Monday , November 18 2019
Home / District-News / இலட்சிய ஜனநாயக கட்சி துவக்க விழா.

இலட்சிய ஜனநாயக கட்சி துவக்க விழா.

சென்னை டிச.4 இலட்சிய ஜனநாயக கட்சி துவக்க விழா சென்னை பத்திரிக்கையாளர் சங்கத்தில் நடைப்பெற்றது.

இலட்சிய ஜனநாயக கட்சியின் கொடி, மற்றும் 20 அம்ச கொள்கை வரைவையும் அக்கட்சியின் நிறுவனத் தலைவர் நெல்லை ஜீவா வெளியிட்டார்.

இந்நிகழ்ச்சியில் அமைப்புச் செயலாளர் எல்.ரவிக்குமார், பொருளாளர் நாஞ்சில் இருதயராஜ், கொள்கை பரப்புச் செயலாளர் சம்பத் குமார், துணைப் பொதுச் செயலாளார்கள் சுகுமார் , மயிலைராஜ், பரத், இளைஞரணி அமைப்பாளர் கமலேஷ் , மாநில தொழிலாளர் அணி செயலாளர் சாமுவேல், சென்னை மாவட்டச் செயலாளர் வெங்கடேஷ், சென்னை மேற்கு மாவட்டச் செயலாளர் பரணிராஜ் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.

கட்சியின் கொள்கைகள்
1) .தனிமனிதனை வளர்ச்சியே தேசத்தின் வளர்ச்சி
2) தரமான கல்வி நிறைவான வேலை
3) உலகத் தமிழர்களை ஒன்றிணைக்கும் வகையில் தனி வாரியம் மற்றும் தனி அமைச்சகம் உருவாக்குதல்
4) மண்பாண்டங்கள் தயாரித்தல் கூடை முடைதல் தேங்காய் நார் கயிறு தயாரித்தல் பொருட்கள் தயாரித்தல் நெசவுத் தொழில் போன்ற சிறு குறு தொழில்கள் வளர ஊக்குவித்தல்
5) மீனவர்களின் உரிமைகளை மீட்டு அவர்களின் வாழ்வாதாரங்களை பெருக்கி பாதுகாத்தல்
6) மலைவாழ் மற்றும் பழங்குடியின மக்களின் வாழ்வாதாரங்களையும் வாழ்க்கை முறையையும் உயர்த்துதல்
7) அரசு புறம்போக்கு நிலங்களை சீர்படுத்தி நம்மாழ்வார் பண்ணை பசுமை திட்டத்தை உருவாக்குதல்
8) ஆறு ஏரி குளம் கண்மாய் போன்ற நீர்நிலைகளில் கரையோரங்களில் பனைமரங்களை நட்டு பாதுகாப்பதுடன் தடுப்பணைகள் கட்டுதல்
9) மரங்களை வளர்த்து வளங்களைப் பெருக்கி காடுகளைப் பாதுகாத்தல்
10) இயற்கை வளங்களை பாதுகாக்கும் குடும்பங்களுக்கு அரசு சார்பில் உங்கள் வழங்கப்படுவதுடன் நவீன தொழில்நுட்பத்துடன் விவசாயம் மேற்கொண்டு கடன் இல்லாத விவசாயம் தலைமுறைகளை உருவாக்குதல்
11) உணவு மற்றும் எரிபொருள் கள் போன்ற அத்தியவாசியப் பொருட்களின் விலையை மக்களின் கருத்தைக் கேட்டு தீர்மானித்தல்
12) அனைத்துத் துறைகளிலும் பெண்களுக்கு சம வாய்ப்பு பாதுகாப்பு
13) லஞ்சம் ஊழல் மது மற்றும் கலாச்சார சீரழிவு இல்லாத சமுதாயத்தை உருவாக்குதல்
14) நாட்டு இன விலங்குகள் பறவைகள் மரங்கள் வளமான விதைகள் ஆகியவற்றுடன் பாரம்பரிய பண்பாடு மற்றும் கலாச்சாரத்தை பாதுகாத்தல்
15) பொதுமக்களுக்கு நீரின் அவசியத்தை விளக்குவதோடு மழைநீர் சேமிப்பு மூலம் நிலத்தடி நீர் மட்டத்தை உயர்த்த விழிப்புணர்வு ஏற்படுத்துதல்
16) அன்னை மொழியோடு சேர்த்து அனைத்து மொழிகளையும் கற்க ஊக்குவித்தல்
17) சுற்றுச்சூழல் மாசுபாட்டால் புவி வெப்பமடைவது பற்றிய விழிப்புணர்வை பொதுமக்களுக்கும் ஏற்படுத்தி மழை வளத்தை பெருக்கி மண்வளத்தை பாதுகாப்பதே
18) உலகளவிய போட்டி சூழலுக்கு ஏற்ப அனைத்து பள்ளி மற்றும் கல்லூரிகளில் தனித் திறமையை வளர்க்கும் விதத்தில் பாரம்பரிய கலைகளுடன் கூடிய புதிய பாடத் திட்டத்தை உருவாக்கி தரமான கல்வி புகட்டுவது கல்வி மருத்துவம் வேளாண்மை பொறியியல் உள்ளிட்ட பல துறைகளில் வளர்ந்து வரும் புதிய தொழில்நுட்பத்தை பயன்படுத்தி புதிய கண்டுபிடிப்புகளுக்கு மாணவர்கள் ஊக்குவிக்கப்படுவார்கள்
19) ஜாதி மத சமதர்ம சமுதாயம் உருவாக்குதல்
20) திருநங்கை , திருநம்பிகள். வாழ்வாதார மேம்பாடு
21) சட்டம் பற்றிய அனைத்து நுணுக்கங்களையும் அனைவரும் தெரிந்து கொள்ள மாவட்டம்தோறும் சட்ட அறிவு மையம் ஏற்படுத்துதல் ,

About Admin

Check Also

For Listings-Manchester City Football Club

Company Manchester City Football Club Event Football Festival Date Sunday 17th November 2019 Venue VR …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.