Saturday , February 29 2020
Home / District-News / 15 வருட கால ஒப்பந்த விளையாட்டு பயிற்றுநர்கள் – பணிநிரந்தரம் வேண்டி அடையாள ஆர்ப்பாட்டம்

15 வருட கால ஒப்பந்த விளையாட்டு பயிற்றுநர்கள் – பணிநிரந்தரம் வேண்டி அடையாள ஆர்ப்பாட்டம்

தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம்-சென்னை
ஒப்பந்த விளையாட்டு பயிற்றுநர்கள்- கடந்து வந்த
கரடு முரடான பாதை

2004 இல் பணியமர்த்தப்பட்ட ஒப்பந்த பயிற்றுநர்களை பணி நிரந்தரம் செய்வதாக கூறி எங்களிடம் UNDER TAKING பெற்றது . இதனை நம்பி நாங்களும் நிரந்தர பணி வழங்கும் என்று இன்று வரை காத்திருக்க வைப்பது ஏன்.

2008 இல் உறுப்பினர் செயலர் சத்யப்ரதா சாஹூ அவர்கள் எங்களுக்கு பணிஉறுதி அளித்தனர். அப்போதும் எங்களை பணி நிரந்தரம் செய்யவில்லை.

2009 இல் கிறிஸ்துதாஸ் காந்தி முதன்மை செயலர் அவர்கள் முன்னிலையில் BACKLOG VACANCY இல் இருந்த SC/ST பிரிவினருக்கு உடனடி தேர்வு நடத்தப்பட்டு அன்றைய தினமே APPOINTMENT ORDER வழங்கப்பட்டு அடுத்தநாளே அவர்கள் பணியில் சேர்க்கப்பட்டனர்.

இதனால் 2010 இல் ஒப்பந்த பயிற்றுநர்கள் மீண்டும் பணி நிரந்தரம் கேட்கும்பொழுது உங்களை பணியில் நிரந்தரம் செய்திடும் அரசு அறிக்கை 6 மாதம் காலம் தாழ்த்தி பெற்றதனால் நிரந்தர பணி வழங்க இயலவில்லை என்று உறுப்பினர் செயலர் அவர்கள் நீதிமன்றத்தில் பதிவு செய்துள்ளார்கள்

2012 இல் நிரந்தர பயிற்றுனர்களுக்க்கான தேர்வு நடத்தியபோது ஒப்பந்த பயிற்றுநர்களை பணிநிரந்தரம் செய்ய ஏதுவாக LAPSE ஆன அனுமதி கடிதத்துக்கு ஏன் மீண்டும்அரசிடம் அனுமதி கேட்காமல் SDAT இருந்தது

2012 இல் 79 பயிற்றுநர்களை பணிநிரந்தரம் செய்திட தேர்வு நடத்தப்பட்டது. தேர்வு எந்த விளையாட்டுக்கு எத்தனை பேர் தேர்தெடுக்கப்படுவார்கள் என்ற விபரம் இல்லாமல் அனைத்து விளையாட்டுகளுக்கும் சேர்த்து 79 பயிற்றுனர்கள் தேர்வு செய்திருப்பது தேர்வு முறைக்கு முறையற்றதாகும்.

ஒரு விளையாட்டிற்கு தேர்வு செய்யும் குழுவானது அந்தந்த விளையாட்டை பற்றிய NIS படிப்பு அவசியமாகும். ஆனால் இந்த தேர்வு முறை தனிப்பட்ட ஆட்களை தேர்வு செய்யும் விதம் ஒரு சில உயர் அதிகாரிகள் தாங்களாகவே தேர்வு நடத்தி அவர்களுக்கு தேவையான ஆட்களை பணிநிரந்தரம் செய்துள்ளார்கள். ஒரு பொது மேலாளர் என்பவர் ஆரம்பத்தில் ஏதோ ஒரு விளையாட்டின் NIS படிப்பை முடித்து பயிற்றுநராக இருந்து மாவட்ட விளையாட்டு அலுவலர் ,மண்டலா முதுநிலை மேலாளர், மற்றும் பொதுமேலாளர் ஆகிய பதவி உயர்வு பெற்று விளங்கும் ஒரு அதிகாரி எப்படி மற்ற விளையாட்டை பற்றி தெரியாமல் அவராகவோ அல்லது அவரது முன்னிலையிலோ தேர்வு நடத்தி நிரந்தர பணியில் அமர்த்தி இருப்பது மிகப்பெரிய முறை கேடாகும்.

ஒவ்வொரு விளையாட்டிற்கும் பயிற்சியின் விதம், பயிற்சி முறைகள், பயிற்சி விதிமுறைகள் வேறுபட்டவையாகும். இதனால் ஒவ்வொரு விளையாட்டு பயிற்றுநர்களையும் தேர்வு செய்யும் மதிப்பெண் தரம் மாறுபடும். ஆனால் அவ்வாறு செய்யாமல் அனைத்து விளையாட்டுகளையும் ஒன்றாக இணைத்து ஓவர் ஆல் மதிப்பெண் அடிப்படையில் 79 நபர்களை தேர்வு செய்திருப்பது முற்றிலும் தேர்வு விதி முறைக்கு தவறானதாகும்.

தற்போது நடக்கவிருக்கும் பயிற்றுனர் தேர்வில் ஒப்பந்த அடிப்படையில் பணிபுரிந்து வந்த பயிற்றுனர்களுக்கு மதிப்பு கூட்டு Marks weightage வழங்குவதாக தீர்மானித்துள்ளது. ஆனால் இந்த சிறப்பு மதிப்பெண் கூட்டு 2012 நடந்த தேர்வில் ஏன் வழங்கவில்லை.

ஒப்பந்த பயிற்றுனர்களுக்கு மாநில, தேசிய மற்றும் சர்வதசே அளவில் வெற்றியாளர்களை உருவாக்கினால் 15% 25% மற்றும் 50% சதவீத ஊக்கத்தொகை ஒரு ஆண்டு முழுவது வழங்கப்பட்டு வருகிறது. அதனை நாங்கள் தற்போதுவரை பெற்று வருகிறோம். அப்படி இருக்க 2010-2011-2012 இல் NIS படிப்பை முடித்து வந்த நபர்களுக்கு எப்படி பணி நிரந்தரம் வாய்ப்பு வழங்கப்பட்டது. எங்களை விட அவர்கள் எந்த தேர்வில் அதிக மதிப்பெண் பெற்று நிரந்தர பணியில் சேர்ந்தார்கள்.

2012 இல் நடந்து முடிந்த பயிற்றுனர் தேர்வில் ஒப்பந்த பணியில் இருந்த நாங்கள் தகுதி பெறவில்லை என்று நீதிமன்றத்தில் பதிவு செய்திருக்கும் SDAT எங்களது மதிப்பெண் நகல்களை வழங்கி அதன் உண்மை தன்மையை விளக்க வேண்டுமாய் பணிவுடன் கேட்டுக்கொள்கிறேன்.

ஒரு FOOTBALL COACH ஆக இருந்தவர் எப்படி இறகுபந்து பயிற்றுநர்களை தேர்வு செய்யமுடியும். ஒரு ATHLETIC COACH ஆக இருந்தவர் எப்படி JUDO,BOXING, TAEK WONDO, FENCING பயிற்றுநர்களை தேர்வு செய்யமுடியும். ஒரு BASKET BALL COACH ஆக இருந்தவர் எப்படி TENNIS விளையாட்டு பயிற்றுநர்களை தேர்வு செய்யமுடியும்.

இவ்வாறு முறைகேடாக தேர்வு செய்யப்பட்டவர்கள் 18 பேர்.

2010, 2011 பயிற்றுனர் படிப்பை முடித்தவர்களுக்கு பணி வழங்கப்பட்டுள்ளது எந்த தகுதி அடிப்படையில் பணி வழங்கப்பட்டது என்பது இதுவரையில் தெரியவில்லை. அது சம்பந்தமாக இன்று வரை VIGILANCE ENQUIRY 3 கட்டம் நிறைவடைந்துள்ளது

மேலும் நீதிமன்றம் சமரச பேச்சுவார்த்தைக்கு அழைத்தது. 5 முறை நடைபெற்ற சமரச பேச்சுவார்த்தையில் வேலை வாய்ப்பு உறுதி என்று நம்பிக்கை வாக்குறுதி கொடுத்த அதிகாரிகள் சிலமாதங்கள் பிறகு அவர்கள் தற்போதிருக்கும் 81 பயிற்றுனர் பணியிடத்திற்கு நீதிமன்ற வழக்கை வாபஸ் பெறாமல் பணி வழங்க இயலாது என்று மாற்றி கூறுகிறார்கள்.

ஒப்பந்த பயிற்றுநர்கள் கடந்து வந்த கரடு முரடான பாதையை தமிழக அரசு நற்பாதை அமைத்து தரும் விதமாக எங்களது பணிகளை நிரந்தர செய்தும் 15 வருடமாக எவ்வித பலனும் எதிர்பார்க்காமல் பணிபுரிந்த எங்களுக்குஅரசால் இயன்ற சலுகைகள் வழங்குமாறும் தாழ்ந்த பணிவன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

ஒப்பந்த விளையாட்டு பயிற்றுநர்கள்
தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம்

About Admin

Check Also

TTK Hospital, Centre for addiction rehabilitation and counseling services, celebrates 40 years; Launches a memoir honouring Dr. Shanthi Ranganathan

TT Ranganathan Clinical Research Foundation (TTK Hospital), Centre for addiction rehabilitation and Counseling services, celebrated …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.