Thursday , September 19 2019
Home / State-News / கோவையில் ஜோயாலுக்காஸ் புதிய ஷோரூம் திறப்பு விழா

கோவையில் ஜோயாலுக்காஸ் புதிய ஷோரூம் திறப்பு விழா

கோவையில் ஜோயாலுக்காஸ் புதிய ஷோரூம் திறப்பு விழா

உலகம் முழுவதும் 2020ம் ஆண்டுக்குள் 200 ஷோரூம்கள் திறக்க திட்டம்:

கோவை கிராஸ்கட் சாலையில் ஜோயாலுக்காஸ் புதிய ஷோரூமை நடிகர் விஜய்சேதுபதி திறந்து வைத்தார். மார்டின் குரூப் ஆப் கம்பெனி மார்டின் லீமா ரோஸ் குத்துவிளக்கு ஏற்றி துவக்கி வைத்து முதல் விற்பனை நகை பெற்றுக்கொண்டார். மற்றும் பலர் உடனிருந்தனர்.

ஜோயாலுக்காஸ் குழுமம் சர்வதேச அளவிலான மல்டி பில்லியன் வர்த்தகத்தில் ஈடுபடும் உலகின் முன்னணி நிறுவனங்களில் ஒன்றாகும். யுஏயி, சவுதி அரேபியா, பஹ்ரைன், ஓமன், குவைத், கத்தார், சிங்கப்பூர், மலேசியா, யுகே, யுஎஸ்ஏ, இந்தியா உள்ளிட்ட நாடுகளில் செயல்பட்டு வருகிறது.

ஜூவல்லரி, மணி எக்ஸ்சேஜ், பேஷன் மற்றும் டெக்ஸ்டைல்ஸ், சொகுசு விமான சேவை, வணிக வளாகம் உள்ளிட்ட பல்வேறு துறைகளில் இந்நிறுவனம் ஈடுபட்டு வருகிறது. உலகம் முழுவதும் 8000 பணியாளர்கள் ஜோயாலுக்காஸ் நிறுவனத்தில் பணியாற்றி வருகிறார்கள்.

உலகின் அங்கீகரிக்கப்பட்ட, முன்னணி ரீடெய்ல் செயின் என்ற அந்தஸ்தையும் இந்நிறுவனம் பெற்றுள்ளது.

மூன்று புதிய ஷோரூம்கள்

இந்தநிலையில், ஜோயாலுக்காஸ் நிறுவனம் தமிழகத்தில் சென்னை, மதுரை, கோவை என மூன்று இடங்களில் தனது புதிய ஷோரூம்களை திறந்து உள்ளது.

அப்போது அவர் தெரிவிக்கையில்,

ஜோயாலுக்காஸ் நிறுவனத்தின் புதிய ஷோரூம்களை திறந்து வைப்பதில் மகிழ்ச்சி அடைகிறேன்.

உலகின் பேவரிட் ஜூவல்லரி என்று அழைக்கப்படும் ஜோயாலுக்காஸ் ஷோரூமில், தங்கம், வைரம் உள்ளிட்ட நகைகள் உலகத்தர ஷாப்பிங் அனுபவத்தில் இருக்கும். இதில், புத்தம் புதிய கலெக்ஷன்களும், டிசைன்களும் அறிமுகப்படுத்தப்பட்டு உள்ளது என தெரிவித்தார்.

ஜோய் ஆலுக்காஸ் பெருமிதம்

தமிழ்நாடு எங்களுக்கு மிகவும் முக்கியத்துவம் வாய்ந்தது. வாடிக்கையாளர்கள் அளித்து வரும் ஆதரவே மேலும் பல ஷோரூம்களை நாங்கள் விரிவுபடுத்திட காரணமாக உள்ளது என ஜோயாலுக்காஸின் சேர்மன் ஜோய் ஆலுக்காஸ் தெரிவித்துள்ளார்.

இந்த பிரமிக்க வைக்கும் ஷாப்பிங் அனுபவம், சிறந்த சேவை, மக்கள் தங்கள் பணத்திற்கான சரியான மதிப்பை பெறுவது அனைத்தும் எங்களது ஷோரூமில் உறுதி செய்யப்படும் என ஜோயாலுக்காஸின் நிர்வாக இயக்குனர் ஜோய் ஆலுக்காஸ் தெரிவித்துள்ளார். மேலும், 2020 க்குள் உலகம் முழுவதிலும் ஜோயாலுக்காஸ்க்கு 200 ஷோரூம்கள் இருக்கும் என்றும் அதற்கான விரிவாக்கப் பணிகளை திட்டமிட்டு வருவதாகவும் தெரிவித்தார்.

திறப்பு சலுகையாக, ஒவ்வொரு பர்ச்சேஸ்க்கும் வீட்டு உபயோகப் பொருட்களின் நிச்சயப் பரிசு வாடிக்கையாளர்களுக்கு அளிக்கப்படுகிறது. நகைகளுக்கு ஆயுட்கால இலவச பராமரிப்பு, 1 வருட இன்சூரன்ஸ் உள்ளிட்ட பல சலுகைகள் ஷோரூமில் காத்திருக்கிறது எனவும் அவர் தெரிவித்தார்.

கோவைலிருந்து செய்தியாளர்
ருக்கிவாணி
Expressnews.asia
expressnewsruki@gmail.com

About Admin

Check Also

அப்துல் காலம் நினைவு தினம்

தேவகோட்டை – தேவகோட்டை சேர்மன் மாணிக்க வாசகம் நடுநிலைப் பள்ளியில் அப்துல்கலாம் நினைவு நாளினை முன்னிட்டு பள்ளி வளாகத்தில் மரக்கன்றுகள் …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.