கோ காஸ்மோ என்ற பெயரில் சென்னைல் 3 நாட்கள் விண்வெளி ஆய்வு கண்காட்சி

சென்னை, ஜூன்,11- 2024: ஆர்கிட்ஸ் சர்வதேச பள்ளி சார்பில் விண்வெளி ஆய்வு கண்காட்சி
3 நாட்கள் நடைபெறுகிறது. கோ காஸ்மோ என்ற பெயரில் சென்னை பள்ளிக்கரணை பிஎச்இஎல் நகர் பாரதியார் தெருவில் உள்ள வளாகத்தில் இந்த கண்காட்சி ஜூன் 14ம் தேதி முதல் 16ஆம் தேதி வரை மாலை 4 மணி முதல் இரவு 10 மணி வரை நடைபெறும். விண்வெளி ஆய்வில் ஆர்வத்தை தூண்டும் வகையில் நடைபெறும் இந்த கண்காட்சியில் அனைத்து வயதினரும் பங்கேற்கலாம். கண்காட்சியை பார்த்து ரசிக்க கட்டணம் கிடையாது. நுழைவு முதல் அனைத்தும் இலவசம்.

கற்பனை மற்றும் ஆர்வத்தைத் தூண்டும் செயல்களை இந்த கண்காட்சியில் காணலாம். விண்கலங்களை உருவாக்குவது முதல் நட்சத்திரங்களைப் பார்ப்பது வரை, வானியல் அறிவியலை நேரில் பார்க்கலாம். இந்த நிகழ்வு மற்றதைப் போலல்லாமல் ஒரு வானியல் அனுபவத்தை வழங்குகிறது. பிரபஞ்சத்தை ஆராய்வதற்கு எங்களுடன் சேருங்கள் மற்றும் தொடர்ச்சியான வேடிக்கையான செயல்பாடுகளுக்கு மத்தியில் விண்வெளி ஆய்வில் உங்கள் ஆர்வத்தை மீண்டும் தூண்டுங்கள் – என்று இந்த கண்காட்சியில் பங்கேற்க அனைவருக்கும் அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

About admin

Check Also

NIT Trichy Global Alumni Meet (GAM) 2025

The National Institute of Technology, Tiruchirappalli (NIT Trichy), is proud to announce the Global Alumni …

istanbul evden eve nakliyat eşya depolama evden eve nakliyat