Wednesday , July 24 2019
Home / District-News / எஸ்.டி.பி.ஐ கட்சியின் நிர்வாகிகள் இந்திய யூனியன் முஸ்லிம் லீக் கட்சியில் இணைந்தனர்

எஸ்.டி.பி.ஐ கட்சியின் நிர்வாகிகள் இந்திய யூனியன் முஸ்லிம் லீக் கட்சியில் இணைந்தனர்

இந்திய யூனியன் முஸ்லிம் லீக் கட்சியின் இளைஞரணி தேர்தல் ஆலோசனை கூட்டம் சென்னை எழும்பூரில் உள்ள தனியார் ஹோட்டலில் மாநில செயலாளர் அபுபக்கர் தலைமையில் நடைபெற்றது.

இந்நிகழ்ச்சியின் போது எஸ்.டி.பி.ஐ கட்சியின் நிர்வாகி பாடி ரசூலுதீன் தலைமையில் 50 க்கும் மேற்பட்ட எஸ்டிபிஐ கட்சியில் இருந்து விலகி அகில இந்திய முஸ்லீக் கட்சியின் பொதுச் செயலாளர் சட்டமன்ற உறுப்பினர் அபுபக்கர் தலைமையில் இணைந்தனர்.

ரசூலுதீன் பேசுகையில்:-

நடைபெறவிருக்கின்ற நாடாளுமன்ற தேர்தலில் எஸ்.டி.பி.ஐ கட்சி , அம்மா மக்கள் முன்னேற்ற கழகத்துடன் கூட்டணி அமைத்து மூன்றாவது அணியாக போட்டியிடுவதால் பாஜகவுக்கு மறைமுகமாக வாக்களிப்பதற்கு சமம் என்பதால் நாங்கள் இந்திய யூனியன் முஸ்லிம் லீக் கட்சியில் இணைந்துள்ளோம்.

மேலும் மதசார்பற்ற ஜனநாயக கூட்டணி மத்திய சென்னை வேட்பாளர் தயாநிதி மாறனை வெற்றி பெறுவதற்காக தீவிரமாக தேர்தல் பணியாற்றுவோம் என்றார்.

பேட்டி: பாடி ரசூலுதீன்

About Admin

Check Also

Director Myskin launched “ Heart Quake” by Best Selling Author

Director Myskin launched “Heart Quake”, the latest work of national best selling author, K. Vijaykarthikeyan …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.