துர்கா பூஜையை கோவை யூபி பீபுள் வெல்ஃபேர் அசோசியேஷன் கமிட்டி சிறப்பாக நடத்தியது. இது தேவி துர்கா தேவியின் உருவச்சிலை மூன்றுக்கும் மேற்பட்ட வாகனங்களில் கொண்டு வந்து ஊர்வலம் சென்றனர்.
இந்த ஊர்வலமானது கோவை சிவானந்தா காலனியில் இருந்து காந்தி பார்க் வழியாக சென்று முத்தன் குளத்தை அடைந்தது. சுமார் ஆயிரத்திற்கும் மேற்பட்ட பக்தர்கள் இரு சக்கர வாகனங்களிலும் கார்களிலும் துர்கா தேவி வாகனத்தை பின்தொடர்ந்து வழிபட்டு சென்றனர்.
இதில் பக்தர்கள் துர்காதேவி வணங்கியபடி கோஷமிட்டு ஊர்வலத்தில் கலந்து கொண்டனர்.
குளத்தை அடைந்தவுடன் பக்தர்கள் துர்கா தேவியின் உருவச்சிலையை குலத்தில் கலைத்தனர்.
இதில் பக்தர்கள் மிகுந்த உற்சாகத்துடனும் ஆர்வத்துடனும் தேவியை வழிபட்டு ஆடிப்பாடி கொண்டாடினர்.
கோயம்புத்தூரில் எந்தவித போக்குவரத்துக்கு இடையூறு இன்றி சிறப்பான முறையில் ஊர்வலத்தை யூபி வெல்பேர் சர்வீஸ் கமிட்டி நடத்தியது.
விழாவில் யூபி வெல்பர் சர்வீஸ் கமிட்டி சார்பாக ஆஷிஷ் ஷர்மா, வினோத்குமார் ,வீரா, முன்னா ,திவாரி, வினோத் , சந்தோஷ் ராம்விலாஸ் ஆகியோர் கலந்து கொண்டனர்.
கோவைலிருந்து செய்தியாளர்
#ருக்கிவாணி
Expressnews.asia
[email protected]
[email protected]