Wednesday , November 20 2019
Home / District-News / கரூர் பாராளுமன்ற தொகுதியின் காங்கிரஸ் வேட்பாளர் செல்வி.ஜோதிமணி

கரூர் பாராளுமன்ற தொகுதியின் காங்கிரஸ் வேட்பாளர் செல்வி.ஜோதிமணி

கரூர்;, ஏப்ரல் , 2019: பெண்கள் நாட்டின் தேவதைகள். பெண் இல்லாத வீடும் சரி, நாடும் சரி பொலிவு பெறுவதில்லை. உலகம் இயங்க உயிர் கொடுப்பவள் பெண். அன்பு எனும் தென்றலை வீசி தாய்மை உள்ளத்தோடு அவர்கள் இருப்பதாலேயே இந்த உலகம் இன்னும் இயங்கிக் கொண்டு இருக்கிறது.

அத்தகைய பெண்களின் நிலை சமுதாயத்தில் பல நூற்றாண்டுகளாகவே பெருமைப்படும் படி இல்லை. அத்தி பூத்தாற்போல ஆங்காங்கே சில மகான்கள் தோன்றி அவர்களுக்காக குரல் கொடுத்தாலும் வெளிவர முடியாமல் வீட்டு பறவைகளாகத்தான் இருந்தார்கள்.

‘பட்டங்கள் ஆள்வதும் சட்டங்கள் செய்வதும் பாரினில் பெண்கள் நடத்தவந்தோம்”; என்று பாரதி கூட தன் மனக் குமுறலை பாடல்கள் மூலம் தான் வெளிப்படுத்தினார்.

நிலைமை சிறிது மாறி உயர் வகுப்பு பெண்கள் மட்டும் ‘பள்ளிபடிப்பு” என்ற கொம்பு தேனை சாப்பிட்ட போது சமுதாயத்திலுள்ள அடித்தட்டு மக்களுக்கு அது எட்டாக் கனியாகவே இருந்தது.

காமராஜர் என்ற மனிதரின் மாபெரும் முயற்சியால் ஆயிரக்கணக்கான பள்ளிகள் தொடங்கப்பட்டு ஏழை பெண் குழந்தைகளுக்கும் ‘கல்வி’ என்ற கனி கிடைத்தது.

அவர்களும் படித்தார்கள், வேலைக்கு சென்றார்கள். சமுதாயம் அவர்கள் படிப்பதையும் வேலைக்கு செல்வதையும் கொஞ்சம் கொஞ்சமாய் அங்கீகரிக்க ஆரம்பித்தது.

ஆனால்?
ஆம் ஆனால்… அரசியல் என்றவானில் அவர்களால் சிறகடிக்க முடியவில்லை. விதி விலக்காக சிலர் அரசியலுக்கு வந்தாலும் அதுவும் உயர் வகுப்பு பெண்கள் மற்றும் பணக்கார பெண்களுக்கு மட்டுமே சாத்தியமாயிற்று…

ஒரு சாதாரண பெண்…
விவசாய பின்னணி கொண்ட பெண்…
பொருளாதார வசதியில் சாதாரண குடும்பத்தில் வந்த பெண்…
முதல் தலைமுறையாய் படித்து முடித்து வந்த பெண்…

சிறு வயதிலேயே தந்தையை இழந்து தன் தாயின் ஆதரவோடு வளர்ந்த பெண்…

தன் விடாமுயற்சியாலும், மக்கள் சேவையாலும் மன உறுதியாலும் படிப்படியாய் முன்னேறி இன்று கரூர் பாராளுமன்ற தொகுதியின் காங்கிரஸ் வேட்பாளராக நம் முன் நின்று கொண்டிருக்கிறார். அவர் தான் நம் அன்பு சகோதரி செல்வி. ஜோதிமணி அவர்கள்.

அவரின் இந்த வரவு பல லட்சோப லட்சம் பெண்களுக்கு ஒரு மாபெரும் தைரியத்தை கொடுத்துள்ளது.

ஒவ்வொரு பெண்ணும் தானே தனக்கே சீட் கிடைத்து நிற்பதுபோல் பெருமையடைந்து இருக்கிறார்கள்.

காரணம்…
இவர் எந்த MP-யின் பேத்தியோ, மகளோ, மனைவியோ அல்ல.

எந்த ஜமீன் வீட்டு வாரிசும் கிடையாது. ஒரு ஏழை விவசாயியின் மகள்.

இவரின் வெற்றி சமுதாயத்தில் ஒரு மாபெரும் மாற்றத்தை உருவாக்கும் என்பதில் எள்ளவும் சந்தேகம் இல்லை. எந்த எளிய மக்களும் எளிதில் அணுகக்கூடிய எல்லைக்குள் இவர்கள் இருப்பதால் இனி அந்த தொகுதி மக்கள் தங்கள் பிரச்சனைகளுக்காக தங்கள் M.P ஐ தேடி அல்லாடி அலைய வேண்டிய அவசியமில்லை.

ஆண்கள் மட்டுமே கோலோச்சும் அரசியல் சதுரங்கத்தில் பெண் முதல் அடியெடுத்துவைக்கும் போதே வெட்டி வெளியே அனுப்பப்படுகிறாள்.

மனரீதியாக எத்தனையோ தாக்குதல்கள்… எங்களை மீறி வந்துவிடுவாயா என்ற ஆணாதிக்க எகத்தாளம்… குடும்பத்தில் இருந்தே எதிர்ப்பு…சமூக வலை தளங்களில் கேவலமான சித்தரிப்பு…

உண்மையிலேயே மன தைரியம் இல்லாவிட்டால் அவளுக்கான அரசியல் இடத்தை பிடிக்க முடியாமல் வெளியேறியே ஆக வேண்டும்! தைரியம் மட்டுமல்ல… அசாத்திய மன வலிமையும் வேண்டும்!

இத்தனை இடர்களையும் தன் மன வலிமை தாண்டி தன் இடத்துக்கான தேர்தல் களத்தில் லட்சோப லட்சம் பெண்களின் பரிபூரண ஆசியோடும், எதிர்பார்ப்போடும் நிற்கிறார் – ஜோதிமணி.

இந்த பெண்ணை தேர்ந்தெடுத்தால் ஒருமாற்றம் வரும் என்று மக்கள் மனதார நம்புகின்றனர். ஆச்சரியம் என்னவென்றால் ஆண்கள் கூட அதை ஆமோதிக்கிறார்கள்.

இவருக்கு இந்த சீட்டை கொடுத்து காங்கிரஸ் பிரபுக்களின் கட்சி என்ற களங்கத்தை துடைத்துவிட்டது.

எதிர்கால அரசியலில் வானில் ஜொலிக்கப் போகும் சாமானிய பெண்களுக்கு இந்த ஜோதிமணி என்ற நட்சத்திரம் தான் நம்பிக்கை நட்சத்திரம், வழிகாட்டி நட்சத்திரம்.

தாய்மையை போற்றும் அனைவரும் அவரின் வெற்றியில் பங்கெடுக்க வேண்டும். எதிர்காலத்தில் சாமானிய பெண்களை கண்டு கொள்ளாத எந்த அரசியல் கட்சியும் அதன் நீண்ட காலபயணத்தை தொடர முடியாது! அவர்கள் விழித்துக் கொள்ள வேண்டிய நேரமிது…

-செல்வி கரூர்.,

About Admin

Check Also

VR Chennai in association with Blue Cross of India organised ‘Adoptathon

VR Chennai in association with Blue Cross of India organised Adoptathon November 2019 on Sunday …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.