Monday , May 20 2019
Home / District-News / செம்பாக்கம் ச.சந்திரன் நினைவு அறக்கட்டளை மற்றும் லயன்ஸ் கிளப் சார்பில் கல்வி ஊக்கத்தொகை வழங்கும் விழா

செம்பாக்கம் ச.சந்திரன் நினைவு அறக்கட்டளை மற்றும் லயன்ஸ் கிளப் சார்பில் கல்வி ஊக்கத்தொகை வழங்கும் விழா


சென்னை தாம்பரம் அடுத்த செம்பாக்கத்தில், செம்பாக்கம் ச.சந்திரன் நினைவு அறக்கட்டளை மற்றும் லயன்ஸ் கிளப் சார்பில், 6வது ஆண்டாக, 10வது 12வது வகுப்பு பொதுதேர்வில் அதிக மதிப்பெண் பெற்ற மாணவ மாணவியருக்கு, கல்வி ஊக்கத்தொகை, சான்றிதழ், மற்றும் பதக்கம் வழங்கும் விழா நடைபெற்றது. சிஜேபி குழும இயக்குனர் லயன் ஜெயபிரதீப்சந்திரன் ஏற்பாட்டில் நடைபெற்ற இவ்விழாவில் தாம்பரம் சட்டமன்ற உறுப்பினர் எஸ்.ஆர்.ராஜா பங்கேற்று மாணவ மாணவியருக்கு ஊக்கத்தொகை, சான்றிதழ், பதக்கம் மற்றும் நலிந்தோர்க்கு நலத்திட்ட உதவிகள் வழங்கினார். இதில் லயன்ஸ் கிளப் மாவட்ட ஆளுநர் ஆர்.சுரேஷ், முதல் துணை ஆளுநர் எஸ்.சிவக்குமார், கிரிஜாசந்திரன்  லயன்ஸ் கிளப் நிர்வாகிகள் பாலசுப்பிரமணியன், ராபர்ட் லிவிங்ஸ்டன், திருஞானசம்பந்தம், வி.ஆர்.ரமேஷ், கே.சுப்பிரமணியன், ஜெ. வெங்கட்ராமன், வி.பஜேந்திரபாபு, எஸ்.பாஸ்கர், ஜி.யோகநாதன், கே.பாபு மற்றும் அறக்கட்டளையினர், லயன்ஸ் கிளப்பினர், மாணவ மாணவியினர், பெற்றோர்கள், உட்பட பொதுமக்கள் பலரும் கலந்துகொண்டனர்.

About Admin

Check Also

“Seed of the Divine” Book Release

Chennai, 2019: ‘Seed of the Divine’ a book authored by Dr C. K. Gariyali IAS …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.