இந்தியாவில் உள்ள கல்வி நிறுவனங்கள் பப்புவா நியூ கினியா நாட்டிற்கு வந்து கல்வி சேவை வழங்க வேண்டும் என அந்நாட்டின் ஆளுநர் கோரிக்கை

தமிழ்நாட்டின் சிவகாசியில் பிறந்த சுசீந்திரன் முத்துவேல் பப்புவா நியூ கினியாவின் மாகாண ஆளுநராக உள்ளார்.

கோவை சிங்காநல்லூரில்  உள்ள தனியார் கல்லூரியில் இளைஞர்களின் வளர்ச்சி மற்றும் உயர்கல்வி பயிலும் மாணவர்களுக்கான வழிகாட்டுதல் நிகழ்ச்சியில் சுசீந்திரன் முத்துவேல்,  பப்புவா நியூ கினியாவின் வர்த்தக ஆணையர் விஷ்ணு பிரபு உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். 

அப்போது உரையாற்றிய சுசீந்திரன் முத்துவேல், பப்புவா நியூ கினியாவில்,  கல்வி மற்றும் மருத்துவ சேவைகள் அரசால் மட்டுமே நடத்தப்பட்டு வருகின்றன என்றார். இதன் காரணமாக ஆயிரக்கணக்கான மாணவர்களுக்கு உயர்கல்விக்கான வாய்ப்புகள் கிடைப்பதில் சிக்கல் உள்ளதாக தெரிவித்தார். 

 இந்தியாவில் உள்ள தனியார் கல்வி நிலையங்கள் மற்றும் மருத்துவமனைகளுக்கு அழைப்பு விடுத்துள்ள அவர், வர்த்தக ரீதியாகவும் இது பலனளிக்கும் என்றார். ஆஸ்திரியாவிடமிருந்து   விடுதலை பெற்ற பப்புவா நியூ கினியா மற்றும் இந்தியா இடையே  1980 களிலிருந்தே நல்ல உறவு உள்ளது என்றார். கனிம வளம், விவசாயம் நிறைந்த தங்கள் நாட்டிற்கு செயற்கைக் கோள்  தொடர்பாக ஆய்வு செய்ய இஸ்ரோ குழுவினர் வரவுள்ளனர் என்றும் அவர் தெரிவித்தார். 

ஒவ்வொரு ஆண்டும் சுமார் 80ஆயிரம் மாணவர்கள் 12 ஆம் வகுப்பில் தேர்வானாலும் தொழிற்கல்வி, பல்கலைக்கழகங்கள், அயல்நாட்டு கல்வி வாய்ப்புகள் 30 ஆயிரம் பேருக்கு மட்டுமே வாய்ப்பு கிடைப்பதாகவும்,  50 ஆயிரம் மாணவர்கள் உயர்கல்வி பெற முடியாத நிலையில் உள்ளதாகவும் தெரிவித்த சுசீந்திரன் முத்துவேல்,  இந்தியாவில் உள்ள தனியார் கல்வி நிறுவனங்கள் வந்தால் அவர்களுக்கு இதன் மூலம் வாய்ப்பு கொடுக்கலாம் என்றார்.

About admin

Check Also

University of Southampton Delhi selects Gurgaon’s International Tech Park for the home of its modern campus in India

Chennai, December 2024: University of Southampton Delhi has announced International Tech Park, Gurgaon, as the …

istanbul evden eve nakliyat eşya depolama evden eve nakliyat