Thursday , November 21 2019
Home / State-News / கோவையில் அனைத்து சமூக மக்கள் கட்சி அறிமுகம்.

கோவையில் அனைத்து சமூக மக்கள் கட்சி அறிமுகம்.

கோவையில் சின்னவேடம்பட்டி முருகன் நகர் பகுதியில் தலைமை இடமாக கொண்டு செயல்படும் அனைத்து சமூக மக்கள் கட்சி,கோவை பத்திரிக்கையாளர் மன்ற அரங்கில் அறிமுக விழா நடைபெற்றது.

பத்திரிக்கையாளர் சந்திப்பில் கட்சிக்கொடி மற்றும் பெயர் அறிமுக நிகழ்ச்சி நடைபெற்றது.

அப்போது கட்சியின் கொடியை அறிமுகப்படுத்தி பேசிய கட்சி நிர்வாகிகள், அனைத்து சமூக மக்கள் கட்சியின் கொள்கையும், கோட்பாடுகளையும் என்ன என்பதை தெரிவித்தனர்.

கட்சியின் கொள்கையும் கோட்பாடுகளும் வருமாறு

1.இந்தியாவில் பிறந்த எந்த ஒரு மனிதனும் இரவில் தூங்கச் செல்லும் போது வெறும் வயிற்றுடன் பசியோடு தூங்கக்கூடாது,எனவே அனைவருக்கும் கண்டிப்பாக உணவு வேண்டும்.

 1. வேளாண்மைத் தொழிலே நமது நாட்டின் முதன்மையான தொழில் எனவே வேளாண்மைத் தொழில் செய்யும் தொழிலாளர்களை அவர்களது வாழ்வாதாரம் சிறக்க அரசு தொழிலாக அறிவிக்க வேண்டும்.
 2. தென்னை, பனையில் கள் இறக்க அனுமதி வழங்கப்படும்.4. அதேபோல் பனைத் தொழிலை மேம்படுத்த அத்தொழிலில் நவீன ஆராய்ச்சி மூலம் மேம்படுத்தி, பனையிலிருந்து உணவு பொருள்கள் அல்லாத வேறு விதமான எண்ணெய் பொருள்கள் தயாரித்து வினியோகிக்க வழிவகை செய்யப்படும்.
 3. கச்சதீவு மீதான உரிமையை இலங்கை அரசிடம் முழுமையாக திரும்பப் பெற மத்திய மாநில அரசிடம் போராடுவோம்.6. மத்திய அரசிடமிருந்து நவோதயா பள்ளிகள் தொடங்க முயற்சிகள் மேற்கொள்ளப்படும், அதேபோல் மாநிலத்தில் ஒரு தொகுதிக்கு 2 நவோதயா பள்ளிக்கூடங்கள் தொடங்க மத்திய, மாநில அரசிடம் அறிவுறுத்தப்படும்.
 4. மருத்துவத்தில் இ.எஸ்.ஐ. மருத்துவமனையில் அனைத்து விதமான தொழிலாளர்களுக்கும் பாகுபாடு இல்லாமல் மருத்துவ பயன் பெற அல்லது கிடைத்திட முத்தாய்ப்பான புதிய முறையில் செயல்படுத்த வேண்டுகோள் செய்யப்படும்.
 5. நாட்டில் சுகாதாரத்தை முழுமையாக பேணுவதற்கு அனைத்து குப்பைத்தொட்டி களையும் அகற்றிவிட்டு துப்புரவு தொழிலாளர்கள் மூலம் வீடு வீடாக நேரில் சென்று குப்பைகளை பெற்று, அதனை வைத்து மறுசுழற்சி மூலம் வேறு பொருள்கள் தயாரிக்க அரசிடம் பரிந்துரைக்கப்படும்.
 6. உணவு கழிவுப்பொருள்களை பொது மக்களிடம் பெற்று அதன் மூலம் இயற்கை உரம் தயாரித்து அதனை பொதுமக்களுக்கு இலவசமாக இயற்கை உரமாக கொடுக்கப்படும்.
 7. ஒருங்கிணைந்த கூட்டு பண்ணை திட்டம் மூலம் மகளிர் சுய உதவி குழுக்களைக் கொண்டு பாரம்பரிய முறையில் விவசாயத்தை நடத்திட வழிவகை செய்யப்படும்.
 8. அதேபோல் நாட்டு மாடு, ஆடு ,நாட்டு கோழி பண்ணை திட்டம் கிராமம் தோறும் ஏற்படுத்தி புதிய வேலை வாய்ப்பினை கொடுப்போம்.
 9. மீனவர் தொழிலில் பணியாளராக பணிபுரியும் பெண்களுக்கு தனி வாரியம் அமைத்து தரப்படும்.
 10. தற்போதைய காலச் சூழலில் தொழில் உற்பத்தி பெருவாரியாக குறைந்து வரும் வேலையில் புதிய தொழில்நுட்பத்தின் மூலம் புதிய தொழில்கள் தொடங்கப்பட்டு இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு கொடுக்கப்படும்.
 11. சேவைத் தொழில் அதாவது சர்வீஸ் தொழிலாக செய்யப்படும் எந்த ஒரு தொழிலாக இருந்தாலும், அவர்களுக்கு தனி வாரியம் அமைக்கப்படும்.
 12. மழைநீர் சேமிப்பு திட்டத்தை முழுமையாக பயன்படுத்தும் விதமாக பொழிகின்ற மழை நீரை சேமிக்கும் விதமாக நிலத்தடி நீர் உயர்வு திட்டத்தை மாநிலம் முழுவதும் செயல்படுத்தப்படும்.
 13. தமிழகத்தில் அனைத்து மக்களும் பயன்பெறும் வகையில் சுகாதாரமான குடிநீர் நாள் ஒன்றுக்கு 20 லிட்டர் தண்ணீர் 10 ரூபாய்க்கு கொடுக்க வழி வகை செய்யப்படும்.இவ்வாறாக 16 அம்ச கோரிக்கைகளை யும் செயல்முறை படுத்தவும், அதன் மூலம் நாட்டு மக்கள் பயன்பெற இன்று (நேற்று) அனைத்து சமூக மக்கள் கட்சி, சமத்துவமும், சமாதானமும் ,சமநீதியும் ,பெற்று தன்னிகரில்லா தமிழகமாக உருவாக பாடுபடுவோம் என அக்கட்சியின் தலைவர் மருத்துவர் கா. செல்வராஜ், பொதுச்செயலாளர் கோவை பா. அமுதா, பொருளாளர் வி.பா. ஹரிகரன், மாநில அமைப்பு செயலாளர் நா.அக்னி சிவக்குமார், இணை செயலாளர் சுப்பிரமணியன், ஆகியோர் கூட்டாக தெரிவித்தனர். மேலும் அனைத்து சமுதாய மக்கள் கட்சியின் நிர்வாகிகள், மாநில துணைத்தலைவர் பேபி ஷகிலா, மாநில மகளிர் அணி தலைவி ஷகிலா பானு, கிரேஸி, காஞ்சிபுரம் மாவட்ட மகளிர் அணி தலைவி மது, திருநெல்வேலி தொகுதி சித்ரா, திருநெல்வேலி மாவட்ட பொறுப்பாளர் ராசு, மதுரை மாவட்ட மகளிர் அணி தலைவி மல்லிகா, திருப்பூர் மாவட்ட செயலாளர் விஜயலட்சுமி, ஈரோடு மகளிர் அணி மாவட்ட செயலாளர் சாந்தி, நீலகிரி மாவட்ட மகளிர் அணி துணை செயலாளர் ஷீபா பொற்செல்வி, திருவள்ளூர் மாவட்ட செயலாளர் இ. பி.பழனி, கொங்கு மண்டல அமைப்புச்செயலாளர் எஸ்.ராமலிங்க ராஜா, மற்றும் மகளிர் அணி யாஸ்மின், கட்சி தொண்டர்கள், ஆகியோர் கட்சி அறிமுக விழாவில் கலந்து கொண்டனர் என்பது குறிப்பிடத்தக்கது.

கோவைலிருந்து செய்தியாளர்
ருக்கிவாணி
Expressnews.asia

About Admin

Check Also

கோவை மாநகராட்சி அலுவலகத்தில் மக்கள் குறைதீர்க்கும் கூட்டம்

கோவை மாநகராட்சி அலுவலகத்தில் மக்கள் குறைதீர்க்கும் கூட்டம் மாநகராட்சி ஆணையாளர் மற்றும் தனி அலுவலர் ஷ்ரவன்குமான் ஜடாவத் இ.ஆ.ப அவர்களின் …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.