Tuesday , January 21 2020
Home / District-News / ஐந்தாவது உலகத் தமிழர் பொருளாதார மாநாட்டை புதுவை முதல்வர் நாராயணசாமி தொடங்கி வைத்தார்.

ஐந்தாவது உலகத் தமிழர் பொருளாதார மாநாட்டை புதுவை முதல்வர் நாராயணசாமி தொடங்கி வைத்தார்.

ஐந்தாவது உலகத் தமிழர் பொருளாதார மாநாட்டை புதுவை முதல்வர் நாராயணசாமி தொடங்கி வைத்தார்.

கனடா,ஆஸ்திரேலியா, மொரிசியஸ்,பிரான்ஸ்,கயானா உள்ளிட்ட பல்வேறு நாட்டு தலைவர்கள் கலந்து கொள்ளும் உலகத் தமிழர் பொருளாதார மாநாடு 3 நாட்களாக நடைபெறுகிறது.புதுவையில் நேற்று தொடங்கிய மாநாட்டில் முதல்வர் நாராயணசாமி சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு கயானா நாட்டு பிரதமர் மோசஸ் வீராசாமிக்கு சால்வை அணிவித்து கவுரவித்தார்.மாநாட்டில் பேசிய கயானா பிரதமர்,கயானாவில் மிகச்சிறிய அளவில் தான் தமிழர்கள் உள்ளனர்.ஆனால் அங்கு 6 கட்சிகளுடன் இணைந்து தமிழர்கள் ஆட்சியை கைப்பற்றி முதல்முறையாக ஒரு தமிழனாக தாம் பொறுப்பேற்று உள்ளதாக தெரிவித்தார்.அங்கு இயற்கை எரிவாயு அதிகளவில் உள்ளதாகவும் அதை பயன்படுத்தும் தொழில்நுட்பம் பெரிய அளவில் தங்களிடம் இல்லையென்றும் கூறினார்.எனவே இத்தகைய பொருளாதார மாநாட்டின் மூலம் பல நாட்டு முதலீடுகள் தமிழகத்திற்கு வந்து சேரும் என்று நம்பிக்கை தெரிவித்தார்.
பின்னர் பேசிய மாநாட்டின் துணைத்தலைவர் பிரசிடெண்ட் அபுபக்கர்,கடந்தமுறை நடந்த பொருளாதார மாநாட்டின் மூலம் 1400 கோடி தமிழகத்தில் முதலீடு செய்யப்பட்டதாக கூறினார்.இம்மாநாட்டின் மூலம் 2 ஆயிரத்து 300 கோடி வந்து சேரும் என்றார்.மேலும் புதுவை விமானநிலையத்தை சர்வதேச விமானநிலையலமாக மாற்ற மத்திய அரசிடம் கோரிக்கை வைக்க உள்ளதாகவும் தெரிவித்தார்.
மூன்று நாட்கள் நடைபெறும் மாநாட்டில் கலைநிகழ்ச்சிகள்,கருத்தரங்கம்,விவாதங்கள் நடைபெறுகிறது.

About Admin

Check Also

Marghazi Bird Utsav 2019-2020 organized @ HCL Campus, Sholinganallur

Marghazi Bird Utsav 2019-2020 ,an immersive, guided bird-watching festival was organized at HCL Campus, Sholinganallur,  …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.