Wednesday , December 19 2018
Home / District-News / கோவையில் இந்து முன்னணி மாபெரும் ரத யாத்திரை துவக்க விழா

கோவையில் இந்து முன்னணி மாபெரும் ரத யாத்திரை துவக்க விழா

 


கோவை காந்திபார்க் அருகில் முருகன் கோவிலில் முன்பு இந்து முன்னணி சார்பில் திருப்பூர் மாவட்டம் பொங்கலூரில் டிசம்பர் 23 தேதி முதல் 25-ந் தேதி வரை நடத்தும் சோடஷ மகாலட்சுமி மகாயாகத்திற்கு தேவையான 1- லட்சம் செங்கல் கற்கலை பொதுமக்களிடமே சேகரிக்கும் பொருட்டு ரத யாத்திரை துவக்க விழா நடைபெற்றது.

இவ்விழா
இந்து முன்னணி மாநில தலைவர் காடேஸ்வரா.சி.சுப்பிரமணியன் தலைமையில்,
இவ்விழாவிற்கு வருகை தந்த நிறுவன அமைப்பாளர், இந்து முன்னணி இராம.கோபாலன் ரத யாத்திரை துவக்க வைத்து சிறப்புரையாற்றினார்

இவ்விழாவில் தென்பாரத அமைப்பாளர் ஜெகதிஷ்கரந்த, மாநில அமைப்பாளர் பக்தன் ஜி, ஏ.எம்.ராஜகோபாலன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

முன்னதாக
கோவை காமாட்சி புரி ஆதினம் ஸ்ரீ சிவலிங்கேஸ்வர சுவாமி, ஸ்ரீ வாராஹி மணிகண்ட சுவாமி கோ பூஜை நடத்தினர்.

விழாவில் இந்து முன்னணியினர் ரதயாத்திரை விழாக்குழுவினர், விழா ஏற்பாட்டாளர்கள் மற்றும் பொதுமக்கள் திரளாக ரத யாத்திரையில் கலந்து கொண்டனர்.

குறிப்பு:- திருப்பூர் மாவட்டம் பொங்கலூரில் டிசம்பர் 23 தேதி முதல் 25-ந் தேதிகளில் கஜபூஜை 108 அஸ்வகுதிரைபூஜை,1008 கோ பூஜை, மீனாட்சி திருக்கல்யாணம், ஆண்டாள் திருக்கல்யாணம் ஆகிய ஆன்மிக வைபவங்கள் நடைபெற உள்ளன.

இந்த மூன்று நாள் பெருவிழாவின் முத்தாய்ப்பாக மகாலட்சுமி 16 அம்சங்கள் மற்றும் மகாலட்சுமி மகாவிஷ்ணுக்காக சோடஷ மகாலட்சுமி மகாயாகம் தொடர்ந்து நடைபெறும்.

இதற்கு 360 அடி நீளம் 60 அடி அகலம் 4 அடி உயரத்தில் பிரமாண்டமான 17 ஹோம குண்டங்கள்

வரும் டிசம்பர் 23 ,24, 25,
தேதிகளில் திருப்பூர் மாவட்டம்
பொங்கலூரில் இந்து முன்னணி
சார்பில் நடைபெற உள்ள
3 நாள் ஆன்மிக மாநாடு
விளக்க ரதயாத்திரை
இதனை தொடர்ந்து நான்கு ரதங்கலும் கோவை, திருப்பூர், ஈரோடு, நீலகிரி ஆகிய மாவட்டங்களுக்கு மகாயாக பிரசாரம் மேற்கொள்ளவுள்ளது அதுசமயம் மஹாயாக வேள்விகுண்டம் அமைத்திட 1.5 லட்சம் செற்கற்கலும் யாகத்திர்க்கு சுத்தமான பசு நெய்யையும் வரக்கூடிய ரதத்தில் பக்தர்கள் வழங்கிடலாம்.

ஆன்மிக வைபவத்தில் குடும்பத்தோடு கலந்து கொண்டு மஹாலக்ஷ்மியின் பரிபூர்ண அருள் பெறுபடி இந்து முன்னணியினர் அழைக்கின்றனர்.

கோவையிலிருந்து செய்தியாளர்
ருக்கிவாணி
Expressnews.asia
[email protected]

About Admin

Check Also

1ST EDITION OF ‘TASK MASTER’ – THE ULTIMATE REALITY GAME SHOW

Chennai, 2018: Task Master – the very first reality game show for the people in …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.