தமிழ்நாடு மண்பாண்டத் தொழிலாளர்கள் ( குலாலர்) சங்கம் தமிழ்நாடு மண் பாண்டத் தொழிலாளர்கள் ( குலாலர்) சங்கத்தின் சென்னை மண்டல நிர்வாகிகள் கூட்டம் சென்னை கோடம்பாக்கம் நெடுஞ்சாலை, எண்.137, கக்கன் காலனியில் உள்ள மாநில தலைமை அலுவலகத்தில் 18.11. 2018 அன்று காலை 11.00 மணிக்கு சென்னை மண்டலத் தலைவர் திரு. G. M. எகாம்பரம் தலைமையில் நடைபெற்றது. அதில் நம் மாநிலத் தலைவர் ஜயா டாக்டர் சேம.நாராயணன் அவர்கள் மாநில பொதுச் செயலாளர் பாவலர் மா.கணபதி, மாநில பொருளாளர் மகேஷ் கண்ணன் மாநில தலைமை நிலைய செயலாளர் M. பெருமாள் பக்தர், மாநில இளைஞர் அணி தலைவர் S.N.பழனி, மாநில மகளிர் அணி தலைவி சரஸ்வதி அன்பு உள்ளிட்ட தலைவர்கள் மற்றும் மாவட்ட தலைவர்கள் உள்ளிட்ட நிர்வாகிகள், இளைஞர் அணி, மகளிர் அணி நிர்வாகிகள் உள்ளிட்டோர் கலந்து கொண்டார்கள். 10.06.2018 அன்று காஞ்சிபுரம் மாவட்ட மண்பாண்டத் தொழிலாளர்கள் குலாலர் மாநாடு மிக சிறப்பாக நடத்தியதற்கும் அதே போல் 23.09.2018 திருப்பூரிலும், 30.09.2018 கோவையிலும், 07.10.2018 ஈரோட்டிலும், 15.09.2018 அன்று சேலம் மாவட்டத்திலும் நடத்தி மாவட்ட நிர்வாகிகளுக்கும், உடனிருந்து பணியாற்றிய அத்துனை நல்ல உள்ளங்களையும் பாராட்டி பேசினார்கள். தமிழக கடலோர பகுதிகளில் கஜா புயலால் மீனவர்கள், விவசாயிகள், மண்பாண்டத் தொழிலாளர்கள் பெரிதும் பாதிக்கப்பட்டுளார்கள். கார்த்திகை மாதத்தில் அகல் விளக்கு, தை மாதத்தில் வரும் பொங்கல் திருநாளில் பொங்கலிட மண்பானைகள் அடுப்புக்கள் சட்டிப்பானைகள் செய்து பைத்திருந்த மண்பாண்டங்களையும் சூளை வைப்பதற்கு ஏற்ற விறகு, விரட்டி, வைக்கோல் மற்றும் களிமண் போன்ற மூலப் பொருட்கள் அனைத்தும் கஜா புயலாலலும் பெரும் வெள்ளத்திலும் சேதம் அடைந்து விட்டது. பாதிக்கப்பட்ட இத் தொழிலாளர் குடும்பங்களுக்கு மீண்டும் மண்பாண்டத் தொழில் துவங்குவதற்கு வேண்டிய உதவிகளை அரசு செய்து தர வேண்டுகிறோம்.
