுகஇயக்கத்திற்கும் பெருமை சேர்க்கும்”.

இவ்வாறு அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

About admin

Check Also

World’s biggest International Temples Convention and Expo announces its second edition in Tirupati in February 2025

Chennai: The International Temples Convention and Expo (ITCX) makes a grand return with its highly …

istanbul evden eve nakliyat eşya depolama evden eve nakliyat