கார்ப்பரேட் நிறுவனங்களில் பணியாற்றும் ஊழியர்கள் இடையே இதயம், மூளை செயல்பாடு குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்த பிரசாந்த் மருத்துவமனைகள்

சென்னை, பிப்.
கார்ப்பரேட் நிறுவனங்களில் பணியாற்றும் கார்ப்பரேட் ஊழியர்கள் இடையே உடல் ஆரோக்கியத்தை வலியுறுத்தும் வகையில் பிரசாந்த் மருத்துவமனைகள் சார்பில் ஆண்டுதோறும் கிரிக்கெட் போட்டி நடத்தப்பட்டு வருகிறது.
இந்த ஆண்டு கார்ப்பரேட் ஊழியர்கள் இடையே இதயம் மற்றும் நரம்பியல் ஆரோக்கியத்தின் முக்கியத்துவத்தை வலியுறுத்தும் வகையில் கார்ப்பரேட் கிரிக்கெட் போட்டியின் 3வது பதிப்பின் இறுதிப் போட்டி இன்று புதுவாயலில் உள்ள டிஜேஎஸ் பொறியியல் கல்லூரியில் நடைபெற்றது.

கும்மிடிப்பூண்டி ரோட்டரி கிளப், எஸ்2எஸ் எச்ஆர் மன்றம் மற்றும் ஐசிஎம்ஏ சிப்காட் ஆகியவற்றுடன் இணைந்து பிரசாந்த் மருத்துவமனை நடத்திய இந்த இறுதிப் போட்டியில் டிஜேஎஸ் குழும நிறுவனங்களின் தலைவரும், சட்டமன்ற உறுப்பினருமான டி.ஜே. கோவிந்தராஜன் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டார். அவருடன் பிரசாந்த் மருத்துவமனையின் முக்கிய நிர்வாகிகளும், நிர்வாக இயக்குனர் டாக்டர் பிரசாந்த் கிருஷ்ணா மற்றும் குழும தலைமை நிர்வாக அதிகாரி டாக்டர் பாஸ்கரன் உள்ளிட்டோரும் கலந்து கொண்டனர்.

கிரிக்கெட் போட்டியின் மூலம் திரட்டப்பட்ட ரூ.1.8 லட்சம் நிதியை கும்மிடிப்பூண்டி மற்றும் பொன்னேரி மற்றும் அதைச் சுற்றியுள்ள பகுதிகளிலும் சமூக விழிப்புணர்வு நடவடிக்கைகளை மேற்கொள்ள ரோட்டரி மாவட்டம் 3232க்கு நன்கொடையாக பிரசாந்த் மருத்துவமனை வழங்கியது.
சுறுசுறுப்பான வாழ்க்கை முறை, இதயம் மற்றும் மூளையை ஆரோக்கியமாக வைத்திருப்பதை வலியுறுத்தும் வகையில், இம்மருத்துவமனை மேற்கொண்டு வரும் ‘சேவ் யங் ஹார்ட்ஸ்’ என்னும் பிரச்சாரத்தின் ஒரு பகுதியாக நடத்தப்பட்ட இந்த கிரிக்கெட் போட்டி கார்ப்பரேட் நிறுவனங்கள் இடையே மிகுந்த வரவேற்பை பெற்றுள்ளது.

மூன்று வாரங்கள் நடைபெற்ற இந்தப் போட்டியில், கும்மிடிப்பூண்டி பகுதியைச் சுற்றியுள்ள 36 கார்ப்பரேட் நிறுவனங்களின் அணிகள் கலந்து கொண்டன. இதன் இறுதிப் போட்டி இன்று நடைபெற்றது. இதில் வெஸ்டர்ன் தாம்சன் குழு (Western Thomson Groups) அணி வெற்றி பெற்று முதலிடம் பிடித்து சாம்பியன் பட்டத்துடன் 50 ஆயிரம் ரூபாய் ரொக்கப் பரிசையும், மிச்செலின் இந்தியா பிரைவேட் லிமிடெட், தெர்வோய் கண்டிகை

(Michelin India Pvt Ltd, Thervoy Kandigai) அணி இரண்டாம் இடம் பிடித்து ரூ.25 ஆயிரம் ரொக்கப் பரிசையும் வென்றது.

இந்நிகழ்ச்சியில் பிரசாந்த் மருத்துவமனைகள் நிர்வாக இயக்குனர் டாக்டர் பிரசாந்த் கிருஷ்ணா பேசுகையில், மக்களுக்கு உலகத்தரம் வாய்ந்த மருத்துவ சிகிச்சையை வழங்குவது மட்டுமல்லாமல், அவர்கள் முன்னெச்சரிக்கையாக இருக்க பல்வேறு விழிப்புணர்வு நிகழ்ச்சிகளையும் நாங்கள் நடத்தி வருகிறோம். எங்களின் ‘சேவ் யங் ஹார்ட்ஸ்’ என்னும் பிரச்சாரம் மூலம் அனைவரிடமும் இதயத்தை ஆரோக்கியமாக பராமரிப்பது குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தும் அதே வேளையில், நரம்பியல் சம்பந்தமான பிரச்சினைகள் குறித்தும் விழிப்புணர்வை ஏற்படுத்தி வருகிறோம். கார்ப்பரேட் நிறுவனங்களுக்கிடையே இடையே இதயப் பிரச்சினைகள் மற்றும் மன அழுத்தம் தொடர்பான நரம்பியல் பிரச்சினைகளும் அதிகரித்து வருவதால், கிரிக்கெட் போன்ற விளையாட்டுகள் இதய செயல்பாட்டை மேம்படுத்துவதோடு, மன அழுத்தத்தையும் குறைத்து, ஒட்டுமொத்த நல்வாழ்வையும் மேம்படுத்தும் என்று நாங்கள் நம்புகிறோம். இந்தப் போட்டிக்கு கார்ப்பரேட் நிறுவனங்கள் இடையே கிடைத்த வரவேற்பை பார்க்கையில் எங்களுக்கு மிகுந்த உற்சாகமாக இருக்கிறது என்று தெரிவித்தார்.

டிஜேஎஸ் குழும நிறுவனங்களின் தலைவரும், சட்டமன்ற உறுப்பினருமான டி.ஜே. கோவிந்தராஜன் பேசுகையில், பிரசாந்த் மருத்துவமனை மேற்கொண்ட இத்தகைய முயற்சியை பார்க்கையில் பெருமையாக உள்ளது. இந்தப் போட்டி இதில் பங்கேற்றவர்களின் சிறந்த விளையாட்டுத் திறனை வெளிப்படுத்தியது மட்டுமல்லாமல், இதய நோய், பக்கவாதம் மற்றும் மன அழுத்தம் தொடர்பான நரம்பியல் கோளாறுகளைத் தடுப்பதில் சுறுசுறுப்பான வாழ்க்கை முறையின் முக்கியத்துவத்தையும் வலியுறுத்தி உள்ளது. கடும் பணிச்சூழல்கள் காரணமாக உடல்நல பாதிப்புகள் அதிகரித்து வருவதால், இதுபோன்ற நிகழ்ச்சிகள் அவர்களின் உடல்நலத்தை ஆரோக்கியமாக வைத்திருப்பதற்கான விழிப்புணர்வை ஏற்படுத்துவதோடு, அவர்களின் வாழ்க்கையில் சிறந்த மாற்றத்தையும் ஏற்படுத்தும். அந்த மாற்றத்தைக் கொண்டுவரும் பிரசாந்த் மருத்துவமனைகளை நான் இத்தருணத்தில் மனதாரப் பாராட்டுகிறேன் என்றார்.

About Prashanth Hospitals: Prashanth Hospitals is a multidisciplinary hospital that provides sophisticated and dedicated healthcare services by professionally trained experts. Prashanth Super-specialty Hospital at Velachery and Kolathur is one of the best- and well-known multi-specialty hospitals in Chennai. These facilities have well trained and skilled nursing staff who can take good care of the patients. The vision is to become an internationally renowned medical institute by providing excellent health care services to the patients, and the mission is to maintain the trust of the patient by providing good quality of health care. The values on which Prashanth Super-specialty Hospitals function are quality of care, respect, competence, the effectiveness of the treatment, safety, and creating health awareness among the people. Prashanth Super-specialty Hospitals also provides various health care packages for check-ups and diagnosis of any ailment and their treatments.

About admin

Check Also

SIMS Hospital Successfully Performs Life-Changing Precision Neurosurgery Guided by Advanced Neurophysiology

Chennai, February 2025— Hemifacial Spasm (HFS), often referred to as “winking disease,” is a debilitating …

istanbul evden eve nakliyat eşya depolama evden eve nakliyat