கொரோனா நெருக்கடி நேரத்தில், உங்கள் வரவேற்பறையிலே ஆன்லைன் மூலம் வாழ்க்கைக்கு வழிகாட்டும் AstroVed நிறுவனம்

சம்சார சாகரத்தில் மனிதன் தத்தளிக்கும் நேரத்தில் கலங்கரை விளக்காய் வழி காட்டுவது ஜோதிடம். “அண்டத்தில் உள்ளதே பிண்டத்தில் உள்ளது” என்ற கூற்று மூலம் நாம் இந்த பிரபஞ்சத்துடன் இரண்டறக் கலந்து உள்ளோம் என்பது உள்ளங்கை நெல்லிக்கனி போல நமக்கு தெள்ளத் தெளிவாக விளங்கும். இயற்கை என்பது நமக்கு பல விதங்களில் பாடங்களை கற்றுத் தரும் ஆசான். அந்த வகையில் இன்று நாம் கண்ணுக்குத் தெரியாத கொரோனா என்ற கிருமியுடன் போராடிக் கொண்டு இருக்கறோம். உலகமே இன்று ஒரு கிருமியின் கைவசம் உள்ளது. மனித வாழ்க்கையை புரட்டிப் போட்ட இந்தக் கிருமியின் ஆதிக்கத்தில் இருந்து மனித குலம் விடுபடுமா? நாம் குடும்பத்துடன் இணைந்து வாழ முடியுமா? இழந்த வேலை மீண்டும் கிடைக்குமா? வறண்டு போன வாழ்வில் மீண்டும் வசந்தம் தழைக்குமா? இந்தக் கேள்விகள் இன்று கோடானு கோடி மக்களின் மனதில் எழும் போது, இதற்கு விடை காண விழையும் நேரத்தில், வழிகாட்டியாக இருப்பது ஜோதிடம் என்றால் மிகையாகாது.
இன்றைய அசாதரணமான சூழ்நிலையில் உணவை மருந்தாக்கி, உடலை வலுவாக்கி நம்மை காத்துக் கொள்ள நாம் போராட மனதில் வலுவை கொடுப்பது ஆன்மிகம். ஆன்மிகம் என்பது இறை நம்பிக்கையுடன் கூடிய தூய எண்ணம். இதற்கு உரம் சேர்க்க ஆலய வழிபாடு துணை புரியும் என்றாலும் இன்று ஆலயங்களின் வாசலும் கூட நம்மை வரவேற்க வழி வகையின்றி உள்ளது. இவ்வாறு கவலைப்படும் உள்ளங்களே! உங்களின் வரவேற்பறைக்கே இறைவனை வரவழைக்கச் செய்து உங்கள் இல்லத்தையே இறைவன் குடியிருக்கும் கோவிலாக ஆக்க சேவையாற்றும் நிறுவனமாக AstroVed விளங்குகின்றது. பாரம்பரிய ஜோதிடத்தில் மட்டுமின்றி ஜோதிட சாஸ்திரத்தின் பல அங்கங்களிலும் கை தேர்ந்த பல நிபுணர்களைக் தனது கைவசம் கொண்டு, Astrospeaks மூலம் இந்தியாவில் மட்டுமின்றி வெளிநாட்டில் வாழ்பவர்களுக்கும், கொரோனா காலத்தில் அவர்கள் சந்திக்கும் பிரச்சினைகளுக்கும், எதிர்காலம் குறித்த அவர்களின் அச்சத்தை போக்கும் வகையில் உடனடி ஜோதிட ஆலோசனை அளித்து பல வாடிக்கையாளர்களின் நன்மதிப்பைப் பெற்று, இன்றளவிலும் தரத்தில் தனக்கென தனியிடத்தை தக்க வைத்துக் கொண்டுள்ளது AstroVed நிறுவனம் .
ஜோதிட ஆலோசனை தவிர, பூஜை, ஹோமங்கள் போன்ற சேவைகளின் மூலம் பிரச்சினைக்கான தீர்வுகளையும் AstroVed வழங்குகின்றது. உள்நாடு மற்றும் வெளி நாடு என வாடிக்கையாளர்கள் எங்கு இருந்தாலும், அவர்கள் தங்களின் வீட்டு வரவேற்பறையில் இருந்தே பங்கு கொள்ளும் வகையில் இந்த நிறுவனத்தின் சேவை உள்ளது. அது மட்டுமின்றி பழங்கால ஓலைச் சுவடி மூலம் பலன் அறியும் நாடி ஜோதிடம், முக்கியமான வருடாந்திர நிகழ்வுகளுக்கான சிறப்பு விழாக்கள், நேரடி ஜோதிட ஆலோசனைகள், தொலைபேசி மூலம் உடனடி ஆலோசனைகள், மந்திரம், மற்றும் யந்திரங்கள் போன்ற ஆற்றல் வாய்ந்த பரிகார முறைகள், மற்றும் இல்லத்தில் வைத்து பூஜிக்க உகந்த விக்கிரகங்கள் போன்ற இன்ன பிற சேவைகளை வாடிக்கையாளர்கள் எளிதில் பெரும் வகையில் AstroVed சேவையாற்றுகின்றது.

மேலே சொன்ன சேவைகள் யாவும் இறை சேவை என்பதால் அதன் புனிதத் தன்மையை காக்கும் வகையில் AstroVed ஒரு பிரத்யேக ஹோமா மையத்தைக் கொண்டுள்ளது. வாடிக்கையாளர்களின் சார்பில் அவர்களுக்கு தேவைப்படும் பூஜைகள், ஹோமங்கள் மற்றும் பிற ஆன்மீக நிகழ்வுகளை, அவற்றின் நியம அனுஷடானங்கள் சற்றும் மாறாத வண்ணம் மேற்கொள்கின்றது என்பது இந்த நிறுவனத்தின் சிறப்பம்சம் ஆகும். கொரோனா கிருமி தாக்கம் நிறைந்துள்ள இந்த நெருக்கடியான நேரத்தில் , ஆலயம் செல்ல இயலாத நேரத்தில் இந்த நிறுவனத்ததின் சேவை வாடிக்கையாளர்களுக்கு ஒரு வரப் பிரசாதமாக விளங்குகின்றது. ஒவ்வொரு வாடிக்கையாளரும் தனிப்பட்ட முறையில் பங்கு கொள்ளும் விதமாக, பயனுறும் விதமாக ஜோதிடம் சார்ந்த அனைத்து தகவல்கள் மற்றும் அது சார்ந்த ஆன்மீகத் தீர்வுகளை, ஒரே கூரையின் கீழ் வாடிக்கையாளர்களின் வசதிக்கேற்ப வழங்குகின்றது.

About admin

Check Also

HOW DOES PROACTIVE COMMUNICATION IMPACT YOUR BUSINESS IN THE LONGER RUN?

By CATALYST PUBLIC RELATIONS PVT. LTD., For every brand and organization, it’s important to keep the communication free-flowing and …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *