Sunday , July 21 2019
Home / District-News / திரு உருவப்படம் திறந்து வைத்து கொடியேற்றி வைத்தார் முன்னாள் அமைச்சர் ஆ. ராசா

திரு உருவப்படம் திறந்து வைத்து கொடியேற்றி வைத்தார் முன்னாள் அமைச்சர் ஆ. ராசா

மேட்டுப்பாளையம்  ஓடந்துறையில்  திமுக கழக  முன்னாள் நகர மன்ற தலைவர் எம்.ஏ. ரஷாக் மற்றும் முன்னாள் நகர கழக செயலாளர் எம். ஏ. ஆர் கதிரவன் ஆகியோரின் திரு உருவப்பட திறப்பு விழாவும் 56 அடி உயர கொண்ட திமுக கழக புதிய கொடி கம்பமும் நட்டு கொடியேற்று விழாவும் நடந்தது.

இவ்விழாவை கழக மாவட்ட செயலாளர் சி.ஆர் ராமச்சந்திரன்  தலைமையில் நடைபெற்றது.

விழாவில் முன்னாள் நீலகிரி நாடாளுமன்ற உறுப்பினரும் முன்னாள் மத்திய அமைச்சருமான ஆ. ராசா  உருவப்படங்களுக்கு மாலை அணிவித்து  கொடி ஏற்றி சிறப்புரையாற்றினார்.

நிகழ்ச்சியில் கோவை மாவட்ட இளைஞரணி துணை அமைப்பாளர் எம்.ஏ.ஆர்.கே. ஹக்கீம்  வரவேற்புரை வழங்கினார்.

நிகழ்ச்சியில் மேட்டுப்பாளையம் முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் ப. அருண்குமார், மாவட்ட இளைஞரணி அமைப்பாளர் அசரப் அலி, நகர செயலாளர் முஹமது யூனஸ், முன்னாள்  நகர செயலாளர் ஆடிட்டர் ஹமீது, டி . ஆர் சண்முக சுந்தரம், எஸ் எம் டி கல்யாண சுந்தரம் மற்றும் மாவட்ட கழக நிர்வாகிகள் மாவட்ட இளைஞரணி நிர்வாகிகள் ஒன்றிய கழக செயலாளர்கள் மற்றும் நகர கழக நிர்வாகிகள் என பலரும் கலந்து கொண்டு விழாவினை சிறப்பித்தனர்.

About Admin

Check Also

15 சைவ, வீரசைவ மடாதிபதிகள் செய்தியாளர் சந்திப்பு

சென்னை மயிலாப்பூரில் உள்ள தனியார் விடுதியில் சிலை கடத்தல் தொடர்பாக இந்து ஆச்சாரிய சபாவுடன் துறவியர் பேரவையை சேர்ந்த 15 …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.