Wednesday , July 24 2019
Home / State-News / இந்தியாவில் மிகப்பெரிய பணிமனையை திறந்தது “ஸ்கோடா ஆட்டோ”

இந்தியாவில் மிகப்பெரிய பணிமனையை திறந்தது “ஸ்கோடா ஆட்டோ”

இந்தியாவில் மிகப்பெரிய பணிமனையை திறந்தது “ஸ்கோடா ஆட்டோ”

கோவையில் ஸ்கோடா ஆட்டோ இந்தியா, எஸ்ஜிஏ கார்ஸ் இந்தியாவுடன் இணைந்து மிகப்பெரிய பிரம்மாண்டமான பணிமனையை திறப்பு விழா விழா

கோவை, உப்பிலிபாளையம் பிரதான சாலை சவுரிபாளையம் பகுதியில் அமைந்துள்ள “ஸ்கோடா ஆட்டோ” தனது புதிய பணிமனை திறந்து உள்ளது.

ஸ்கோடா ஆட்டோ திறப்பு விழாவை எஸ்.ஜி .ஏ கார்ஸ் இந்தியாவின் தலைமை அதிகாரி
எஸ். அற்புதராஜ் தலைமை தாங்கினார்.

இவ்விழாவிற்கு சிறப்பு விருந்தினராக சேவை மற்றும் மார்க்கெட்டிங் இயக்குனர் ஜாக்ஹோலிஸ் ரிப்பன் வெட்டியும் குத்துவிளக்கு ஏற்றியும் துவக்கி வைத்தார்.

பின்னர் எஸ்.ஜி.ஏ கார்ஸ் இந்தியாவின் தலைமை அதிகாரி எஸ். அற்புதராஜ் பத்திரிகையாளிடம் கூறுகையில் ஸ்கோடா ஆட்டோ தனது புதிய பிரம்மாண்ட பணிமனையை கோவையில் துவங்கியதாகவும் எஸ்.ஜி.ஏ இந்தியாவுடன் இணைந்து துவக்கியதாகவும், இந்தியாவின் தென்பகுதியில் சந்தையை விரிவுபடுத்தும் நோக்கிலும் வலுவாக கால் பதிக்கும் நோக்கத்துடனும் ஸ்கோடா ஆட்டோ தனது புதிய பணிமனையை கோவில் திறந்துள்ளது.

இந்த புதிய பணிமனை
உப்பிலிபாளையம் பிரதான சாலை செளரிபாளையத்தில் திறக்கப்பட்டுள்ளது.

இது 45,585 சதுர அடியில் அதாவது 4607 சதுர மீட்டரில் திறக்கப்பட்டுள்ளது. இந்த பணிமனை ஒரே சமயத்தில் 50 கார்கள் நிறுத்தும் வசதியை கொண்டுள்ளது.

இந்த பணிமனை ஆண்டுக்கு அவர்கள் 20 ஆயிரம் கார்கள் சர்வீஸ் செய்யும் திறன் கொண்டது.
இங்கு 40 பணியாளர்கள் பணியமர்த்தப்பட்டுள்ளனர்.
ஸ்கோடாவின் 4 மாடல் கார்களான ஸ்கோடா சூப்பர்ப், ஸ்கோடா ஆக்டோவியா, ஸ்கோடா ராபிட் மற்றும் ஸ்கோடா கோடியக் ஆகிய கார்கள் இந்தியாவில் விற்பனை செய்யப்படுகிறது.

நாடு முழுவதும் 64 விற்பனை மையங்களும் 62 சேவை மையங்களும் கொண்டுள்ளதாக தெரிவித்தார்.

மேலும் கோவை மக்கள் மத்தியில் மட்டும் இல்லாமல் பல மாநிலங்களில் இருந்தும் எங்களுடைய
ஸ்கோடா கார்களை மக்கள் விரும்பி வாங்கி உபயோகித்து வருகிறார்கள். வாடிக்கையாளர்கள் மேலும் மேலும் எங்கள் நிறுவனத்தை மிகவும் விரும்புவதாகவும் கூறினார்.

இந்த வெற்றி என்னுடைய தனிபட்ட வெற்றி இல்லை எங்கள் நிறுவனத்தில் பணிபுரியும் அத்தனை பேரின் ஒத்துழைப்பு தான் இந்த வெற்றிக்கு காரணம் என்றார்.

கோவைலிருந்து செய்தியாளர்
ருக்கிவாணி
Expressnews.asia
expressnewsruki@gmail.com

About Admin

Check Also

கோவையில் அனைத்து சமூக மக்கள் கட்சி அறிமுகம்.

கோவையில் சின்னவேடம்பட்டி முருகன் நகர் பகுதியில் தலைமை இடமாக கொண்டு செயல்படும் அனைத்து சமூக மக்கள் கட்சி,கோவை பத்திரிக்கையாளர் மன்ற …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.