Thursday , June 27 2019
Home / EDUCATION / “பொங்கல் விழா” 2019 ஸ்ரீ ராமகிருஷ்ணா கலை அறிவியல் கல்லூரியில்.

“பொங்கல் விழா” 2019 ஸ்ரீ ராமகிருஷ்ணா கலை அறிவியல் கல்லூரியில்.

“பொங்கல் விழா” 2019
கோவை நவ இந்தியா அருகிலுள்ள ஸ்ரீ ராமகிருஷ்ணா கலை அறிவியல் கல்லூரியில் “பொங்கல் விழா” 2019 நிகழ்ச்சி நடைபெற்றது.

இவ்விழாவை முதல்வர் மற்றும் செயலர் முனைவர் கு.கருணகரன் தலைமை தாங்கி துவக்கி வைத்தார்.

இவ்விழாவில் துணை முதல்வர் சு. தீனா மற்றும் கல்லூரி பேராசிரியர்கள், அலுவலர்கள், மாணவ, மாணவிகள் கலந்து கொண்டு காலை 9.30 மணி முதல் பொங்கல் நிகழ்வுகளுடன் கூடிய கலாச்சார, விளையாட்டுக்களை உள்ளடக்கிய நிகழ்வுகள் நடத்தப்பட்டது.

கல்லூரி பொங்கல் விழாவை குறித்து முனைவர் கு.கருணகரன் கூறிகையில்
இளைஞர்களிடையே பண்டைய கலாசார முறை குறித்து விழிப்புணர்வு ஏற்பட்டு வருகிறது.

இந்தாண்டு பொங்கல் விழாவில், மாணவர்கள் வேஷ்டி, சட்டை அணிந்தும், மாணவிகள் சேலை உடுத்தியும் கலந்து கொண்டனர்.

கல்லில் அடுப்பு கூட்டி, மண் பானையில் பொங்கலிட்டு, குலவி எழுப்பி, கரும்பையும் ருசித்தனர்.

விழாக்களில், கரகாட்டம், ஒயிலாட்டம், பொய்க்கால் குதிரை ஆட்டம், கும்மியாட்டம், புலி ஆட்டம், காவடியாட்டம், உரி அடித்தல் என, மாணவர்கள் பல்வேறு கலாசார கலைகளிலும்
அசத்தினர்.

பொங்கலோ… பொங்கல்! கிராமங்கள் மட்டுமின்றி நகரமும் களை கட்டியது கல்லூரி விழாக்களால் இளைஞர்கள் உற்சாகம்

அரங்கேறும் பொங்கல் விழாக்களால், மாணவ, மாணவிகள் இடையே உற்சாகம் ஏற்பட்டுள்ளது.

மொத்தத்தில், இந்தாண்டு பொங்கல் விழா களைகட்டியுள்ளது.

கோவைலிருந்து செய்தியாளர்
ருக்கிவாணி
Expressnews.asia
expressnewsruki@gmail.com

About Admin

Check Also

SRMIST hosts guest lecture by former Chief Election Commissioner N Gopalaswami

Taking a dig at winners in the recently concluded Lok Sabha elections who had made …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.