இந்தியாவின் முன்னணி கைக்கடிகார பிராண்டான சொனாட்டா, தமிழ்நாட்டின் செழுமையான பாரம்பரியம் மற்றும்வளமையான கலாச்சாரத்தைக் கெளரவித்து மரியாதை செலுத்தும் வகையில் மிக நேர்த்தியாக வடிவமைக்கப்பட்ட,பிராந்திய பதிப்பு கடிகாரத்தை அறிமுகப்படுத்துகிறது. உற்சாகம்பொங்கும் பொங்கல் பண்டிகையைக் கொண்டாடும்தருணத்தில், புதிய தொடங்கங்களையும், நம்முடையநன்றியுணர்வையும் குறிக்கும் வகையில் ஒரு அர்த்தமுள்ளபரிசாக இத்தொகுப்பு அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.நுணுக்கமான கலைத்திறன் மற்றும் துல்லியமான செயல்பாடுஆகிய இரண்டு அம்சங்களின் மிகச் சரியான கலவையாக இந்தபிராந்திய கைக்கடிகார தொகுப்பு அமைந்திருக்கிறது. நேர்த்தியான வடிவமைப்பு மற்றும் கலாச்சார முக்கியத்துவத்துடன் வடிவமைக்கப்பட்டிருக்கும் இந்தகைக்கடிகாரம் பாரம்பரியம் மற்றும் நவீனத்துவம் இரண்டையும்விரும்பும் நம் மனதிற்கு நெருக்கமானவர்களுக்கு மனமார்ந்தபரிசாக அமையும்.
தமிழ்நாட்டின் கலாச்சாரத்தின் ஆத்மார்த்தமான உணர்வைபிரதிபலிக்கும் வகையில் இந்த புதிய பிராந்திய கைக்கடிகாரப்பதிப்பு வடிவமைக்கப்பட்டுள்ளது. இந்த கடிகாரங்களின்சூரியனின் ஒளி பிரகாசிக்கும் டயலில், தமிழ் எழுத்துருக்கள்இடம்பெற்று இருப்பது சமகால வடிவமைப்பு அழகியலுடன் பாரம்பரிய அழகை இரண்டற கலந்திடும் நேர்த்தியைக்கொண்டிருக்கிறது. மிகவும் மெல்லியதாக 7.4 மிமீ அளவுள்ளஇதன் கேஸ், மேல் பக்கத்தில் அமைக்கப்பட்ட டாப்-லோடட் டிஷ் உடன் வடிவமைக்கப்பட்டுள்ளது. இதில் தோலினால்செய்யப்பட்ட இதன் மணிக்கட்டு பட்டை வசீகரத்தையும்,அன்றாட பயன்பாட்டுக்கு செளகரியமான ஒன்றாகவும்இருப்பதால் மிகப் பொருத்தமான கைக்கடிகாரமாகஇத்தொகுப்பை முக்கியத்துவம் பெற செய்திருக்கிறது. 40 x 46 மிமீ கேஸுடன் வடிவமைக்கப்பட்டிருப்பதால் இந்தகைக்கடிகாரம் நம்முடைய அன்றாட வாழ்வியல் முறைக்குபொருத்தமான ஸ்டைலிங்கையும் கொண்டிருக்கிறது.
குடும்ப உறுப்பினர்கள், நண்பர் அல்லது மனதிற்குநெருக்கமானவராக இருந்தாலும், இந்த கைக்கடிகாரம்பிராந்தியத்தின் வளமான பாரம்பரியத்தை அழகாக பிரதிபலிக்கும் ஒரு அருமையான பரிசாக அறிமுகமாகிஇருக்கிறது. அதனால் இந்த பண்டிகை கொண்டாட்டங்களுக்குகூடுதல் உற்சாகத்தை அளிக்கும் ஒன்றாக பிராந்திய பதிப்புகைக்கடிகாரம் வரவேற்பைப் பெறும்.
பிராந்திய கைக்கடிகாரத் தொகுப்பின் அறிமுக விழாவில் பேசிய சொனாட்டா நிறுவனத்தின் சந்தைப்படுத்தல் மற்றும் தயாரிப்பு பிரிவின் தலைமை நிர்வாகி திரு. பிரதீக் குப்தா [Mr. Prateek Gupta, Head of Marketing and Product, Sonata], “பொங்கல் என்பது நம்முடைய குடும்பம் மற்றும் பாரம்பரியங்களைக் கொண்டாடுவதற்கான ஒரு பண்டிகைநேரம். இந்த தருணத்தை கெளரவிக்கும் வகையில்,சொனாட்டா பிராந்திய பதிப்பு கைக்கடிகாரத்தை அறிமுகம்செய்திருக்கிறோம். இந்த கைக்கடிகாரம் நம்முடைய அன்றாடநேரத்தை பார்த்து செயல்படுவதற்கான ஒரு கடிகாரமாகமட்டுமில்லாமல், பல்வேறு ரசனைகளைக் கொண்டிருக்கும்எங்களது வாடிக்கையாளர்களின் எதிர்பார்புகளை பிரதிபலிக்கும்ஒரு காலம் கடந்தும் நிலைக்கும் தயாரிப்பாகவும்அமைந்திருக்கிறது. எங்களது வாடிக்கையாளர்களுக்கும் அவர்களின் அன்புக்குரியவர்களுக்கும் அர்த்தமுள்ள உறவைக்உருவாக்கும் அதே வேளையில், எங்கள் வாடிக்கையாளர்களின் வாழ்க்கை முறைக்கு ஏற்ற தயாரிப்புகளை வழங்கவேண்டுமென்ற என்ற எங்களது தொடர் முயற்சியில் பிராந்திய பதிப்பு கைக்கடிகாரம் அடுத்தகட்டமாகஅமைந்திருக்கிறது’’ என்றார்.
1595-1895 ரூபாய் விலையில், சொனாட்டாவின் ரீஜினல் எடிஷன் வாட்ச் இப்போது உங்களுக்கு அருகிலுள்ள டைட்டன்வேர்ல்ட் விற்பனை நிலையங்கள் [Titan World Stores]மற்றும் சொனாட்டாவின் அதிகாரப்பூர்வ இணையதளமானwww.sonatawatches.in -லும் கிடைக்கிறது.