Wednesday , July 24 2019
Home / EDUCATION / இராமகிருஷ்ணா தொழில் நுட்பக் கல்லூரியில் ஐந்தாம் ஆண்டு கூடைப்பந்துப் போட்டி

இராமகிருஷ்ணா தொழில் நுட்பக் கல்லூரியில் ஐந்தாம் ஆண்டு கூடைப்பந்துப் போட்டி

இராமகிருஷ்ணா தொழில் நுட்பக் கல்லூரியில் ஐந்தாம் ஆண்டு மாநில அளவிலான வி.இராஜயலட்சுமி நினைவு கோப்பைக்கான கூடைப்பந்துப் போட்டி

கோவை பச்சாபாளையத்திலுள்ள தன்னாட்சி நிறுவனமாகிய ஸ்ரீ இராமகிருஷ்ணா தொழில் நுட்பக் கல்லூரியில் ஐந்தாம் ஆண்டு மாநில அளவிலான வி.இராஜயலட்சுமி நினைவு கோப்பைக்கான கூடைப்பந்துப் போட்டி மார்ச் 18 தேதி முதல் 20 தேதி வரை மூன்று நாட்கள் கல்லூரி வாளகத்தில் நடைபெற்றது.

இவ்விழாவில் (கல்வித்துறை), எஸ்.என். ஆர் சன்ஸ் சாரிடபிள் டிரஸ்ட், முனைவ‌ர் எ.எபிநேசர் ஜெயக்குமார் இயக்குனர் வாழ்த்துரை வழங்கினார்.

இக்கல்லூரி முதல்வர் முனைவர் எம். பால்ராஜ் வரவேற்புரையாற்றினார்.

இவ்விழாவிற்கு சிறப்பு விருந்தினர்களாக எஸ்.என்.ஆர்.சன்ஸ் சாரிடபிள் டிரஸ்டின் சார்பாக ரமா மற்றும் சமூக ஆர்வலர் உஷா தேவி ஆகியோர் கலந்து கொண்டு போட்டியில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு சுழற்கோப்பை மற்றும் ரொக்கப் பரிசுகளை வழங்கி அவர்களை பாராட்டினார்கள்.

இப்போட்டில் பரிசுகள் பெற்ற கல்லூரிகள் முதல் பரிசு ரூ. 20,000 மற்றும் சுழற்கோப்பை சென்னை சத்யபாமா பல்கலைக்கழகம் அணியும், இரண்டாம் பரிசு ரூ.15,000 கோப்பையை கோவை ஜி.ஆர்.டி. கல்லூரி அணியும், மூன்றாம் பரிசு 10,000 கோப்பையை கோவை ஸ்ரீ ஈஸ்வர் கல்லூரி அணியும், நான்காம் பரிசு ரூ.7000 த்தை பி.எஸ்.என். கல்லூரி அணியும் பெற்றன.

விழாவில் கல்லூரி மாணவ, மாணவிகள், ஆசிரியர்கள் மற்றும் பலர் இக் கூடைப்பந்துப் போட்டிகளை கண்டு மகிழ்ந்தார்.

கோவைலிருந்து செய்தியாளர்
ருக்கிவாணி
Expressnews.asia
expressnewsruki@gmail.com

About Admin

Check Also

ITM BUSINESS SCHOOL HELD IT’S 25th CONVOCATION

Chennai: ITM Business School, Chennai conducted its 25th Convocation Ceremony with all its glory and …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.