Monday , July 22 2019
Home / District-News / ”கோவை விழா” ஒவ்வொரு ஆண்டும் கொண்டாட்டம் நடத்தப்பட்டு வருகிறது.

”கோவை விழா” ஒவ்வொரு ஆண்டும் கொண்டாட்டம் நடத்தப்பட்டு வருகிறது.

கோவையில் ”கோவை விழா” ஒவ்வொரு ஆண்டும் கொண்டாட்டம் நடத்தப்பட்டு வருகிறது.

இதில் பாரம்பரிய கலைகளும், உணவு திருவிழாவும் மற்றும் கேளிக்கை நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டு வருகிறது.

இந்தாண்டுக்கான 11-வது ‘கோவை விழா’ இந்த விழாவில், டபுள் டெக்கர் பஸ், மக்கள் கலை தெரு, திறந்தவெளி திரைப்பட விழா, உணவுத்திருவிழா… என்று மக்களை அசத்த, ஏகப்பட்ட திட்டங்களை போட்டுள்ளது கோவை விழா குழு.

திருவிழா, புகைப்பட கண்காட்சி, காலாச்சார நிகழ்வுகள், தடகள போட்டிகள், விளையாட்டு போட்டிகள், பழங்குடியினரின் உற்பத்தி பொருட்கள் கண்காட்சி என சுமார் 150 நிகழ்ச்சிகள் நூற்றுக்கும் மேற்பட்ட இடங்களில் நடைபெற உள்ள நிலையில் விழாவின் முதல் நிகழ்ச்சியாக டபுள் டெக்கர் பேருந்து பயணம் துவக்க விழா வ. உ.சி.பூங்காவில் நடைபெற்றது.

இந்த டபுள் டெக்கர் பேருந்து பயணத்தை மாநகராட்சி ஆணையர் கே. விஜய கார்த்திகேயன், காவல் ஆணையர் சுமித் சரன் மற்றும் சமூக ஆர்வலர் அன்பரசன் மற்றும் பலர் கலந்து கொண்டு துவக்கி வைத்தனர்.

இப்பேருந்து பயணம் தினசரி காலை 10 மணி முதல் இரவு 8 மணி வரை ஒரு மணி நேர இடைவெளியில் இயக்கப்படும் எனவும் வ உ சி பூங்கா முதல் அவினாசி சாலை வழியாக கொடிசியா வரை இயாக்கப்படுகிறது.

இலவசமாக பொதுமக்களுக்கு பயண அனுமதி வழங்கப்படும்.

இப்பேருந்தில் பயணிக்க கோவை விழா மொபைல் ஆப் மூலம் முன்பகிவு செய்ய வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இப்பேருந்து பயணம் என்பது கோவைக்கு கிடைத்துள்ள ஒரு சிறந்த வாய்ப்பு என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

கோவைலிருந்து செய்தியாளர்
ருக்கிவாணி Expressnews.asia expressnewsruki@gmail.com

About Admin

Check Also

Director Myskin launched “ Heart Quake” by Best Selling Author

Director Myskin launched “Heart Quake”, the latest work of national best selling author, K. Vijaykarthikeyan …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.