Saturday , October 19 2019
Home / Occasions-The-Week

Occasions-The-Week

அருள்மிகு சீனிவாசப் பெருமாள் கோவில் கும்பாபிஷேகம்

சென்னை அடுத்த சோழங்கநல்லூர் தொகுதிக்கு உட்பட்ட சல்லடியாண் பேட்டை ஆஞ்சநேயர் நகரில் அமைந்துள்ள அருள்மிகு சீனிவாசப் பெருமாள் கோவில் கும்பாபிஷேகம் நடைபெற்றது ஊர் பொதுமக்களும் கோவில் நிர்வாகிகளும் கலந்து கொண்டனர் காலை மதியம் இரண்டு நேரங்களிலும் பொதுமக்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது கும்பாபிஷேகம் நடக்கும்போது பொதுமக்கள் கலந்துகொண்டு சீனிவாசப்பெருமாள் அருள் பெற்றனர்

Read More »

சிவராத்தியை முன்னிட்டு மயான கொள்ளை நிகழ்ச்சி நடத்தப்பட்டது.

கோவை சொக்கம்புதூர் சுடுகாட்டில் சிவராத்தியை முன்னிட்டு மயான கொள்ளை நிகழ்ச்சி நடத்தப்பட்டது. சுடுகாட்டில் மாசாணியம்மன் மண் உருவத்தை சிதைத்து அதில் இருந்து  மனித எலும்பை வாயில் கவ்வியபடி நள்ளிரவில் ஆக்ரோசமாக மயான கொள்ளை நிகழ்ச்சியானது நடைபெற்றது. சிவராத்திரியை விழாவை முன்னிட்டு ஆண்டுதோறும் கோவை சொக்கம்புதூர் மயானத்தில்  மயான கொள்ளை நிகழ்ச்சியானது நடத்தப்படுவது வழக்கம். சொக்கம்புதூர் மயானத்தில் களிமண்ணால் அமைக்கபட்ட மாசாணியம்மன் உருவத்தை வைத்து மேளதாளம் முழங்க நள்ளிரவு பூசைகள் நடத்தப்பட்டது. …

Read More »

ஆடிப்பூரத்தை முன்னிட்டு கல்யாண காமாட்சி அம்பிகைக்கு வளைகாப்பு

தர்மபுரி கோட்டை மல்லிகார்ஜூனேஸ்வரர் கோயிலில் கல்யாண காமாட்சி அம்பிகை சன்னதியில் ஆடிப்பூரத்தை முன்னிட்டு அம்மனுக்கு வளைகாப்பு நடந்தது. தர்மபுரி கோட்டை மல்லிகார்ஜூனேஸ்வரர் கோயிலில், கல்யாண காமாட்சி அம்பிகை ஆலய ஆடி மாத விழா, கடந்த 21ம் தேதி தொடங் கியது. 21-ம் தேதி பிரதோஷம், 23-ம் தேதி ஆடி அமாவாசையை யொட்டி, சிறப்பு பூஜை நடந்தது. நேற்று ஆடிப்பூரத்தை முன்னிட்டு, மகா தீபாராதனை நடந்தது. தொடர்ந்து அம்மன் பால திரிபுரசுந்தரி …

Read More »

சமயபுரம் மாரியம்மன் கோவிலில் பஞ்சப்பிரகார விழா இன்று தொடங்குகிறது

சமயபுரம் மாரியம்மன் கோவிலில் நடைபெறும் பூச்சொரிதல் விழா, சித்திரை தேரோட்டம் உள்ளிட்ட திருவிழாக்களில் முக்கியமானது பஞ்சப்பிரகார விழா. அக்னி நட்சத்திரத்தில் உஷ்ணகிராந்தியை தணிப்பதற்காக இந்த விழா நடத்தப்படுகிறது. இவ்விழா இன்று முதல் வருகிற 20-ந் தேதி வரை நடைபெறுகிறது. இதையொட்டி தினமும் காலை 10 மணிக்கு அம்மன் வெள்ளி கேடயத்தில் புறப்பாடாகி இரவு வரை எழுந்தருளி பக்தர்களுக்கு அருள்பாலிப்பார். 14-ந் தேதி இரவு 9 மணிக்கு அம்மன் ரிஷப வாகனத்தில் …

Read More »

திரு மந்திரம் அருளிய திருமூலர் அவதார ஸ்தலத்தில் 8ம் ஆண்டு ஸம்வத்ஸராபிசேக விழா

திருவிடைமருதூர் வட்டம் ஆடுதுறை அருகில் உள்ள திருமந்திரம் அருளிய திருமூல சித்தர் அவதார தலமான 69 சாத்தனுார் கிராமத்தில் அமையபெற்றுள்ள திருமூலர் திருக்கோவில் 8ம் ஆண்டு தொடக்கத்தை முன்னிட்டு நடைப்பெற்ற ஸம்வத்ஸராபிசேக விழா 30-3-2017 வியாழன் அன்று காலை 7-30 மணிக்கு தெடங்கியது இதில் தருமை ஆதீனப் புலவர் முனைவர், மு.சிவசந்திரன் அவர்களின் ஆன்மீக சிறப்பு சொற்பொழிவும் பின்னர் சிவாச்சாரியார்கள் தலைமையில் ஹோமமும் அதனை தொடர்ந்து மூலவருக்கு சிறப்பு ஸம்வத்ஸராபிஷேகம் …

Read More »

திண்டுகல் மாவட்டத்திற்கு வருகை தந்த சுவாமிகள் :

திண்டுக்கல் மார்ச் 25¸ திண்டுகலுக்கு வருகை தந்த ஸ்ரீ சிருங்கேரி ஸ்ரீ சாரதாபீடம் ஸ்ரீ மஹா சன்னிதானம் ஜகத்குரு ஸ்ரீஸ்ரீஸ்ரீ பாரதீ தீர்த்த மஹா ஸ்வாமிகள் மற்றும் ஸ்ரீ சன்னிதானம் ஜகத்குரு ஸ்ரீஸ்ரீஸ்ரீ விதுசேகர பாரதீ ஸ்வாமிகள் பழனி ரோட்டில் அமைந்துள்ள வி.கே.எஸ் மஹாலுக்கு வருகை தந்து அனைத்து வைபவகங்களிலும் கலந்து கொண்டு பொதுமக்கள் அனைவருக்கும் அருள்புரிந்தார். சிருங்கேரி ஆச்சார்யாளிடம் மந்தர உபதேசம் பெற்ற பின்தான் ராமநாத ஸ்வாமிக்கு ப10ஜை …

Read More »

குடந்தையில் 63நாயன்மாா்கள், 9தொகையடியாா்கள் ,உற்சவ மூர்த்திகள் வீதி உலா

கும்பகோணம் மாசிமக தீர்த்தவாரி உற்சவத்தை முன்னிட்டு கும்பகோணம் ஆதி ஸ்ரீகும்பேஸ்வரசுவாமி திருக்கோயிலில் நான்காம் நாளான நேற்று காலை வெள்ளிப் பல்லக்கில் பஞ்சமூா்த்திகள் புறப்பாடும் 63நாயன்மாா்கள், 9தொகையடியாா்கள் , சேக்கிழாா் ஆகியோரது உற்சவத் திருமேனிகளுடன் இரட்டைவீதி எனப்படும் ஸ்ரீகும்பேஸ்வரா் கோயிலிலிருந்து ஸ்ரீஸோமேஸ்வரா் கோயில் வழியாக ஸ்ரீநாகேஸ்வரர் கோயிலை வலம் வந்து மீண்டும் ஸ்ரீகும்பேஸ்வரா்திருக்கோயிலைத் திருச் சுற்று செய்து சிவனடியாா்களும் ஆன்மீக அன்பர்களும் திரளாக கலந்து கொள்ள சுவாமிகள் வீதி உலா வெகு …

Read More »

கும்பகோணத்தில் மாழை வேண்டி பக்தர்கள் பிராத்தனை

கும்பகோணம் சார்ங்கபாணி திருகோவிலின் பின்புறம் உள்ள பொற்றாமரை திருக்குளத்தில் இன்று காலை 8 மணிக்கு உலக நன்மைக்காகவும் தமிழகம் இதுவரை கண்டிராத வறட்சியை போக்க மழை வேண்டி குடந்தை சார்ங்கபாணி திருகோவில் அமுதன் கைங்கர்ய சபா வின் சார்பில் ஆண்டாள் நாச்சியார் அருளிச் செய்த திருப்பவையில் ஆழிமழை கண்ணா எனும் பாசுரத்தை 108 முறை ஆன்மீக அன்பர்கள் அனைவரும் ஒருங்கிணைந்து கூட்டு பிராத்தனை செய்தார்கள்

Read More »

சிவராத்திரி அபிஷேகங்கள்

திருவிடைமருதூர் வட்டம் திருவிடைமருதூர் அருள்மிகு மகாலிங்கசுவாமி திருகோவில் வடக்கு  மடவிளாகத்தில் எழுந்தருளியிருக்கும்  அருள்மிகு    ஸ்ரீ ஆத்மலிங்கேஸ்வரர் ஆலய சித்தர் பீடத்தில்  மகா சிவராத்திரி யை முன்னிட்டு நான்கு கால பூஜையை முன்னிட்டு பல வித திரவியங்கள் கொண்ட  சிறப்பு  அபிஷேகங்களும்  அலங்காரமும் தூப தீப  ஆராதனைகளும் நடைபெற்றது ஒவ்வொரு கால வழிபாட்டுக்கு வந்திருந்து சுவாமியை தரிசனம்  செய்த பக்தர்கள் அனைவருக்கும்  பிரசாதங்கள் வழங்கப்பட்டது  இவ்விழா ஏற்ப்பாட்டினை   திருக்கோவில் …

Read More »