திகிலூட்டும் அமானுஷ்ய சம்பவங்கள் நிறைந்த ‘ஜெனி’..!

பல்லாண்டுகள் தமிழ்த் திரையுலகில் வெற்றி எழுத்தாளராக தயாரிப்பாளராக வலம் வந்தவர் திரைப்பட வித்தகர் தூயவன்.

அவரது புதல்வர் பாபு தூயவன் தமிழ்நாடு திரைப்படக் கல்லூரியில் பயின்று ‘கதம் கதம்’ என்ற படத்தை தயாரித்து இயக்கியிருந்தார். ‘இட்லி’ என்ற படத்தையும் தயாரித்திருக்கிறார். அவரது மேற்பார்வையில் அவரது துணைவியார் A. முஸ்தரி தயாரித்திருக்கும் திகில் படம் தான் ‘ஜெனி’.   

திரைப்படக் கல்லூரியில் பயின்று சில படங்களையும் ஏராளமான தொலைக்காட்சி தொடர்களையும் இயக்கியிருக்கும் நித்தியானந்தம்.B இயக்கத்தில் இந்தப்படம் உருவாகி இருக்கிறது

பாரீஸ் ஜெயராஜ் படத்தின் முக்கிய வேடத்தில் நடித்த விவாந்த் நாயகனாக நடித்துள்ளார். ‘மைடியர் பூதம்’ திரைப் படத்தில் குழந்தை நாயகனாக மிரட்டிய பரம் விக்னேஷ் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். 

இவர்களோடு மைதிலி, பிஜாய் மேனன், ஆக்க்ஷன் பிரகாஷ் ஆகியோர்  பிரதான வேடங்களில் நடித்திருக்கிறார்கள்.

துஷ்ட ஆவி ஒன்று சிறுவனை ஆக்ரமிக்க முயல அதிலிருந்து தன்னையும் தன் குடும்பத்தையும் காக்க அந்த சிறுவனும் அவர் தந்தையும் போராடும் திகிலூட்டும் அமானுஷ்ய சம்பவங்கள் நிறைந்த இந்தப் படத்தின் கதை, திரைக் கதையை அறிவாற்றல்

பிதா எழுத வசனத்தை பாஸ்கர் ராஜ் எழுதியிருக்கிறார்.

யுதீஷ் இசையமைத்துள்ளார். திரைப் படக் கல்லூரி மாணவர்களான கீதாகரன் ஒளிப்பதிவு செய்துள்ளார் ஹரிகுமரன் படத்தொகுப்பு செய்துள்ளார். இணை தயாரிப்பு – A.M.சயீஃப், நிர்வாக தயாரிப்பு – K. தங்கராஜ்.

இரசிகர்களை இருக்கை நுனியில் பதைபதைப்போடு பார்க்க வைக்கும் திரைப்படஉலகம் பிரமாண்டமாய் பிரபஞ்ச அளவுக்கு விரிந்து கொண்டிருக்கும் இந்த வேளையில் குறுகிய முதலீட்டில் குறுகிய கால அளவில் நல்ல படைப்பாளிகளை மட்டுமே வைத்து அழுத்தமான படைப்பாக இந்த படம் உருவாகி இருக்கிறது.  

இரசிகர்கள்  நல்ல உணர்வு பூர்வமான படங்களுக்கு என்றென்றும் ஆதரவு தந்து கொண்டிருக்கிறார்கள் என்ற நம்பிக்கையில் பாபு தூயவன் – A. முஸ்தரி தயாரித்திருக்கும் ‘ஜெனி’ திரைப்படம் விரைவில் வெள்ளித் திரையில் உங்களை பரவசப்படுத்த வருகிறது.

இது ஒரு திரைப் படக் கல்லூரி மாணவர்களின் மாறுபட்ட படைப்பு.

About admin

Check Also

Karky Tamil Academy and Silverzone Organization Announce “Tamil Olympiad” Launched at Future of Education 2024 Conference

Chennai, October 2024 The Future of Education 2024 conference took place today at the IIT …

istanbul evden eve nakliyat eşya depolama evden eve nakliyat