தகவல் பாதுகாப்பு உள்கட்டமைப்பிற்காகஒமேகா ஹெல்த்கேர் நிறுவனத்திற்கு ஹைடிரஸ்ட் (i1) சான்றிதழ்

பெங்களூர்,
சுகாதார சுற்றுச்சூழல் அமைப்பை ஆதரிக்கும் வகையில் சுகாதார மேலாண்மைக்கான சிறந்த தீர்வுகளை வழங்கும் முன்னணி நிறுவனங்களில் ஒன்றான ஒமேகா ஹெல்த்கேர் நிறுவனம் தகவல் பாதுகாப்பிற்காக ஹைடிரஸ்ட் சான்றிதழை பெற்றிருப்பதாக அறிவித்துள்ளது.
தற்போதைய மற்றும் வளர்ந்து வரும் இணைய அச்சுறுத்தல்களுக்கு எதிராக பரந்து விரிந்த முழுமையான இணையப் பாதுகாப்புத் திட்டத்தின் மூலம் எந்தவிதான சிக்கல் மற்றும் பிரச்சினைகள் இல்லாமல் முக்கிய தகவல் பாதுகாப்புக் கட்டுப்பாடுகளை சரியான முறையில் நிர்வகித்து வருவதை கருத்தில் கொண்டு இந்நிறுவனத்திற்கு ஹைடிரஸ்ட் (i1) சான்றிதழ் வழங்கப்பட்டுள்ளது. இந்த சாதனை மூலம், ஹைடிரஸ்ட் i1 சான்றிதழைப் பெற்ற நிறுவனங்களின் பட்டியலில் ஒமேகா ஹெல்த்கேர் நிறுவனமும் இணைந்துள்ளது. தகுந்த பாதுகாப்புக் கட்டுப்பாடுகளுடன் சீரமைத்தல் மற்றும் ஒருங்கிணைப்பதன் மூலம், இணைய பாதுகாப்பு சவால்களை எதிர்கொள்ளவும், இணைய பாதுகாப்பு தொடர்பாக எங்கள் செயல்பாடுகளை மேலும் விரிவுபடுத்தவும் இந்த சான்றிதழ் எங்களுக்கு மிகுந்த உற்சாகத்தை அளிக்கிறது என்று இந்நிறுவனம் தெரிவித்துள்ளது.
இது குறித்து ஒமேகா ஹெல்த்கேர் நிறுவனத்தின் தலைவரும், தலைமை செயல்பாட்டு அதிகாரியுமான சுமித் சச்தேவா கூறுகையில், ஹைடிரஸ்ட் i1 சான்றிதழ் எங்கள் உள் மற்றும் வெளிப்புற பங்குதாரர்களுக்கு நாங்கள் முன்னணி பாதுகாப்பு நடைமுறைகளைப் பின்பற்றுகிறோம் என்ற நம்பிக்கையை அளிக்கிறது. தகவல் பாதுகாப்பு அபாயத்தைக் குறைப்பதற்கும், எங்கள் வணிக நிறுவனங்களுடன் சேர்ந்து எங்கள் நிறுவனத்தைப் பாதுகாப்பதற்கும் வலுவான இணையப் பாதுகாப்பை மேற்கொள்வது என்பது மிகவும் முக்கியமானதாகும். i1 சான்றிதழை நாங்கள் பெற்றிருப்பது என்பது, எங்களின் இணையப் பாதுகாப்பு மற்றும் தரவுப் பாதுகாப்பிற்கான சிறந்த சான்றாகும் என்று தெரிவித்தார்.
இது குறித்து ஹைடிரஸ்ட் நிறுவனத்தின் தலைமை கண்டுபிடிப்பு அதிகாரி ஜெர்மி ஹுவல் கூறுகையில், தகவல் பாதுகாப்பு சவால்களை எதிர்கொள்ள புதிய மற்றும் ஆக்கப்பூர்வமான அணுகுமுறைகளைக் கண்டறிய எங்கள் நிறுவனம் தொடர்ந்து பல்வேறு புதுமைகளைச் செய்து வருகிறது, ஒமேகா ஹெல்த்கேர் நிறுவனத்திற்கு வழங்கப்பட்டுள்ள இந்த சான்றிதழ் என்பது, தகவல் இடர் மேலாண்மை மற்றும் இணையப் பாதுகாப்பிற்காக அந்நிறுவனம் மேற்கொண்டு வரும் சிறந்த நடைமுறைகளுக்காக வழங்கப்பட்டுள்ளது என்று தெரிவித்தார்

About admin

Check Also

Turyaa Chennai Hosts the Elite and Untameable New Year Party with a Thrilling Twist! 

 Chennai, Tamil Nadu– December 2024: Turyaa Chennai is set to end the year in style …

istanbul evden eve nakliyat eşya depolama evden eve nakliyat