Tuesday , November 19 2019
Home / District-News / ராணுவ வீரர்களுக்கு பத்திரிகையாளர் சங்கர் சார்பில் கண்ணீர் அஞ்சலி

ராணுவ வீரர்களுக்கு பத்திரிகையாளர் சங்கர் சார்பில் கண்ணீர் அஞ்சலி

காஷ்மீர் தீவிரவாதிகளின் தாக்குதலில் நம் நாட்டுக்காக உயிர் தியாகம் செய்த ராணுவ வீரர்களுக்கு சென்னை பள்ளிகாரணை அருகே திருவள்ளுவர் பத்திரிகையாளர் சங்கர் சார்பில் நடைபெற்ற கண்ணீர் அஞ்சலி நிகழ்சியில் காவல்துறையினர் கலந்து கொண்டு மெழுகு வர்த்தி ஏற்றி, மலர் தூவி கண்ணீர் அஞ்சலி செலுத்தினர்.

சென்னை பள்ளிகாரணை காவல் நிலையம் அருகே திருவள்ளுவர் பத்திரிகையாளர் சங்கம் சார்பில் மாநில தலைவர் அ.ராஜா தலைமையில் காஷ்மீர் புல்வாமாவில் தீவிரவாதிகள் தாக்குதலில் உயிர் தியாக செய்த இந்திய ராணுவ வீரர்களுக்கு கண்ணீர் அஞ்சலி செலுத்தும் நிகழ்ச்சி நடைபெற்றது.

இதில் மடிப்பாக்கம் காவல் உதவி ஆணையர் கெங்கையராஜ் அவர்கள், பள்ளிகாரணை காவல் ஆய்வாளர் ஆல்பின்ராஜ், உதவி ஆய்வாளர்கள் உள்ளிட்டோர் கலந்து கொண்டு தீவிரவாத தாக்குதலில் நம் நாட்டிற்காக உயிர் தியாகம் செய்த 44 இராணுவ வீரர்களுக்கு மலர் தூவி, மெழுகுவர்த்தி ஏற்றி கண்ணீர் அஞ்சலி செலுத்தினர்.

இதில் திருவள்ளுவர் பத்திரிகையாளர் சங்க நிர்வாகிகளும், காவல்துறையினர், பொதுமக்கள் என ஏராளமானோர் உயிர் தியாகம் செய்த இராணுவ வீரர்கள் திருவுருவ படத்திற்கு மலர் தூவி, மெழுகுவர்த்தி ஏற்றி மறியாதை செலுத்தினர்.

About Admin

Check Also

கட்டுமான தொழிலாளர்கள் கண்காட்சி சென்னை தாம்பரம் கேம்ப் ரோடில் நடைபெற்றது.

ஜெ2எஸ் ஹோம் கேர் சொலுஷன் என்ற அமைப்பின் மூலம் சென்னை கிழக்கு தம்பரத்தில் வாசுதேவ திருமண மண்டபத்தில் நடைபெற்றது ரூபி …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.