திருவொற்றியூரில் 4 வது வட்டத்தில் பாதாள சாக்கடை திட்டத்திற்கான இணைப்பு விழா

திருவொற்றியூரில்
4 வது வட்டத்தில் பாதாள சாக்கடை திட்டத்திற்கான இணைப்பு விழா முன்னாள் எம்எல்ஏ கே.குப்பன் தலைமையில் வட்ட செயலாளர் எஸ்.சரவணன் ஏற்பாட்டில் நடைபெற்றது.

திருவொற்றியூரில் கடல் அரிப்பை தடுக்க தூண்டில் வளைவு அமைப்பது பாதாளச்சாக்கடை உருவாக்குவது போன்ற நல்லதிட்டங்களை செயல்படுத்தி வருகிறார்,
அழைத்தால் இணைப்பு என்ற அடிப்படையில் பாதாளச்சாக்கடை திட்டம் என்பது கிட்டதட்ட 50 இடங்களில் அமைக்கப்பட்டுள்ளது, எப்போதும் இல்லாத சிறப்பான ஆட்சி இப்போது நடந்து கொண்டிருக்கிறது ஆனால் திமுக ஆட்சியில் வன்முறை தான் வெறியாட்டம் போட்டது, அவர்கள் சட்டமன்றத்திலும் மக்கள் மன்றத்திலும் மக்கள் பிரச்னைகளை பேசவே இல்லை., எப்போதும் சத்தம் போடுவதும் குறுக்கிடுவதிலும் முன்னணியில் இருப்பார்கள்.
இதுவரை மக்கள் பிரச்னைகளுக்காக திமுக குரல் எழுப்பியதில்லை. ஆனால் அம்மா வழியில் நடைபெறும் ஆட்சியில் முதல்வர் எடப்பாடி பழனிசாமி, கொரோனா நோய்த்தொற்றால் மக்கள் அவதிப்பட்டபோதும் வாழ்வாதாரம் பாதிக்கப்படாமல் பார்த்து கொண்டார்.

மருந்தே கண்டுபிடிக்கப்படாத நோய்க்கு கபசுர குடிநீர், சத்து மாத்திரைகள் தந்துகுணப்படுத்தினார், அமைச்சர்கள் அதிகாரிகள் மூலம் மாநகரத்தை கண்காணித்து கொரோனா நோயை மெல்ல மெல்ல விரட்டியடித்துக்கொண்டிருக்கிறார் .முதல்வர் எடப்பாடி பழனிசாமி.

About admin

Check Also

சாமானிய மக்கள் முற்றிலுமாக ரயில்களில் பயணம் செய்ய முடியாத நிலை ஏற்படும்

இந்திய ராயில்வேயை தனியார் மயமாக்கும் மத்திய அரசின் முடிவுக்கு எதிராக எஸ்.ஆர்.எம்.யூ பொது செயலாளர் என்.கண்ணையா செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *