Thursday , December 12 2019
Home / Hospitals / இந்தியாவின் முதலாவதாக குழந்தைகளுக்கான சிறப்பு வாய்ந்த ஆராய்ச்சி ஆய்வகம்

இந்தியாவின் முதலாவதாக குழந்தைகளுக்கான சிறப்பு வாய்ந்த ஆராய்ச்சி ஆய்வகம்

சைல்டு டிரஸ்ட் மருத்துவ ஆராய்ச்சி அறக்கட்டளை (சிடிஎம்ஆர்எஃப்) ஒரு தன்னாட்சி பெற்ற அமைப்பாகும்.இங்கு குழந்தை மருத்துவம் தொடர்பான அறுவை சிகிச்சை மற்றும் இதர சிறப்பு மருத்துவம் தொடர்பாக ஆய்வுகள் மேற்கொள்ளப்படுகின்றன.

இந்தியாவில் மத்திய அரசால் அங்கீகரிக்கப்பட்ட ஒருசில அறிவியல் மற்றும் தொழிற்சாலை ஆய்வு நிறுவனங்களில் ஒன்று சிடிஎம்ஆர்எஃப் என்பது குறிப்பிடத்தக்கது.
சைல்டு டிரஸ்ட் மருத்துவ ஆராய்ச்சி அறக்கட்டளையின் (சிடிஎம்ஆர்எஃப்) ஒரு பகுதியாக ஆராய்ச்சி ஆய்வகம் அமைக்கப்படவேண்டும் என்பது அறக்கட்டளையின் நீண்ட கால கனவாகும். ஆய்வகம் அமைக்கப்படவேண்டும் என்ற யோசனை உருவானது. அதற்கான ஒப்புதலை பெற 2017 ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் சிடிஎம்ஆர்எஃப் அறங்காவலர்களிடம் அந்த யோசனை வழங்கப்பட்டது.

தற்போது அந்த ஆராய்ச்சி ஆய்வகம் ரூ.85லட்சம் செலவில் கட்டப்பட்டுள்ளது. இதற்கா ன முயற்சிக்கு ஆதரவும் ஓத்துழைப்பும் நல்கியதற்காக சோழமண்டலம் இன்வெஸ்ட்மெண்ட் அன்ட் பைனான்ஸ் கம்பெனிக்கு நன்றி தெரிவித்துக்கொள்கிறோம்.

மருத்துவமனையின் பிரதான கட்டிடத்தின் தரைதளத்தில் இந்த ஆராய்ச்சி ஆய்வகம் அமைந்துள்ளது. 2018 ஆம் ஆண்டு ஜூன் மாதம் முதல் 2018 டிசம்பர்மாதம் வரை சீமென்ஸ் ஹெல்த்கேர் நிறுவனத்தால் ஒட்டுமொத்த ஆய்வகமும் தேசிய மற்றும் சர்வதேச தரத்தின் அடிப்படையில் கட்டி முடிக்கப்பட்டது. இந்த ஆய்வகம் 2019 ஜனவரி மாதம் முதல் அனைத்து காரணிகளையும் உள்ளடக்கியவாறு முழுமையாக செயல்படத் தொடங்கியது. குழந்தை மருத்துவத்திற்காக இந்தியாவில் முதலாவதாக அமைந்துள்ள ஒரே சிறப்பு வாய்ந்த ஆராய்ச்சி ஆய்வகம் இது என்பதுகுறிப்பிடத்தக்கது. லாப நோக்கத்தில் அல்லாமல் மருத்துவமனை தனது தேவைக்காக சொந்தமாக அமைத்துள்ள ஆராய்ச்சி ஆய்வகம்இதுவாகும்.

இந்த ஆய்வகம் முழுக்க முழுக்க சிமென்ஸ் நிறுவனத்தின் வெர்சான்ட் கேபிசிஆர் தளத்தில் துணை சாதனங்களுடன் தானியங்கி முறையில் செயல்படும். குழந்தை மருத்துவம் தொடர்பான ஆய்வுகள், நோயறிதல், கற்றத்தருதல், மற்றும் பயிற்சி ஆகியவற்றில் கவனம் செலுத்தும் வகையில் இது செயல்படும். படிப்படியாக ஆய்வு மற்றும் நோயறிதல் திட்டங்களை செயல்படுத்த முன்முயற்சிகளை மேற்கொள்ளும். ஆராய்ச்சி பயிற்சி திட்டங்கள், மாநாடுகளில் உரையாற்ற அறிக்கைகளை தயார்செய்தல், தேசிய மற்றும் சர்வதேச அளிவிலான குழந்தை மருத்துவம் தொடர்பான புத்தங்களை வெளியிடுதல், ஆராய்ச்சித்துறையில் முனைவர் பட்டம் (பிஎச்டி) தொடங்குதல் ஆகியவையும் இதில் அடங்கும்.
ஆராய்ச்சி ஆய்வகத்தில் இரண்டு ஆய்வுகளை தொடங்க முன்முயற்சி எடுக்கப்பட்டுள்ளது. குழந்தைகளுக்கு ஏற்படும் புற்றுநோயுடன் கூடிய நுரையீரல் தொற்று (எச்டிஎப்சி ஏம்சி நிதியுதவியுடன்) இரண்டாவது குழந்தைகளுக்கு ஏற்படும் டெங்கு காய்ச்சலை உறுதிப்படுத்தும் ஆய்வுகள் (சிடிஎம்ஆர்எஃப் ஆய்வுநிதியில் இருந்து) ஆகியவை அந்த இரண்டு ஆய்வுகள் ஆகும்.மேலும் இரண்டு ஆய்வுகளை மேற்கொள்ள திட்டமிடப்பட்டுள்ளது. அடுத்தடுத்த மாதங்களில் இந்த ஆய்வுகள் தொடங்கப்படும்.

ஜெனிவானில் உள்ள உலக சுகாதார நிறுவனத்தின் தலைமை விஞ்ஞானி டாக்டர் சௌமியா சுவாமிநாதனால் ஆராய்ச்சி ஆய்வகம் இன்று முறைப்படி தொடங்கிவைக்கப்பட்டது.சிடிஎம்ஆர்எஃப் தலைவர் திரு.லட்சுமி நாராயணன், இந்த ஆராய்ச்சி ஆய்வகம் அமைப்பதற்கு நிதியுதவி அளித்த சோழமண்டலம் இன்ஸவெஸ்ட்மெண்ட் அன்ட் பைனான்ஸ் கம்பெனி தலைவர் திரு.ரவீந்திரகுமார் குந்து ஆகியோர் இந்த நிகழ்ச்சியில் கலந்துகொண்டனர்.
தற்போது சிடிஎம்ஆர்எஃப்- பில் நடைபெற்று வரும் ஆய்வுகளின் முக்கிய அம்சங்கள்:

  1. ரோட்டா வைரஸ் தடுப்பூசியின் விளைவுகள் மற்றும் இரைப்பையை மடக்கி உட்திணித்தல் குறித்த ஆய்வு:
    வேலுர் சிஎம்சியுடன் இணைந்து மேற்கொள்ளப்படும்ஆய்வு
    2019 ஜூலை மாதம் 31 ஆம் தேதியுடன் 681 குழந்தைகளுக்கு நடத்தப்பட்ட பரிசோதனையில் 201 குழந்தைகளுக்கு ரோட்டா வைரஸ் பாசிடிவ்ஆக இருந்தது. இரைப்பை உட்திணித்தல் குறித்து 85நோயாளிகளுக்கு நடத்தப்பட்ட ஆய்வில் 2 மாதிரிகள் ரோட்டா வைரஸ் பாசிடிவ் என தெரியவந்தது.
    நிமோனியா காய்ச்சல கண்காணிப்பு:
  2. சென்னையில் உள்ள தேசிய நோய் தொற்றியல் நிலையத்துடன் இணைந்து மேற்கொள்ளப்படும் திட்டம்
  3. 2019 ஜூலை மாதம் 31 ஆம் தேதியுடன் 208 குழந்தைகளுக்கு நிமோனியா காய்ச்சல் தாக்கியிருக்கலாம் என்ற சந்தேகத்தில் நடத்தப்பட்ட சிறுநீர் பரிசோதனையில் 6 குழந்தைகளுக்கு அந்த காய்ச்சல் தாக்கியிருப்பது தெரியவந்தது.
    குடல் காய்ச்சல் குறித்த தேசிய கண்காணிப்பு (இந்தியாவில் குடல் காய்ச்சல் குறித்து கண்காணித்து வரும் அமைப்பு)
  4. இரண்டு ஆண்டு காலத்தில் 10ஆயிரத்தி 751 ரத்த மாதிரிகள் ஆய்வுக்கு உட்படுத்தப்பட்டது. இதில் 153 மாதிரிகள் சால்மோனெல்லா டைஃபி அல்லது குடற்காய்ச்சல் என தெரியவந்தது.34 குழந்தைகளுக்கு பாராடைஃபி இருப்பது தெரியவந்தது. இதனால் அவர்கள் மற்ற குழந்தைகளிடமிருந்து தனியாக பிரிக்கப்பட்டனர். இந்த ஆய்வில் 157 பாடங்கள் பதிவு செய்யப்பட்டது.
  5. டைபாய்டு மற்றும் குடற் காய்ச்சல் தொடர்பாக வியட்நாம் தலைநகர் ஹனோயில் நடைபெற்ற 11வது சர்வதேச மாநாட்டில் இரண்டு அறிவியல் அறிக்கைகள் தாக்கல் செய்யப்பட்டன.
    புற்றுநோயுடன் கூடிய குழந்தைகளிடம் அடிக்கடி காணப்படும் மூச்சுக்குழாய் வைரல் தொற்றுகுறித்த மருத்துவ அறிக்கையை பார்த்தால் குறைந்தவெள்ளை அணுக்களுடன் கூடிய நோய் தொற்று மற்றும் காய்ச்சல் தெரியவரும்
  6. இந்த ஆய்வகத்தில் 2019ஆம் ஆண்டு ஆய்வுகள் தொடங்கப்பட்டது முதல் 15 குழந்தைகளுக்கு இந்த பரிசோதனை நடத்தப்பட்டது. அதில் 13 குழந்தைகள் 5வயதுகுட்பட்டவர்கள்.
  7. ஜலதோஷத்தால் ஏற்படும் ரைனோ வைரஸ் பொதுவாக காணப்பட்டது. 43 குழந்தைகளுக்கு வந்து வந்து போகக்கூடிய குரோனோ வைரஸ் தாக்கியது கண்டுபிடிக்கப்பட்டது.
    டெங்கு,என்எஸ்ஏ, எலிசா,ஐஜிஎம் பிசிஆர் குறித்து நோய் கண்டறிதல் மற்றும் புதிதாக வடிவமைக்கப்பட்ட லம்ப் எனப்படும் புதியபரிசோதனை: சென்னையில் உள்ள குழந்தைகள் மருத்துவமனையில் இருந்து இந்த ஆய்வுகள் எடுக்கப்பட்டன.
    2019 ஆம் ஆண்டு மே மாதம் இந்த ஆய்வு தொடங்கப்பட்டதில் இருந்து 51 குழந்தைகளுக்கு டெங்கு தாக்கியிருக்கலாம் என்று அஞ்சப்பட்டது. அதில் 32 பேருக்கு (சுமார் 62.7 விழுக்காடு) பிசிஆர் பரிசோதனை செய்ததில் டெங்கு தாக்கியிருப்பது உறுதிப்படுத்தப்பட்டது.
    டெங்குவதில் இரண்டாம் வகை பொதுவாக காணப்படுபவை(48 விழுக்காடு) இதனை தொடர்ந்து முதல்வகை டெங்கு மற்றும் 3 ஆம் வகை டெங்கு 22 விழுக்காடாக இருந்தது
    லேம்ப் பரிசோதனையை உருவாக்குவதற்காக ஐஐடிஎம் ஆய்வு பூங்காவுடன் கூட்டாக ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டன. .
    காசா நோயால் பாதிக்கப்பட்ட குழந்தைகளுக்கு அந்த நோய் வந்ததற்கு முன்பு இருந்துமேற்கொள்ளப்பட்ட ஆய்வு.
  8. சென்னையில் ரீச் அமைப்புடன் இணைந்து கூட்டாக மேற்கொள்ளப்பட்ட ஆய்வு
    வேலூரில் உள்ள உயிரியை பிரித்தெடுத்தல் குறித்த தொழில்நுட்ப மையத்துடன் இணைந்துமேற்கொள்ளப்படும் திட்டம்
    அரிதான மற்றும் இதர குறைபாடுகள் கொண்ட நோய்களை பதிவு செய்யும் முன்னோடி மையமாக கேகேசிடிஎச்-ஐ இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில் தேர்வு செய்துள்ளது.

About Admin

Check Also

60 YEAR OLD FEMALE CANCER SURVIVOR UNDERWENT SUCCESSFUL BREAST CONSERVATION SURGERY

Chennai, December  2019: A 60-year-old female cancer survivor from Baharain who had previously treated for endometrial …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.