சென்னை பெருநகர காவல் ஆணையாளர் திருஅ.கா.விசுவநாதன் போரூரிலுள்ள FAITH HOME ORPHANAGE என்ற குழந்தைகள் காப்பகத்திற்கு சென்று அங்குள்ள சிறுவர், சிறுமியர்களுடன் பொங்கல் கொண்டாடினார். பின்னர் சிறுவர், சிறுமியர்களுக்கு காவல் ஆணையாளர் அவர்கள் புத்தாடைகள் மற்றும் தேவையான பொருட்கள் வழங்கி அனைவருக்கும் பொங்கல் வாழ்த்துக்களை தெரிவித்தார்.
இந்நிகழ்ச்சியில் சென்னை பெருநகர போக்குவரத்து காவல் கூடுதல் ஆணையாளர் திரு.ஏ.அருண், போக்குவரத்து வடக்கு இணை ஆணையாளர் திரு.நஜ்மல் ஹேடா, மேற்கு மண்டல இணை ஆணையாளர் திருமதி.பி.விஜயகுமார், போக்குவரத்து காவல் துணை ஆணையாளர்கள் திரு.பி.பகலவன், போக்குவரத்து தெற்கு ஆணையாளர் திரு.பி.சாமிநாதன், உதவி ஆணையாளர் ராதாகிருஷ்ணன், உதவி ஆணையாளர்கள் மற்றும் காவல் ஆளிநர்கள் கலந்து கொண்டனர்.